Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘வாழை பட்டையில் கைப்பை; கார்க் நகைகள்’ - பேஷனில் மாற்றத்தை ஏற்படுத்தும் மும்பை பிராண்ட்!

மும்பையைச் சேர்ந்த பாரெட், இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு, வாழை பட்டை மற்றும் கார்க்கில் செய்யப்பட்ட பேஷன் பொருட்களை உருவாக்கி வருகிறது. சிறந்த வேகன் வாலெட்டிற்கான PETA விருது பெற்றுள்ளது.

‘வாழை பட்டையில் கைப்பை; கார்க் நகைகள்’ - பேஷனில் மாற்றத்தை ஏற்படுத்தும் மும்பை பிராண்ட்!

Wednesday November 08, 2023 , 4 min Read

நீடித்த வளர்ச்சி சார்ந்த வாய்ப்புகளுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், பேஷன் உலகிலும் சுற்றுச்சூழல் நட்பான மாற்றுகளை நோக்கி ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இருப்பினும், ஒரு கருத்து பரவலாக இருக்கிறது- வழக்கமான வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது இந்த வாய்ப்புகள் ஸ்டைல் மற்றும் அணுகல் தன்மையில் பின் தங்கியுள்ளன என்பது தான் அந்த கருத்து. பேஷன் துணைப்பொருட்களில் இது மிகவும் உண்மையாக இருக்கிறது. இங்கு நீடித்த வளர்ச்சி பிராண்ட்கள் இரண்டாம் தேர்வாகவே கருதப்படுகின்றன.

இந்த பின்னணியில், பேஷன் உலகில மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட வேகன் மற்றும் நீடித்த வளர்ச்சி பிராண்டாக ஃபாரெட் (FOReT® Sustainable Fashion) அமைகிறது. 2019ல் சுப்ரியா ஸ்ரீசத் சத்தம் வழக்கமான பொருட்களுக்கு மாற்றாக மட்டும் அல்லாமல், வேகமான பேஷன் பிராண்ட்களின் தோற்றத்தை மாற்றும் நோக்கத்துடனும் இந்த நிறுவனத்தை துவக்கினார். .

பேஷன்

சுற்றுச்சூழல் நட்பான மற்றும் வேகன் நட்பான இயற்கை இழைகள் கொண்ட பொருட்களை ஃபோரெட் முன்னிறுத்துகிறது. ஒரு சில மையங்களுடன் (SKU) துவங்கிய இந்த மும்பை பிராண்ட் தனது பொருட்களை 200க்கும் மேற்பட்ட மையங்களுக்கு விரிவாக்கியுள்ளது. கார்க் கைப்பைகளுடன் துவங்கிய பிராண்ட் இப்போது வாலெட்கள், டோடே பேக், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான நகைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

Foret நகைகள்

அண்மையில் ஃபாரெட்; வாழைப் பட்டையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய கைப்பைகள் கலெக்‌ஷனை அறிமுகம் செய்தது. கார்க் மற்றும் வாழைப் பட்டைகளை முதன்மை மூலப்பொருட்களாக நிறுவனம் பயன்படுத்துகிறது.

“கடந்த ஆண்டு சோதனைத் திட்டத்தை மேற்கொண்டு பார்த்தோம். சந்தையில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியால் முழு அளவிலான வகைகளை அறிமுகம் செய்ய உற்சாகம் பெற்றோம்,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் சுப்ரியா ஸ்ரீசத் கூறினார்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்திய பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண் கைவினைக் கலைஞர்களுடன் இந்த பிராண்ட் இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், ஐரோப்பியாவிலும் 50 கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த பிராண்ட்கள் சில பேஷன் பத்திரிகைகள் கவனத்தை ஈர்த்து, பாலிவுட் பிரபலங்கள் விக்கி கவுசிக், கார்த்திக் ஆர்யன், சித்தார்த் மல்கோத்ரா போன்றோரால் அணியப்பட்டுள்ளன.

துவக்கம்

மார்க்கெட்டிங்கில் எம்பிஏ வைத்திருக்கும் பொறியாளரான சுப்ரியா ஸ்ரீசத் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மொபைல் மார்க்கெட்டிங்கில் பத்தாண்டுகளுக்கு மேல் 2016 வரை பணியாற்றினார். இந்த தொழில்முறை வெற்றியை மீறி, கலை மற்றும் கைவினைப் பொருட்களில் அவருக்கு ஆர்வம் இருந்தது. இந்த பிரிவில் அவர் ஏதேனும் செய்ய விரும்பினார். அவரது குடும்பத்திற்கு ஜவுளித் துறையில் நெருக்கமான தொடர்பு இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

மேலும், தனது தொழில்முறை பயணத்தில் அவர் பேஷன் துணை பொருட்கள் சந்தையில் இடைவெளி இருப்பதையும் கவனித்தார். ஆடைகள், உணவு மற்றும் அழகு சாதன பொருட்களில் நீடித்த மாற்று வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், பேஷன் துறையில், குறிப்பாக துணை பொருட்களில் அதிக மாற்று இல்லை என்பதை உணர்ந்தார்.

வாடிக்கையாளர்கள் வழக்கமான தோல் பைகள் அல்லது வேகன் தோல் பைகளை பயன்படுத்தும் வாய்ப்பை கவனித்தாலும், இதில் உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளையும்

உணர்ந்தார்.

பேஷன்
“இந்த இடைவெளி என் ஆர்வத்தைத் தூண்டி, துணைப் பொருட்களாக பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் மூலப்பொருட்களை நாடத்துவங்கினேன்,” என்கிறார் சுப்ரியா ஸ்ரீசத்.

இதனையடுத்து, 2019ல் ரூ.1 லட்சம் முதலீட்டில் Foret-ஐ துவக்கினார்.

“வாடிக்கையாளர்கள் எதை விரும்புகின்றனர் என்பதை மாற்றுவது அல்லது அவர்கள் தேர்வுக்கு பொறுப்பேற்க வைப்பது சாத்தியம் இல்லை. முக்கியம் என்னவெனில், மக்களின் வாழ்க்கையில் பொருந்தி, எளிதாக மாற வழி செய்யும் வகையில் பொருட்களை வடிவமைப்பது தான்,” என்கிறார்.

சரியான மூலப்பொருட்கள்

நிலபரப்பு கலைஞர் எனும் தனது பின்னணி அனுபவித்தின் அடிப்படையில் ஒரு கலை நோக்கம் கொண்டிருந்ததோடு, இயற்கையை பிரதிபலிக்கும் பொருட்களை உருவாக்க விரும்பினார். இருப்பினும், சரியான மூலப்பொருட்களை தேர்வு செய்வது சவாலாக இருந்தது.

“கார்க் மற்றும் வாழைப்பழத் தோளை எதிர்கொண்ட போது என் நோக்கத்திற்கு பொருத்தமாக இருந்தன. இவை சூரியன் அல்லது மழையின் தடத்தை கொண்டுள்ளன,” என்கிறார்.

ஐரோப்பாவின் மத்திய கடல் பகுதியில் இருந்து தருவிக்கப்படும் கார்க் கொண்டு நகைகள் செய்யப்படுகின்றன. இயற்கையாக தண்ணீர் மற்றும் மாசு எதிர்ப்பு கொண்டிருப்பதால் நீடித்த தன்மை கொண்டுள்ளன.

“ஓக் மரங்கள் 9 ஆண்டுகளுக்கு கைகளால் கையாளப்படுவதால், அவை புத்துயிர் பெற்று பல ஆண்டுகள் வளர்கின்றன. இதன் காரணமாக இந்த மரங்கள் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. விலங்கு தோலுக்கு ’கார்க்’ தான் சரியான மாற்று என்கிறார் சுப்ரியா ஸ்ரீசத். ஃபாரெட் நகைகள், கார்க் மற்றும் போர்சலின், 18 கேரட் தங்கம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு தயாராகின்றன.”

வாழைமரத்தின் மட்டை தான் முக்கிய மூலப்பொருளாகிறது. வாழை மரத்தில் இருந்து இவை பெறப்படுகின்றன. பைகளின் உள்ளே லினன் பயன்படுத்தப்படுகிறது. இது தயாரிப்பு நிலையில் கைவினைக் கலைஞர்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

கைப்பைகள் ரூ.4,500 முதல் ரூ.14,000 விலை கொண்டுள்ளன. நகைகள் ரூ.800 முதல் ரூ.17,000 விலை கொண்டுள்ளன. நுட்பமான தயாரிப்பு முறை காரணமாக விலை அதிகமாக இருப்பதாக கூறுகிறார். மூலப்பொருட்கள் பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட முடியாததும் ஒரு காரணம்.

“ஒவ்வொரு பையும் தனியாக இருக்கிறது. நெசவு நுட்பம் மற்றும் அமைப்புகளை பிரதிபலிக்கின்றன. வாழை மட்டைகளை சேகரித்து அவற்றை இழைகளாக மாற்றுவது உள்ளிட்ட செயல்முறையில் உள்ளூர் கைவினை கலைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்,” என்கிறார் சுப்ரியா ஸ்ரீசத்.

நிறுவனம் 2022 நிதியாண்டில் 100 சதவீதம் வருவாய் வளர்ச்சி பெற்ற நிலையில் 2023 நிதியாண்டில் 20 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது. 24 நிதியாண்டில் 200 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. எனினும், நிறுவனர் மேலும் வருவாய் விவரங்களை பகிர மறுத்துவிட்டார்.

தற்போது இந்த குழுவில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து பைகளும் நிறுவனரால் வடிவமைகப்படுகின்றன. ஃபாரெட் பரவலாக கவனத்தை ஈர்த்து வாக், காஸ்மோபாலிடன் உள்ளிட்ட இதழ்களில் இடம்பெற்றுள்ளது. எச் & எம், ஜாரா போன்ற பிராண்ட்களுடன் போட்டியிடுகிறது.

பேஷன்

2022ல் சிறந்த வேகன் வாலெட்டிற்கான ’பெடா வேகன் பேஷன் விருது’ வென்றுள்ளது. ஐரோப்பிய தொழில்நுட்ப சாம்பரின் சர்வதேச பைனலிஸ்டாக தேர்வானது. ஃபாரெட் தனது இணையதளம் மற்றும் அமலா எர்த் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்கிறது. ஆப்லைன் விற்பனைக்கு இதே குறிக்கோள் கொண்ட பிராண்ட்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பிராண்ட் பெயர்களை நிறுவனர் பகிர்ந்து கொள்ளவில்லை.

எதிர்காலத் திட்டம்

எதிர்காலத்தில் விலை நோக்கில் பரவலாக சென்றடையக்கூடிய பொருட்களுக்கான மூலப்பொருட்களை பிராண்ட் நாடுகிறது. பிரிமியம் பிரிவில் செயல்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் நட்பான தன்மையை விட்டுக்கொடுக்காமல் புதிய பொருட்களைக் கொண்டு புதுமையில் ஈடுபட விரும்புகிறது. தற்போது மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, அகமதாபாத், ஆகிய நகரங்களில் அதிக விற்பனை கண்டு வருகிறது.

“சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நல்ல வரவேற்பு இருப்பதால் சர்வதேச பிராண்ட்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளோம். சர்வதேச சந்தைக்கான வாய்ப்புகளை பொருட்கள் கொண்டுள்ளன,” என்கிறார். மேலும், சில்லறை விற்பனை நிலையங்களுடனும் இணைந்து செயல்பட உள்ளது.

“வரும் மாதங்களில் வாழை பட்டையில் செய்யப்பட்ட லேப்டாப் பை மற்றும் பல்வேறு துணைப்பொருட்கள் விரிவாக்கத்தில் ஈடுபட உள்ளோம்,” என்கிறார் சுப்ரியா ஸ்ரீசத்.

ஆங்கிலத்தில்: அனுபிரியா பாண்டே | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan