'மணமாகாத ஜோடிகளுக்கு அறை இல்லை' - ஓயோ நிறுவனம் அதிரடி!
பயணம் மற்றும் ஓட்டல் முன்பதிவு சேவை நிறுவனம் ஓயோ உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில், திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அறை அளிப்பதில்லை எனும் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.
பயணம் மற்றும் ஓட்டல் முன்பதிவு சேவை நிறுவனம் ஓயோ உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில், திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அறை அளிப்பதில்லை, எனும் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஓயோ நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் படி,
ஓட்டல் அறை முன்பதிவு செய்யும் போது தம்பதிகள், மணமானதற்கான நிருபணத்தை ஓட்டல் அறை எடுக்கும் போது சமர்பிக்க வேண்டும்.
இந்த புதிய விதிகள் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் கருத்துகள் அடிப்படையில் மற்ற நகரங்களுக்கு இந்த விதிகள் விரிவாக்கப்படலாம், என நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விதிகள் தொடர்பாக நகரில் உள்ள ஓட்டல் பார்ட்னர்களுக்கு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சிவில் குழுக்களில் இருந்தும் தொடர்ச்சியாக வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மீரட் நகரில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.
மேலும், பல நகரங்களைச் சேர்ந்த குழுக்கள் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை கொடுப்பது தொடர்பாக கோரிக்கைகளை முன்வத்திருப்பதாகவும் தெரிகிறது.
ஓயோ நிறுவனம், குடும்பத்தினர், மாணவர்கள், வர்த்தக மற்றும் ஆன்மிக பயணிகளுக்கு பாதுகாப்பான அனுபவம் அளிக்கும் நிறுவனம் எனும் நம்பிக்கையை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான விருந்தோம்பல் செயல்முறைகள் உள்ளிட்டவை தொடர்பாக நிறுவனம் காவல்துறையுடன் இணைந்து பயிலறங்கு போன்வற்றையும் நடத்தி வருகிறது. முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓட்டல்களை தனது பட்டியலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.
Edited by Induja Raghunathan