Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் 32, 33வது யூனிகார்ன் நிறுவனங்கள் ஆன MobiKwik மற்றும் CarDekho!

ஐபிஓ வெளியீட்டின் காரணமாக நிகழ்ந்த மாற்றங்கள்!

இந்தியாவின் 32, 33வது யூனிகார்ன் நிறுவனங்கள் ஆன MobiKwik மற்றும் CarDekho!

Thursday October 14, 2021 , 2 min Read

ஆன்லைன் பேமெண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனமான ’மொபிக்விக்’ (MobiKwik) இந்த ஆண்டு இந்தியாவின் 32வது யூனிகார்னாக மாறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரூ.1,900 கோடி மதிப்பிலான அதன் ஐபிஓ விற்பனை காரணமாக இந்த மதிப்பை எட்டியுள்ளது.


பிளாக்ஸ்டோன் இந்தியாவின் முன்னாள் தலைவர் மேத்யூ சிரியாக் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். இது இப்போது இரட்டிப்பாகிவிட்டது. MobiKwik ஊழியர்கள் இரண்டாம் நிலை விற்பனையில் தங்கள் ஊழியர் பங்கு உரிமைத் திட்டத்தை (ESOP) பயன்படுத்தினர். இதன்காரணமாக, அந்த நிறுவனத்தின் ஐபிஓ குறைந்தது 10 கோடி (1.3 மில்லியன் டாலர்) நிகர மதிப்புடன் ஊழியர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.


MobiKwik தனது ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நிறுவனம் தனது சீரிஸ் ஜி (Series G) சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட அபுதாபி முதலீட்டு ஆணையத்திலிருந்து (ஏடிஐஏ) ரூ 149 கோடியை ($ 20.4 மில்லியன்) திரட்டியது.

MobiKwik

இதன்பிறகான மதிப்பு சுமார் $734 மில்லியன் (ரூ. 5,360 கோடி) என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2009ல் நிறுவப்பட்ட MobiKwik, மொபைல் wallets, Buy Now Pay After (BNPL) போன்ற பணத் தீர்வு வசதிகளை வழங்கி வருகிறது.


இந்தியாவின் 33வது யூனிகார்ன்!


புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான ஆன்லைன் போர்ட்டல் நிறுவனமான CarDekho இந்தியாவின் 33வது யூனிகார்ன் நிறுவனமாக மாறியுள்ளது. சமீபத்தில் CarDekho நிதி திரட்டலில் ஈடுபட்டது. நிதி திரட்டலின் ஒரு பகுதியாக சுமார் $1.2 பில்லியன் மதிப்பீட்டில் 250 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன்களின் சமீபத்திய பட்டியலில் நுழைந்தது.

cardekho

ஆன்லைன் கார் வாங்கும் போர்ட்டல்களில் முதலீட்டாளர் ஆர்வம் கணிசமாக அதிகரித்த நேரத்தில் CarDekho-வின் நிதி திரட்டல் நடந்துள்ளது. கடந்த மாதம் CarDekho நிறுவனத்தின் போட்டியாளரும் இந்தியாவின் மற்றொரு முன்னணி ஆன்லைன் கார் போர்ட்டல் நிறுவனமான Cars24 450 மில்லியன் மதிப்பில் நிதியுதவி திரட்டியது.


இந்த முதலீடு Cars24 இன் மதிப்பீட்டை கடந்த ஆண்டு நவம்பரில் $1 பில்லியனில் இருந்து கிட்டத்தட்ட $1.84 பில்லியனாக இரட்டிப்பாக்கியது. சாப்ட்பேங்க் விஷன் ஃபண்ட் 2 மற்றும் டிஎஸ்டி குளோபல் ஆகியவை இந்த முதலீட்டுக்கு வழிவகுத்தன.


தகவல் உதவி: பிடிஐ | தமிழில்: மலையரசு