Stock News: Infosys-ஆல் தலைகீழாக மாறிய இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 700, நிஃப்டி 200 புள்ளிகள் சரிவு!
இந்திய பங்குச்சந்தையானது வாரத்தின் தொடக்க நாளான இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது வாரத்தின் தொடக்க நாளான இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (17/04/2023):
இந்திய பங்குச்சந்தையானது தனது வர்த்தகத்தின் முதல் நாளை கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களை பெரும் ஏமாற்றில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 613.96 புள்ளிகள் சரிந்து 59,816 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 155.35 புள்ளிகள் சரிந்து 17,671 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மோசமடைந்து வரும் மேக்ரோக்கள் மற்றும் வங்கி நெருக்கடியின் தாக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளன. கடந்த வார இறுதியில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
டிசிஎஸ் நிறுவனத்தைப் போல, இன்ஃபோசிஸ் நிறுவனமும், சந்தை எதிர்பார்ப்பை விட குறைவான லாபம் மற்றும் வருவாயையே பதிவு செய்திருக்கிறது. இதனால் இதன் பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் வரை சரிந்தன.
இந்தியாவின் இரண்டு பெரிய ஐ.டி.நிறுவனங்களின் காலாண்டு பங்குகள் திருப்திகரமாக இல்லாதது பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த இந்திய பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 11.5 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இறக்கம் கண்ட பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்
டிசிஎஸ்
விப்ரோ
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பார்தி ஏர்டெல்
எல் அண்ட் டி
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து 81.97 ஆக உள்ளது.
Gold Rate Chennai: தங்கம் வாங்க சரியான வாய்ப்பு; சவரன் எவ்வளவு தெரியுமா?

