Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மாற்றுத் திறனாளிகள் இனி கம்பீரமாக எழுந்து நிற்க உதவும் நவீன சக்கர நாற்காலி!

இந்த நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி மெக்கானிக்கல் துறை மாணவர்கள், உருவாக்கியிருக்கிறார்கள். இந்த Standing Wheel chair-க்கு Arise எனப் பெயரிட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் இனி கம்பீரமாக எழுந்து நிற்க உதவும் நவீன சக்கர நாற்காலி!

Thursday November 07, 2019 , 2 min Read

பிறப்பில் அல்லது விபத்தினாலோ, நோய்களின் பாதிப்பாலோ உடல் உறுப்புகளின் செயல்பாட்டை இழந்து படுத்தப் படுக்கையாக அல்லது தவழ்ந்து சென்று சிரமப்படும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் துன்பத்தைக் கண்டு கல் நெஞ்சம் படைத்தவர்களும் கரைவதுண்டு.


ஆனால், நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை, எங்களாலும் சாதாரண மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் அவர்களை விடச் சிறப்பாக செய்யமுடியும் என சவால் மனப்பான்மையில் செயல்படும் மாற்றுத் திறன் படைத்தவர்களை மேலும் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள்.

வீல்சேர்

பட உதவி: தி ஹிந்து

முதுகெலும்புப் பிரச்னை மற்றும் கால்களில் செயலிழப்பால் நடக்கமுடியாமல் போன மாற்றுத் திறன் படைத்தவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவார்கள். சக்கர நாற்காலிகளில் அமர்ந்து தங்களது பணிகளைச் செய்வது வழக்க்ம். தாங்களும் எழுந்து நின்று மற்றவர்களைப் போல அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும் என்ற அவர்களின் கனவைத்தான் சென்னை ஐஐடி மாணவர் குழுவினர் நிஜமாக்கி இருக்கின்றனர்.

மாற்றுத்திறன் படைத்தவர் தானாகவே சக்கர நாற்காலியோடு எழுந்து நிற்கவும், மீண்டும் அமரவும் உதவும் இந்த நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி மெக்கானிக்கல் துறை மாணவர்கள், தங்கள் போராசிரியர்களின் வழிகாட்டுதல்களின்படி உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நவீன Standing Wheel chair-க்கு Arise எனவும் பெயரிட்டுள்ளனர்.

சாதாரண சக்கர நாற்காலியின் விலையிலேயே, (சுமார் ரூ.15 ஆயிரம்) இந்த நவீன சக்கர நாற்காலியும் கிடைக்கும் என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

arise

விழாவில் நவீன சக்கர நாற்காலிகளை வழங்குகிறார் மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட்.

சென்னை ஐஐடி, Phoenix Medical Systems உடன் ஓருங்கிணைந்து, பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இதனை உருவாக்கி, வெற்றியடைந்துள்ளனர்.


இந்த நவீன சக்கர நாற்காலியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று, இந்த நவீன சக்கர நாற்காலிகளை மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கு வழங்கிப் பேசியதாவது,

“நாட்டில் உள்ள மாற்றுத் திறன் படைத்தவர்களின் திறனை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் 78 ஆயிரத்து 500 மூன்று சக்கர சைக்கிள்களும், 48 ஆயிரம் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டு உள்ளன, என்றார்.

தற்போது சென்னை ஐ.ஐ.டி. தயாரித்துள்ள இந்த நவீன சக்கர நாற்காலியால் மாற்றுத் திறன் படைத்தவர்களின் வாழ்வில் வெளிச்சம் கிடைத்துள்ளது. இனி அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல தலை நிமிர்த்து நிற்கலாம். தங்களின் பணிகளை அவர்களே நின்று கொண்டு செய்து முடிக்கலாம்,” என்றார்.

ஆனால் இந்த நவீன சக்கர நாற்காலியின் விலை சற்று அதிகமாக (ரூ.15 ஆயிரம்) இருப்பதால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி பெற்று, இவற்றை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


நிகழ்ச்சியில் நவீன சக்கர நாற்காலியைப் பெற்ற மாற்றுத் திறன் படைத்த ஓருவர் கூறியபோது,

“நாங்கள் எப்போதும் அமர்ந்த நிலையில், அல்லது படுத்த நிலையிலேயே இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவித்து வந்தோம். இனி நாங்களும் எழுந்து நிற்பதால் ரத்த ஓட்டம் சீராகி நல்ல உடல் நலம் பெற வாய்ப்பேற்பட்டுள்ளது,” என்றார்.
நாற்காலி

படஉதவி - The News minute

”மற்றொருவரோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது, அனைவரும் எழுந்து நிற்கும்போது, நாங்கள் மட்டும் அமர்ந்து இருப்பது மிகுந்த மன உறுத்தலை ஏற்படுத்தும், இனி தேசிய கீதம் இசைக்கப்படும்போது, நாங்களும் கம்பீரமாக எழுந்து நிற்போம்,” எனக் கூறி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தார்.

நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை ஐஐடியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், சென்னை ஐஐடி மாற்றுத் திறன் படைத்தோரின் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் உடைத்தெறியும் வகையில் பல்வேறு பயனுள்ள கண்டுபிடிப்புகளையும், தயாரிப்புகளையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.