ஒற்றை பதிலில் நெகிழ்ந்த ஒட்டுமொத்த விண்வெளி உலகம்: நாசா நாயகன் 6 வயது 'ஆடம் கிங்'
தனது மனதிலிருந்த ஆசையை சிறுவன் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டான். இந்த விஷயம் நாசாவின் கவனத்துக்குச் சென்றுள்ளது.
ஆறுவயதுசிறுவன் அவன். விண்வெளியில் சேரவேண்டும் என்ற தனது கனவுகளை, புயலால் தூக்கி எறியப்படும் மரங்களைப் போல, தனது மனதிலிருந்த ஆசையை சிறுவன் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டான். இந்த விஷயம் நாசாவின் கவனத்துக்குச் சென்றுள்ளது.
வயதுக்குள் அடங்காத கனவுகளைக் கொண்டிருப்பவன் ஆடம் கிங். அயர்லாந்தைச் சேர்ந்த ஆறே வயதான சிறுவன். தி லேட் லேட் டாய் ஷோ (The Late Late Toy Show) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று கலந்துகொண்டு அசத்தியிருக்கிறான்.
புதிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை சோதிக்கவும், அவைகளைப் பற்றிய கருத்துக்களை பகிரவுவதற்காகவும் குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம்.
மற்ற குழந்தைகளைப்போல் அல்லாமல், ஆடம் கிங் நிகழ்ச்சியின் மறக்கமுடியாத நட்சத்திரமாக ஒளிரந்திருக்கிறார். பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார். நீங்கள் வளர்ந்து என்னவாக விரும்புகிறீர்கள் என்று ஆடம் கிங்கிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரயன் டூப்ரிடி கேட்டார். அதற்கு சிறுவன் ஆடம்,
"நாசாவில் கேப்காம் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்," என பதிலளித்திருக்கிறான்.
சரி கேப்காம் என்றால் என்ன? கேப்காம் என்பது பூமியிலிருக்கும் தரைக்கட்டுபாட்டு அறைக்கும், விண்கலத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தித் தரும் முக்கியமான பணி.
விண்வெளி வீரராக விரும்பி இருக்கிறீர்களா என்று அடுத்த கேள்வி கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஆடம் சொன்ன பதில்தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இப்படி சொன்னார் ஆடம்,
“உண்மையில் என்னால் விண்வெளி வீரனாக ஆக முடியாது. காரணம் எனக்கு பிரிட்டில் போன் (Brittle Bone Disease) என்ற நோய் குறைபாடு இருக்கிறது. (பிரிட்டில் போன் என்பது, எளிதில் உடையக்கூடிய எலும்புகள், முறையாக உருவாகாத எலும்புகளால் ஏற்படும் பாதிப்பு) இதனால் நான் தரையிலிருந்தே வேலை பார்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.”
இது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் காணொலி இணையத்தில் செம வைரல் ஆனது! பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் நாசா வரைச் சென்றுள்ளது இந்த வீடியோ. நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆடம்.
”ஆடமின் இளகிய மனம் மற்றும் உத்வேகம் எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. இங்கே நாசாவில் எல்லோருக்கும் இடம் உண்டு. ஆடம் எப்போது தயாராகிறாரோ அப்போது நாங்கள் அவருக்காக இங்கே இருப்போம்,” என நாசா ட்வீட் செய்துள்ளது.
“ஆடம், நாங்கள் உன்னால் ஊக்கமடைந்தோம். உன்னை சந்திக்கும் அந்த நாளுக்காக காத்திருக்க முடியாது. விரைவில் உன்னை ஜான்சன் விண்வெளி நிலையத்தில் சந்திப்பேன் என நம்புகிறேன்,” இவ்வாறு ட்வீர் செய்திருக்கிறார் அமெரிக்க விண்வெளி வீரர் ஷான் கிம்ப்ரோ.
தகவல் உதவி - பிபிசி