Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கொய்யா சாகுபடி மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவது எப்படி?

ஒரு ஹெக்டேர் நிலத்தில் கொய்யா சாகுபடி செய்தால் ஆண்டிற்கு 25 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்து 15 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டலாம்.

கொய்யா சாகுபடி மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவது எப்படி?

Monday January 30, 2023 , 2 min Read

கொய்யாவை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். கொய்யா அதிக சத்துக்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் சி, லைகோபீன், ஆண்டிஆக்சிடென்ட் போன்றவை நிறைந்துள்ளன.

விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் பழ வகைகளை விளைவிப்பதில் அதிக கவனம் செலுத்துவதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக கொய்யா சாகுபடியைத் தேர்வு செய்தால் நல்ல லாபம் ஈட்டமுடியும் என்கின்றனர் விவசாயிகள்.

ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால், ஆண்டிற்கு 25 லட்ச ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். இதில் 15 லட்ச ரூபாய் உங்கள் கையில் லாபமாக நிற்கும். தரமான விதைகளைத் தேர்வு செய்தால் அதிக மகசூல் பார்க்கமுடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
guava

கொய்யா வகைகள்

இளஞ்சிவப்பு, வெள்ளை நிறம் என இரண்டு நிறங்களில் கொய்யா கிடைக்கின்றன.

அலகாபாத் சபேதா, சர்தார் கொயா, லக்னோ-49, லலித், அர்கா கிரண், அர்கா ரேஷ்மி என பல்வேறு கொய்யா வகைகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். வெள்ளை கொய்யா மட்டுமின்றி சிவப்பு கொய்யாவிற்கும் சந்தை தேவை இருப்பதால் அனைத்து வகைகளும் பயிரிடப்படுகின்றன.

விஎன்ஆர் வகை கொய்யாவைப் பயிரிட விரும்புபவர்கள் ஒரு செடியை 180 ரூபாய் கொடுத்து வாங்கலாம். நல்ல நர்சரியில் செடிகளை வாங்கிக்கொள்ளலாம். மாநில அளவில் செயல்படும் வேளாண் துறையைத் தொடர்புகொண்டு செடிகளை வாங்கிக்கொள்ளலாம்.

கொய்யா சாகுபடி

வெயில், மழை என எல்லா பருவகாலத்திலும் பயிரிட ஏற்றது கொய்யா. எந்த மாதமாக இருந்தாலும் சரி, சாகுபடியைத் தொடங்கிவிடலாம். இருப்பினும், மிதமான குளிர் பகுதியில் அதிக மகசூல் கிடைக்கும். ஒருமுறை பயிரிட்டால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை நல்ல விளைச்சல் கொடுக்கும்.

ஒரு வரிசையில் 8-8 அடி இடைவெளியில் கொய்யா செடிகளை நடலாம். ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையில் 12 அடி இடைவெளி இருப்பது நல்லது. அடர் நடவு முறையால் நல்ல லாபம் ஈட்டமுடியும். குறைந்த இடத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.

பயிர்களுக்கு சரியான சத்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். பூச்சிக்கொல்லிகள் தெளித்து முறையாக பாதுகாத்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.

இப்படி ஒரு ஹெக்டேர் நிலத்தில் சுமார் 1200 செடிகள் வரை நடலாம். சொட்டுநீர் பாசன முறையைப் பின்பற்றி தண்ணீரையும் சேமிக்கலாம். விஎன்ஆர் பிஹி வரை கொய்யா இரண்டு ஆண்டுகளிலேயே பழம் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் இது விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

Guavas

செலவும் லாபமும்

ஏற்கெனவே குறிப்பிட்டது போல், கொய்யா செடிகளைப் பயிரிட்ட 2 ஆண்டுகளில் பழங்கள் கொடுக்கத் தொடங்கிவிடும். எனவே இரண்டு ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவுகள் இருக்கும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிடுகிறீர்கள் என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு சுமார் 10 லட்ச ரூபாய் வரை செலவிடவேண்டியிருக்கும்.

ஒரு மரத்தில் சுமார் 20 கிலோ வரை கொய்யாப் பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரி சந்தை விலை ரூபாய் 50. சில்லறையாக விற்பனை செய்தார் கிலோவிற்கு 80-100 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு செடியில் 20 கிலோ என்றால் 1200 செடிகளில் 24 டன் வரை கொய்யாப் பழங்கள் கிடைக்கும். கிலோ 50 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யும்போது 25 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் ஆண்டிற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொண்டாலும் 15 லட்ச ரூபாய் லாபம் பார்க்கமுடியும்.