Stock News: எழுச்சியில் இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்வு!
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (13/02/2024)
இந்திய பங்குச்சந்தை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 469.50 புள்ளிகள் உயர்ந்து 71,533 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 110.30 புள்ளிகள் உயர்ந்து 21,726 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள் என்ன?
தொழில்துறை உற்பத்தி தரவு மற்றும் சில்லறை பணவீக்கம் குறைவு உள்ளிட்ட உற்சாகமான பொருளாதார குறிகாட்டிகளால் இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
என்டிபிசி
ஐடிசி
கோடக் பேங்க்
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
பவர் கிரிட்
விப்ரோ
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து 83.01 ஆக உள்ளது.