6 மாதங்களில் 13 லட்ச ரூபாய் வரை லாபம் கொடுக்கும் பீன்ஸ் சாகுபடி!

By YS TEAM TAMIL
January 24, 2023, Updated on : Tue Jan 24 2023 07:01:33 GMT+0000
6 மாதங்களில் 13 லட்ச ரூபாய் வரை லாபம் கொடுக்கும் பீன்ஸ் சாகுபடி!
பீன்ஸ் சாகுபடியில் தரமான விதைகளை முறையாக பயிரிட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்து நன்கு பராமரித்து வந்தால் 90-100 நாட்களில் அறுவடை செய்துவிடலாம்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொடி வகையைச் சேர்ந்த காய்கறிகளில் ஒன்று பீன்ஸ். பீன்ஸ் சாகுபடி செய்வதால் அதிக லாபம் ஈட்டமுடியும். அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.


மலைப்பிரதேசங்கள், சமவெளி என இரண்டு பகுதிகளிலும் வெவ்வேறு ரக பீன்ஸ் வளர்க்கப்படுகின்றன. ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டமுடிகிறது என்கின்றனர் விவசாயிகள்.

beans

பீன்ஸ் தேவை அதிகரித்துள்ளது. சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் பலர் பீன்ஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, முறையாக பயிரிட்டு, சொட்டு நீர் பாசனம் அமைத்து நன்கு பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கள் கிடைக்கும். 90-100 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது. அதாவது, பயிரிடும் நாளிலிருந்து குறைவான காலகட்டத்தில் அறுவடை கிடைத்துவிடும்.

பீன்ஸ் நன்மைகள்

இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் என பல்வேறு சத்துக்கள் பீன்ஸில் நிறைந்திருக்கின்றன. இதில் அதிகளவில் காணப்படும் நார்சத்து குடலின் உட்புற சுவர்களைப் பாதுகாக்கிறது. பீன்ஸ் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தானியங்களில் இருக்கும் க்ளூடனால் அலர்ஜி ஏற்படுபவர்கள்கூட பீன்ஸ் சாப்பிடலாம். தானியங்களில் கிடைக்கும் சத்துக்கள் பீன்ஸில் கிடைத்துவிடும். இப்படி ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியிருப்பதால் எப்போதும் சந்தை தேவை அதிகமரிக்கும் காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது பீன்ஸ்.

பீன்ஸ் பயிரிடும் முறை மற்றும் மகசூல்

வண்டல் மண்ணில் பீன்ஸ் சாகுபடி சிறப்பாக இருக்கும். நிலத்தை நன்கு உழுது தொழு உரத்தை இட்டு சமன்படுத்தவேண்டும். அதன் பிறகு, 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீட்டர் ஆழத்தில் நடவேண்டும். பயிரிட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அதிகம் முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும்போதே அறுவடை செய்துவிடுவது நல்லது. அதன் பிறகும் தொடர்ந்து அறுவடை செய்யமுடியும்.

ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால் சுமார் 40-45 டன் பீன்ஸ் அறுவடை செய்யலாம். கோடைக்காலத்தில் சற்றே விளைச்சல் குறைந்து 30 டன் வரை அறுவடை செய்யலாம்.

செலவும் லாபமும்

நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டுமானால் தரமான விதைகளைத் தேர்வு செய்வது முக்கியம். தரமான விதைகள் ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கின்றன. ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சுமார் 15 கிலோ வரை விதைகள் தேவைப்படும்.

beans farming


அதாவது, கிட்டத்தட்ட 45-50 ஆயிரம் ரூபாய் வரை விதைக்காக செலவிடவேண்டியிருக்கும். அதேசமயம், நிலத்தை உழுவது, நீர் பாசனம், பூச்சிக்கொல்லி, உரம், அறுவடை என மற்ற செலவுகளும் இருக்கும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் வரை செலவாகும்.

பீன்ஸ் சந்தை விலை 30-50 ரூபாய். சராசரியாக கிலோவிற்கு 40 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்தாலும் 45 டன் விற்பனை செய்யும்போது 18 லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்டலாம். இதில் 5 லட்ச ரூபாய் செலவு என்றாலும் 13 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.