Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டல்கள்!

கொரோனா தொற்று ஏற்பட்டு லேசான அறிகுறி தென்படுபவர்கள் அல்லது அறிகுறிகளற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள 2020-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து தற்போது புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா நோயாளிகளுக்கான புதிய வழிகாட்டல்கள்!

Friday April 30, 2021 , 4 min Read

கொரோனா தொற்று ஏற்பட்டு லேசான அறிகுறி தென்படுபவர்கள் அல்லது அறிகுறிகளற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள 2020-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து தற்போது புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த வழிகாட்டுதலின்படி மருத்துவ ரீதியாக லேசான அறிகுறிகள் இருப்பதாகவோ அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களாகவோ கண்டறியப்படுபவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.


ஆய்வகங்களில் தொற்று உறுதிசெய்யப்பட்டு அறிகுறிகள் ஏதும் இல்லாமல், 94%-க்கும் மேல் ஆக்சிஜன் செறிவு உள்ள நோயாளிகள் அறிகுறிகளற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.


மேல் சுவாசப்பாதை தொற்று அறிகுறி (அல்லது/மற்றும் காய்ச்சல்) காணப்பட்டு, மூச்சுத்திணறல் இல்லாமல், ஆக்சிஜன் செறிவு 94%-க்கும் மேல் இருப்பவர்கள் லேசான அறிகுறி இருப்பவர்களாகக் கருதப்படுவார்கள்.

quarantine

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளத் தகுதியுடையவர்கள்:

  • மருத்துவ ரீதியாக நோயாளிக்கு லேசான அறிகுறி இருப்பதையோ அறிகுறிகள் ஏதும் இல்லை என்றோ மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தவேண்டும்.


  • நோயாளி வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவும் அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் தனிமைப்படுத்திக்கொள்ளவும் தேவையான வசதி இருக்கவேண்டும்.


  • நோயாளியை 24X7 கவனித்துக்கொள்ள பராமரிப்பாளர் இருக்கவேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் சமயத்தில் பராமரிப்பாளருக்கும் மருத்துவமனைக்கும் இடையே தொடர்பு இருப்பதை உறுதிசெய்யவேண்டியது அவசியம்.


  • நோயாளி 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவராகவோ ஹைப்பர்டென்ஷன், நீரிழிவு நோய், இதய நோய், தீவிர நுரையீரல்/கல்லீரல்/சிறுநீரக நோய், பெருமூளை இரத்த குழாய் பாதிப்பு போன்ற இணை நோய் இருப்பவராகவோ இருக்கும்பட்சத்தில் மருத்துவ அதிகாரியின் முறையான ஆய்விற்குப் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்.


  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகள் (ஹெச்ஐவி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் போன்றோர்) வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. மருத்துவ அதிகாரி முறையாக ஆய்வு செய்த பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிப்படுவார்கள்.


  • வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுபவர்களின் பராமரிப்பாளரும் தொடர்பில் இருப்பவர்களும் மருத்துவ அதிகாரியின் ஆலோசனைப்படி ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ப்ரோஃபிலாக்சிஸ் எடுத்துக்கொள்ளவேண்டும்.


  • இதுதவிர http://www.mohfw.gov.in/Guidelinesforhomequarantine.pdf என்கிற தளத்தில் காணப்படும் வழிகாட்டல்களின்படி மற்றவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

நோயாளிகளுக்கான அறிவுறுத்தல்கள்

  • நோயாளி தனியறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் ஹைப்பர்டென்ஷன், கார்டியோவாஸ்குலர் நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோயிருப்பவர்களிடமிருந்து விலகி தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.


  • நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் நோயாளி இருக்கவேண்டும். காற்று வரும் வகையில் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொள்ளவேண்டும்.


  • நோயாளி எப்போதும் மூன்றடுக்குகள் கொண்ட முகக்கவசம் அணியவேண்டும். 8 மணி நேரத்திற்குப் பிறகோ அல்லது முகக்கவசம் ஈரமாகிவிட்டாலோ கிழிந்திருந்தாலோ அதைத் தூக்கியெறியவேண்டும். பராமரிப்பாளர் நோயாளியின் அறைக்கு செல்லும்போது நோயாளியும் பராமரிப்பாளரும் என்95 மாஸ்க் அணியலாம்.


  • முகக்கவசங்களை 1% சோடியம் ஹைப்போக்ளோரைட் கொண்டு கிருமிநீக்கம் செய்யவேண்டும்.


  • நோயாளி நன்கு ஓய்வெடுக்கவேண்டும், திரவ உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொண்டு உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


  • சுவாசப் பாதையில் தொற்று ஏற்படாமல் முறையாகப் பராமரித்துக்கொள்ளவேண்டும்.


  • குறைந்தபட்சம் 40 நொடிகள் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டோ அல்லது ஆல்கஹால் இருக்கும் சானிடைசர் கொண்டோ கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும்.


  • நோயாளி பயன்படுத்தும் பொருட்களை வீட்டில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.


  • அறையில் அடிக்கடி கைகள் தொடும் கதவின் கைப்பிடி போன்ற இடங்களை 1% சோடியம் ஹைப்போக்ளோரைட் கொண்டு கிருமிநீக்கம் செய்யவேண்டும்.


  • பல்ஸ் ஆக்சிமீட்டர் கொண்டு ஆக்சிஜன் அளவை சுயபரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நோயாளி கீழ்கண்ட அறிகுறிகளைக் கண்காணித்து குறித்துக்கொள்ளவேண்டும்:

  • நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படுகின்றன, உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு மற்றும் SpO2% (பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் கண்காணிக்கவேண்டும்), எப்படி உணர்கிறார், சுவாசம் சீராக இருக்கிறதா உள்ளிட்ட அம்சங்களைக் கண்காணித்து குறித்துக்கொள்ளவேண்டும்.

பராமரிப்பாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்:

1. முகக்கவசம்

  • பராமரிப்பாளர் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும். நோயாளி இருக்கும் அதே அறையில் இருக்கும்போது என்95 முகக்கவசம் அணிந்துகொள்ளலாம்.
  • முகக்கவசத்தின் முன்பக்கத்தைத் தொடக்கூடாது.
  • முகக்கவசம் தும்மும்போதோ இருமும்போதோ ஈரமாகிவிட்டால் உடனே மாற்றிவிடவேண்டும்.
  • பயன்பாட்டிற்குப் பிறகு முகக்கவசங்களை அப்புறப்படுத்தவேண்டும். அவற்றை அப்புறப்படுத்திய பிறகு முறையாக கைகளை சுத்தப்படுத்தவேண்டும்.
  • முகம், மூக்கு அல்லது வாய் பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்துவிடவேண்டும்.

2. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்

  • நோயாளி அல்லது அவர் இருக்கும் இடங்களைத் தொட்ட பிறகு உடனடியாக கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
  • உணவு சமைப்பதற்கு முன்னரும் சமைத்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும் கைகள் அழுக்காக இருக்கும்போதும் கைகளை சுத்தமாகக் கழுவவேண்டியது அவசியம்.
  • 40 நொடிகள் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டோ அல்லது ஆல்கஹால் இருக்கும் சானிடைசர் கொண்டோ கைகளை சுத்தமாகக் கழுவவேண்டும்.
  • சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு டிஸ்போசபிள் பேப்பர் கொண்டு கைகளை உலரவைக்கலாம். அல்லது சுத்தமான காட்டன் துணி கொண்டு துடைக்கலாம்.
  • கையுறை அணிவதற்கு முன்பும் கழட்டிய பின்னரும் கைகள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
1

3. நோயாளியையோ நோயாளி இருக்கும் இடத்தையோ கையாளும்போது பின்பற்றப்படவேண்டியவை:

  • நோயாளியின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களை, குறிப்பாக வாய்வழி அல்லது சுவாசத்தின் மூலம் வெளியேறும் திரவங்கள் நேரடியாக பராமரிப்பாளர் மீது படக்கூடாது. எனவே நோயாளியைக் கையாளும்போது அப்புறப்படுத்தக்கூடிய கையுறை அணிந்துகொள்ளவேண்டும்.
  • பாத்திரங்கள், டவல் என நோயாளி பயன்படுத்திய பொருட்களில் கிருமிகள் இருக்கக்கூடும். இவற்றை நேரடியாகக் கையாள்வதைத் தவிர்த்துவிடவேண்டும்.
  • நோயாளிக்கு அவரது அறையிலேயே உணவைக் கொடுக்கவேண்டும். நோயாளி பயன்படுத்தியப் பாத்திரங்களைக் கையுறை அணிந்துகொண்டு சோப்பு/டிடெர்ஜெண்ட் கொண்டு சுத்தப்படுத்தவேண்டும். அதன் பிறகு பாத்திரங்களை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கையுறையைக் கழட்டிய பிறகோ அல்லது நோயாளி பயன்படுத்தியப் பொருட்களைக் கையாண்ட பிறகோ கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். நோயாளியின் அறையையோ அவர் பயன்படுத்திய துணிகளையோ சுத்தப்படுத்தும்போது மூன்றடுக்குகள் கொண்ட மெடிக்கல் முகக்கவசங்களையும் அப்புறப்படுத்தக்கூடிய கையுறைகளயும் அணியவேண்டும்.
  • கையுறைகளை அணியும் முன்பும் அகற்றிய பிறகும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

4. பயோமெடிக்கல் கழிவுகளை அப்புறப்படுத்தும் முறை:

  • வீட்டிற்குள் தொற்று மேலும் பரவாமல் இருக்கக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவேண்டியது அவசியம். http://cpcbenvis.nic.in/pdf/1595918059_mediaphoto2009.pdf வழிகாட்டுதல்படி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படவேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள லேசான அல்லது அறிகுறிகளற்ற நோயாளிகளுக்கான சிகிச்சை:

  • நோயாளி மருத்துவருடன் தொடர்பில் இருக்கவேண்டும்; ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவருக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
  • மருத்துவரின் ஆலோசனை பெற்று இணை நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் அதற்கான மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றவேண்டும்.
  • நோயாளிகள் தினமும் இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்து இரண்டு முறை ஆவிபிடிக்கவேண்டும்.
  • பாராசிடமால் 650 mg மாத்திரைகளை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு நான்கு முறை எடுத்துக்கொண்ட பின்னரும் காய்ச்சல் குணமாகவில்லை எனில் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். ஸ்டீராய்ட் அல்லாத ஆண்டி இன்ஃப்ளமேட்டரி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
  • Ivarmectin (200mg/kg ஒரு நாளைக்கு ஒரு முறை, வெறும் வயிற்றில்) 3-5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.
  • காய்ச்சல் மற்றும்/அல்லது சளி, இருமல் அறிகுறிகள் தென்பட்டு 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் Budesodine (800 mcg இரண்டு வேளை, 5-7 நாட்கள்) இன்ஹேல் செய்யலாம்.
  • ரெம்டெசிவிர் அல்லது இதர சிகிச்சைகள் மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே வழங்கப்படவேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை எக்காரணம் கொண்டு வீட்டில் வாங்கி வைக்கவோ போட்டுக்கொள்ளவே கூடாது.
  • வாய்வழியாக கொடுக்கப்படும் ஸ்டீராய்ட் மருந்துகள் லேசான நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. காய்ச்சல், மோசமான இருமல் போன்ற அறிகுறிகள் 7 நாட்களுக்கு மேலும் தொடர்ந்தால் குறைந்த டோஸ் ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்ள மருத்துவ ஆலோசனை பெறலாம்.
  • ஆக்சிஜன் சேச்சுரேஷன் குறைந்தாலோ மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆலோசனை பெறவேண்டும்.

எப்போது மருத்துவ உதவி பெறவேண்டும்?

நோயாளி / பராமரிப்பாளர் தொடர்ந்து தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்கவேண்டும். கீழ்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறவேண்டும்:

  • மூச்சு விடுவதில் சிரமம்
  • ஆக்சிஜன் சேச்சுரேஷன் (SpO2<94%) குறைவது
  • நெஞ்சில் வலி அல்லது அழுத்தம்
  • குழப்பமான மனநிலை

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதை எப்போது நிறுத்திக்கொள்ளலாம்?

  • அறிகுறிகள் தென்பட்ட நாளில் இருந்து  குறைந்தபட்சம் 10 நாட்கள் கடந்திருக்கவேண்டும்; மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கக்கூடாது; இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நோயாளிகள் தனிமைப்படுத்தலை நிறுத்திக்கொள்ளலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் முடிந்த பிறகு மீண்டும் பரிசோதனை செய்யவேண்டிய அவசியமில்லை.