Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

தோல்வியைத் தகர்த்தெறிந்து வெற்றியை வசமாக்க உதவும் மேற்கோள்கள்!

வாழ்க்கை என்பது வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டது என்பதை நமக்கு உணர்த்தக்கூடிய உந்துதலளிக்கும் மேற்கோள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தோல்வியைத் தகர்த்தெறிந்து வெற்றியை வசமாக்க உதவும் மேற்கோள்கள்!

Monday August 19, 2019 , 2 min Read

இன்றைய உலகில் அனைத்தும் வெற்றியையும் தோல்வியையும் மையமாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. ஆனால் தோல்வியைக் கண்டு நாம் மனம் தளர்ந்துவிடாமல் இருப்பது அவசியம்.

நமது வெற்றியும் தோல்வியும் நமக்கான அடையாளங்கள் அல்ல. அவை நமது கனவுகளையும் லட்சியங்களையும் அடைவதற்காக மார்க்கம் மட்டுமே. எனவே நாம் நம்மை மேலும் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள வெற்றி ஒரு தடையாக இருக்க அனுமதிக்கக்கூடாது. அதேபோல் தோல்வியை வாழ்க்கையின் இறுதி முடிவாக கருதிவிடவும்கூடாது.

இவை இரண்டுமே நிரந்தரமானதல்ல. இவற்றுள் ஒன்றை அனுபவிக்க மற்றொன்று அவசியம். வெற்றியைப் பகிர்ந்துகொள்வதும் கொண்டாடுவதும் எளிதாக இருக்கும். ஆனால் தோல்வியுடன் தொடர்புடைய உணர்வுகள் மற்றும் எதிர்மறையான விஷயங்கள் காரணமாக தோல்வியைக் கையாள்வது கடினமாகவே இருக்கிறது.


சாதனை படைத்த பெண்கள் சிலரின் ஊக்கமளிக்கக்கூடிய மேற்கோள்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தோல்வி உங்களது செயல்பாடுகளை பாதிக்காதவாறு எவ்வாறு அமைதியாக கையாள்வது என்றும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்றும் இவை உங்களுக்கு வழிகாட்டும்.

1
”ஒருமுறை நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்பதற்காக அனைத்திலும் நீங்கள் தோல்வியை சந்திப்பீர்கள் என்பது பொருளல்ல,” – மெர்லின் மன்றோ.
”நாம் வெற்றியுடன் பிறக்கிறோம். மற்றவர்கள்தான் நம்மிடம் தோல்வியையும், அவர்கள் தோல்வி என்று கருதும் அம்சத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள்,” – வூப்பி கோல்ட்பெர்க், நடிகை, நகைச்சுவை நடிகை, தொலைக்காட்சி பிரபலம்.
”தனிமையில் பயணிப்பதை நினைத்து அஞ்சவேண்டாம். உங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்களே பொறுப்பேற்றுக்கொள்வது உங்களை மேலும் வலுவாக்கும்,” – பிரியங்கா சோப்ரா, நடிகை, முதலீட்டாளர், தொழில்முனைவர்.
”தவறுகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தவறுக்கான எதிர்வினையே முக்கியம்,” நிக்கி கியோவன்னி, கவிஞர், எழுத்தாளர், ஆர்வலர், கல்வியாளர்.
”உங்கள் காயங்களை அறிவாற்றலாக மாற்றிவிடுங்கள்,” – ஓப்ரா வின்ஃப்ரே, நூலாசிரியர், டாக் ஷோ நடத்துபவர், கொடையாளி.
”சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவை என்னை பாதிப்பதை நான் அனுமதிப்பதில்லை” – மாயா ஏஞ்சலோ, சிவில் உரிமை ஆர்வலர், நூலாசிரியர், கவிஞர்.
”நாம் அனைவரும் மனிதர்கள். வெற்றியும் தோல்வியும் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம்” – ஹிமா தாஸ்.
hima
”மற்றவர்களைப் பின்பற்றுவதைவிட நீங்களே உங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்ளுங்கள்,” – ஜூடி கார்லேண்ட், நடிகை, பாடகி.
”தோல்வி ஒரு விளைவாக தென்படுவதற்கு முன்பு ஒரு உணர்வாகவே தோன்றுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புடன் சுய சந்தேகமும் இணைந்து, பெரும்பாலும் பயத்தின் காரணமாக அது மேலும் அதிகரிக்கிறது,” மிச்சல் ஒபாமா, நூலாசிரியர், வழக்கறிஞர், அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி.
”வெற்றியோ தோல்வியோ எப்போதும் என்னுடைய நூறு சதவீத பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறேன்” – பி.வி சிந்து, தொழில்முறை பேட்மிட்டன் வீராங்கனை.
”நீங்கள் பல்வேறு தோல்விகளை சந்திக்கலாம். ஆனால் நீங்கள் தோல்வியடைந்துவிடக்கூடாது. நீங்கள் யார் என்பதையும் எதை முறியடிக்கவேண்டும் என்பதையும் எப்படி மீண்டெழுவது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள தோல்வி அவசியம்” – மாயா ஏஞ்சலோ, சிவில் உரிமைகள் ஆர்வலர், நூலாசிரியர், கவிஞர்.
”வெற்றி குறித்த சரியான கண்ணோட்டத்தை தோல்வியே வழங்குகிறது,” – எலன் டீஜெனெரீஸ்.
”தோல்வி மிகவும் முக்கியமானது. நாம் எப்போதும் வெற்றி குறித்தே பேசி வருகிறோம். தோல்வியை எதிர்க்கும் அல்லது பயன்படுத்திக்கொள்ளும் திறனே மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியடைந்துவிடுவோம் என்கிற பயத்தில் முயற்சியே மேற்கொள்ளாத பலரை நான் சந்தித்துள்ளேன்” – ஜே கே ரௌலிங், நூலாசிரியர்.
”உங்களிடம் இருப்பது ஒரு வாழ்க்கை. அதைக் கைப்பற்றி, சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள்,” ஹிலாரி க்ளிண்டன், அமெரிக்க அரசியல்வாதி, வெளியுறவுத்துறை அமைச்சர், வழக்கறிஞர்.
”தோல்வியை எதிர்க்கத் தவறிவிட்டு உங்களது சிறப்பம்சத்தை இழந்துவிடாதீர்கள்,” – டெர்ரி மேக்மில்லன், நூலாசிரியர்.

ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா