Stock News: ஏற்றத்தில் சந்தை; லாபம் பெற இன்று இந்த 3 நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்!
இந்திய பங்குச்சந்தையானது இன்றும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது இன்றும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (25/04/2023):
தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 73.34 புள்ளிகள் உயர்ந்து 60,116 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 21.65 புள்ளிகள் உயர்ந்து 17,765 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
வங்கி நிஃப்டியும், மிட்கேப் ஐ.டி. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் இந்திய பங்குச்சந்தைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் பேங்க், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது இந்திய பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
பவர் கிரிட்
பார்தி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
அதானி போர்ட்ஸ்
அல்ட்ரா சிமெண்ட்ஸ்
எஸ்பிஐ
இறக்கம் கண்ட பங்குகள்:
கோடக் பேங்க்
டெக் மஹிந்திரா
சன் பார்மா
யுபிஎல்
டாக்டர் ரெட்டீஸ்
ஹெச்டிஎஃப்சி லைஃப்
டிசிஎஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
விப்ரோ
இன்ஃபோசிஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 81.87 ஆக உள்ளது.
Gold Rate Chennai: மீண்டும் 45,000-ஐ கடந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.120 உயர்வு!

