இந்தியாவைப் பற்றி 11 வயது பாகிஸ்தான் சிறுவனின் பதில்: ஒரு கியூட் வைரல் வீடியோ!
சிறுவனின் இதயப்பூர்வமான எதிர்வினை உங்களை சிரிக்க வைக்கும்!
கார்ல் ராக். டிராவல் ப்ளாக்ஸ்களுக்கு பிரபலமான (Travel Blogs) யூடியூப்பர். இவர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பகுதிகளில் பல்வேறு வீடியோக்களை எடுத்து யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் பாகிஸ்தானில் உள்ளார்.
பிரபலமான யூடியூபரான அவர், தனது ரசிகர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்களை சந்தித்து வருகிறார். அதற்கு, ’பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்த இந்தியா’ என்று தலைப்பிட்டுள்ளார். அப்படியாக நிகழ்ந்த சந்திப்பு தான் 11 வயதான பாகிஸ்தான் இளைஞருடனான நெகிழ்ச்சியான சந்திப்பு.
கார்ல் ராக், சிறுவன் ஜகியாஸை லாகூரில் உள்ள ஒரு சாலையோரம் உள்ள கடை ஒன்றில் சந்தித்து பேசினார். அப்போதுதான் யூடியூபர் ராக் சிறுவனுடன் பாகிஸ்தான் உணவு மற்றும் கலாச்சாரம் குறித்து பேசினார்.

அவர்கள் இந்தியாவைப் பற்றியும் பேசிக்கொண்டனர். பாகிஸ்தானில் இருக்கும் ராக், இந்திய பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அப்போது சிறுவனிடம், இந்தியா குறித்து கேட்டபோது,
“எனக்கு அங்கே சில நண்பர்கள் இருக்கின்றனர்’ என்று அவன் பதிலளித்தான். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தனது தந்தை இந்தியா சென்றதாகவும், அதற்கு முன் பல்வேறு சமயங்களில் அவர், இந்தியா சென்று வந்துள்ளதாகவும் சிறுவன் ராக்-கிடம் தெரிவித்துள்ளார்.
’நீ இந்தியாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஜாக்கிடம் யூடியூபர் கேட்க,
“எல்லா இடத்திலும், நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் யாரைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது,” என்றான்.”ஆம் உண்மை தான்,” என்று ராக் பதிலளித்தார்.
பாகிஸ்தானில் இருந்த காலத்தில், இந்தியாவுக்கு விஜயம் செய்த பலரை அவர் சந்தித்ததாகவும் ராக் குறிப்பிட்டுள்ளார். தனக்குத் தெரிந்த பல இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தருவதில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தான் கார்ல் ராக் யூடியூபரின் சப்ஸ்கிரைபரான அந்த பாகிஸ்தான் சிறுவன்.
கார்ல் ராக் நியூசிலாந்தைச் சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டில் முதன் முதலில் இந்தியாவுக்கு அவர் வருகை தந்தார். அப்போது, அவருக்கு இந்தியாவின் கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனது. அதன்காரணமாக இந்தியப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து புதுதில்லியில் குடியேறினார்.
கடந்த சில ஆண்டுகளாக யூடியூப்பில் தனது பயணங்களை வீடியோ எடுத்து ஆவணப்படுத்தத் தொடங்கினார். அப்போது இந்தியாவில் அவர் மேற்கொண்ட பயணங்கள், அதன்மூலம் கிடைத்த அனுபவங்கள் அவரை ஈர்த்தது. அவர் பதிவேற்றியுள்ள வீடியோக்கள் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இருக்கிறது.

