தொழில் முனைவோர், ஸ்டார்ட் அப்’களுக்கு இன்ஸ்டாகிராமில் வழிகாட்டும் ரத்தன் டாடா!
இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு ‘Pitch Deck' கோரிக்கையை சமர்பிப்பதற்கான வடிவத்தை ரத்தன் டாடா பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரத்தன் டாடா, ஒரு மாதம் முன் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்றாலும் அதற்குள் 7,00,000க்கு மேல் ஃபாலோயர்களை பெற்று, தனது தனிப்பட்ட வாழ்க்கையை காட்சிகளை உற்றுநோக்கும் வகையில் அரிய படங்களை பகிர்ந்து அவர்களை கவர்ந்து வருகிறார்.
டாடா சன்ஸ் கவுரவ தலைவர் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான ரத்தன் டாடா, இப்போது தனது இன்ஸ்டாகிராம் அறிமுகப் பகுதியில் புதிய அம்சம் ஒன்றை இணைத்திருக்கிறார். இந்த அம்சம் இந்திய ஸ்டார்ட் அப் சமூகத்திற்கானது. தொழில் முனைவோர் தங்கள் ஸ்டார்ட் அப் கோரிக்கையை சமர்பிப்பதற்கான (PitchDeck) வடிவத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இஸ்டாகிராமில் நடத்திய கருத்துக் கணிப்பிற்கு பின் இதை அவர் செய்துள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பு மூலம், தனது qபாலோயர்களிடம், ஸ்டார்ட் அப் கோரிக்கை வடிவத்தை தான் வெளியிட வேண்டும் என விரும்புகிறீர்களா எனk கேட்ருக்கிறார். இதற்கு 97 சதவீதம் பேர் ஆம் என ஆமோதித்தனர்.
“இப்படி பெருமளவில் ஆம் என பதில் வந்ததால் மகிழ்ச்சியுடன் இதை வெளியிடுகிறேன்,” என்று கூறியுள்ளார்.
சொன்னபடியே அதை பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறார். இதனுடன் ஸ்டார்ட் அப் கோரிக்கை வடிவ இணைப்பை பகிர்ந்து கொண்டு, அதில் தனது செய்தியையும் இணைத்திருக்கிறார்.
"உங்களில் இளம் அறிமுக நிலை தொழில் முனைவோர்கள் உற்சாகமளிக்கும் ஸ்டார்ட் அப் பயணத்தை துவக்கக் காத்திருக்கிறீர்கள். ஆனால் எது முதல் படி என்று உங்களில் பலர் அடிக்கடி கேட்டிருக்கிறீர்கள். என் அலுவலகம் உதவியுடன், அடிப்படையான அறிமுக நிலை ஸ்டார்ட் அப் கோரிக்கை வடிவத்தை உருவாக்கி அளிக்கிறேன். இது உங்கள் எண்ணங்களை ஒருங்கிணைத்து, துவக்கத்திற்கு உதவும். இதன் அம்சங்களை அலசி ஆராய்ந்து, முதலீட்டை கோர உதவி, உங்கள் கதையை மேலும் முன்னெடுத்துச் செல்ல, உங்களுக்கான அறிமுக குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இத்தகைய கதைகள் வெற்றி பெற தான் காத்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இந்த ஸ்டார்ட் அப் கோரிக்கை வடிவம் 16 பவர் பாயிண்ட் ஸ்ல்டைகளை கொண்டுள்ளது. ரத்தன் டாடா அலுவலக முத்திரைக் கொண்ட இந்த குறிப்புகள், முதல் முறை தொழில்முனைவோர் கோரிக்கைகளில் இடம்பெற்றிருக்க வேண்டிய முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டுகின்றன.
இதில் பிரச்சனை ஸ்லைடும் அடங்கியிருக்கிறது. ஸ்டார்ட் அப் தீர்க்க விரும்பும் பிரச்சனை பற்றி இது குறிப்பிடுகிறது.
“பிரச்சனைகளை நிஜ வாழ்க்கை உதாரணத்துடன் புரிய வையுங்கள்...” என்கிறார் அவர்.
அடுத்ததாக அவர், பிரச்சனைக்கானத் தீர்வு குறித்து பேசுபவர், அடுத்த ஸ்லைடில் ஸ்டார்ட் அப்பின் தனித்தன்மையான விற்பனை அம்சம் பற்றி விவரிக்கிறார். இதற்கு முன் இல்லாத தீர்வு என இதை அவர் குறிப்பிடுகிறார்.
வர்த்தக போட்டி, நுழைவு தடைகள், வருவாய் மாதிரி, இலக்கு சந்தை, சேவை, மைல்கல்கள், இதுவரை நிதி, குழு ஆகியவை பற்றியும் ஸ்லைடுகள் அமைந்துள்ளன.
எண்கள் முக்கியம்
இந்த குறிப்புகள் கீழ் கூடுதலாக உங்களுக்கு உதவக்கூடிய குறிப்பையும் இணைத்துள்ளார். தொழில்முனைவோர் எல்லா ஐடியாக்களையும் தரவுகளால் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். எண்கள் பொய் சொல்லாது என்று அவர் கூறுகிறார்.
எண்கள் மீதான கவனம் தவிர கீழ்கண்ட அறிவுரைகளையும் ரத்தன் டாடா தொழில்முனைவோர்களுக்கு வழங்குகிறார்:
நீங்கள் நினைப்பதால் அது மகத்தான ஐடியா அல்ல: உங்கள் இலக்கு, சந்தை சொல்வதால் தான்.
இது செயல்படாது என்று ஒப்புக்கொண்டு பாதை மாற அல்லது முற்றிலுமாக கைவிட அஞ்ச வேண்டாம். அடுத்த ஐடியா சரியானதாக இருக்கலாம். நிதி பெறுவது என்பது வெற்றிக்கான அர்த்தம் அல்ல.
இறுதியில் அவர், தொழில்முனைவோருக்கான தனது செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்:
“வாழ்த்துகள். உங்கள் இதயத்தில் நெருப்பு இருக்கும் வரை, நீங்கள் எப்படியும் வழியை கண்டறிவீர்கள்.”
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் பெமா | தமிழில்: சைபர்சிம்மன்