ரூ. 21,930 கோடி சாதனை நிகர லாபம் அறிவித்து ரிலையன்ஸ் அசத்தல்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,67,186 கோடியாக அதிகரித்த நிலையில், EBITDA ரூ. 48,003 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 7.8 சதவீத வளர்ச்சியாகும்.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ் நிறுவனம், 2024-25 மூன்றாம் காலாண்டில், சாதனை அளவிலான ரூ.21,930 கோடி நிகர லாபத்தை அடைந்ததாக அறிவித்துள்ளது.
எண்ணெய் மற்றும் ரசாயணத்துறையில் (O2C) ஏற்ற இறக்கத்தை மீறி, ரீடைல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் சிறந்த செயல்பாடு நிறுவனம் ஆண்டு அடிப்படையில் 11.7 சதவீத நிகர லாபம் வளர்ச்சியை எதிர்கொள்ள வைத்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,67,186 கோடியாக அதிகரித்த நிலையில், EBITDA ரூ.48,003 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இது 7.8 சதவீத வளர்ச்சியாகும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான, ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ், ஆண்டு அடிப்படையில் 25.9 சதவீத வளர்ச்சியுடன் ரூ.6,857 கோடி நிகர லாபம் கண்டுள்ளது. வருவாய், 19.2 சதவீத வளர்ச்சியுடன் ரூ.38,750 கோடியாக உள்ளது. உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயனாளிகள் சராசரி வருவாய் உயர்வு (ரூ. 203.3) இதற்கு உதவியுள்ளது.
ஜியோவின் ட்ரு 5ஜி சேவை 170 மில்லியன் பயனாளிகளுக்கு மேல்பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய 5ஜி சேவையாளராக விளங்குகிறது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ், 10.1 சதவீத உயர்வுடன் ரூ. 3,485 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வருவாய் 8.8 சதவீதம் அதிகரித்து ரூ.90,333 கோடியாக உள்ளது. நிலைய விரிவாக்கம் மற்றும் பண்டிகை கால விற்பனை உதவியது.
இந்த காலாண்டில் நிறுவனம் 779 புதிய விற்பனை நிலையங்கள் துவக்கியது. இதன் மூலம் மொத்த நிலையங்கள் 19,102 ஆக அதிகரித்துள்ளது.டிஜிட்டல் மற்றும் புதிய காமர்ஸ் சேனல்கள் 18 சதவீத வருவாய் அளித்துள்ளன.
முக்கிய வருவாய் வழியான ரிலையன்சின் O2C வர்த்தகம், ஆண்டு அடிப்படையில் 6 சதவீத வளர்ச்சி கண்டு, ரூ.149,595 கோடி வருவாய் பெற்றுள்ளது. அதிக கொள்ளலவு மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை உதவின. என்றாலும், EBITDA வளர்ச்சி 2.4 சதவீதமாக உள்ளது.
ஜம்னாநகர் சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெய் செயல்முறை 20.2 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சி. கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில் நிறுவனம் கையிருப்பை திறம்பட கையாண்டது.
“இந்த காலாண்டிற்கான மொத்த அளவில் சாதனை EBITDA மற்றும் PAT எங்கள் வர்த்தகத்தின் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உறுதிக்கான அடையாளம்,“ என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
நிகர கடன் மற்றும் EBITDA விகிதம் 0.60 ஆக உள்ள நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் வலுவான நிதி நிலையை கொண்டுள்ளது. காலாண்டிற்கான நிறுவனத்தின் மூலதன செலவுகள் ரூ.32,259 கோடியாக உள்ளது. டிஜிட்டல் விரிவாக்கம், ரீடைல் வளர்ச்சி மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்களில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan