Stock News: சென்செக்ஸ் சற்றே உயர்வு - தடுமாற்றம் தொடரும் என நிபுணர்கள் கருத்து
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10.00 மணி நிலவரப்படி 299 புள்ளிகள் உயர்ந்து 79,795.47 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 87 புள்ளிகள் உயர்ந்து 24,228 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (12-11-2024) சற்றே உயர்வுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 148 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 84 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10.00 மணி நிலவரப்படி 299 புள்ளிகள் உயர்ந்து 79,795.47 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 87 புள்ளிகள் உயர்ந்து 24,228 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 243 புள்ளிகளும், நிப்டி ஐடி குறியீடு 264 புள்ளிகளும் உயர்வடைய, பிஎஸ்இ ஸ்மால் கேப் 310 புள்ளிககள் உயர்ந்துள்ளன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடும் உயர்ந்துள்ளது.
காரணம்:
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடுகளை கடந்த மாதம் வாபஸ் பெற்றதன் தாக்கம் இன்னும் நீடிக்கிறது, ஆனால், உள்நாட்டு ரீடெய்ல் முதலீட்டாளர்கள் தற்போது கைகொடுத்து வருவதால் பங்குச் சந்தை நிலைத்து வருகிறது. ஆனால் எஃப்.ஐ.ஐ. முதலீடுகள் மீண்டும் வரும் வரையில் பங்குச் சந்தை ஏற்றமும் இறக்கமுமாகவே தடுமாற்றம் நீடிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
சன் பார்மா
ட்ரெண்ட்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
பார்தி ஏர்டெல்
ஹெச்.சி.எல். டெக்
இறக்கம் கண்ட பங்குகள்:
பிரிட்டானியா
ஏசியன் பெயிண்ட்ஸ்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
என்.டி.பி.சி.
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவடைந்து இன்று ரூ.84.39 ஆக உள்ளது.