Stock News: சரிவில் இருந்து மீண்ட பங்குச் சந்தை; முக்கியமாக அமைந்த 3 காரணிகள் என்ன?
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (24/04/2023):
கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்களில் சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தையானது, வாரத்தின் முதல் நாளான இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 42.13 புள்ளிகள் உயர்ந்து 59,694 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 8.80 புள்ளிகள் உயர்ந்து 17,632 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

மூன்று முக்கியக் காரணிகள்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாக 3 முக்கிய காரணிகள் உள்ளன. அவை,
1. இந்தியாவின் 2வது மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, கடந்த சனிக்கிழமை அன்று தனது 4வது காலாண்டு வருமான விவரங்களை வெளியிட்டது. அதில், ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30% உயர்ந்து 9121.87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்திய பங்குச்சந்தையில் வங்கி துறைகளின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியுள்ளது.
2. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் வருமானம் 19 சதவீதம் அதிகரித்துள்ளதும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
3. இந்தியாவிலேயே அதிக வீட்டுக் கடன்களை வழங்கும் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சியை, ஹெச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இணைக்க ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அனுமதி அளித்துள்ளது.
இந்த 3 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்தமாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியின் மதிப்பு 33.20 சதவீத உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி லைப்
ஐசிஐசிஐ பேங்க்
டாடா கன்சியூமர் புரோடெக்ட்ஸ்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
எஸ்பிஐ
இறக்கம் கண்ட பங்குகள்:
சன் பார்மா
டாக்டர் ரெட்டிஸ்
மாருதி
ஐச்சர் மோட்டார்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து 82.08 ஆக உள்ளது.

