‘முதலில் பயணம், பின்னர் கட்டணம்' - புதிய சேவை அளிக்கும் பயண நிறுவனம்!

‘முதலில் பயணம், பின்னர் கட்டணம்' - புதிய சேவை அளிக்கும் பயண நிறுவனம்!

Friday March 24, 2023,

3 min Read

ஆகாஷ் தாஹியா மற்றும் அபிலாஷ் நாகி தாஹியா, 2016ல் விடுமுறை பயணத்தை திட்டமிட்ட போது திடீர் சிக்கலை உணர்ந்தனர். முன்கூட்டியே திட்டமிட்ட நிலையிலும், அவர்கள் விரும்பிய விடுமுறை பயணம் பட்ஜெட்டிற்குள் கட்டுப்படாமல் இருந்தது.

தாஹியாக்களுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல இது. கிராண்ட் திராண்டன் நடத்திய ஆய்வு ஒன்று, இந்தியாவில் 40 சதவீத பயணிகள் போதிய நிதி இல்லாததால் தங்கள் விடுமுறை பயணங்களை கைவிடுவதாக தெரிவிக்கிறது. இவர்களில் 70 சதவீதம் பேர் மேம்பட்ட பயண வாய்ப்புகளை விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக இருவரும் ஆய்வு மேலும் ஆய்வு செய்த போது, ஐபோன் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு போதிய நிதி உதவி வாய்ப்புகள் இருந்தாலும், பயண ஏற்பாட்டு நிறுவனங்களிடம் செல்லும் போது இத்தகைய வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்தனர்.
பயணம்

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தீர்மானித்தவர்கள் 2018ல் சங்கஷ் நிறுவனத்தை துவக்கினர். இந்நிறுவனம், பயணிகளுக்கு அனைத்து வகை பயண சேவைகளை அளிப்பதோடு இப்போது பயணம் செய்து, பின்னர் பணம் செலுத்தும் (TNPL)வாய்ப்பை வழங்குகிறது.

சன்கஷ் (SanKash) நிறுவனம், ஆண்டுக்கு ரூ.74 கோடி அளவில் கடன் தொகை வழங்குவதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

“தாமஸ் குக், எஸ்.ஓ.டி.சி., வீனா வேர்ல்டு, பால்மர் லாரி உள்ளிட்ட 6000க்கும் மேற்பட்ட பயண ஏற்பாட்டு நிறுவனங்களை பதிவு செய்திருப்பதுடன், பிளக்ஸ்மணி, பஜாஜ் பைனான்ஸ், எர்லி சாலரி உள்ளிட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு கடன் தேவை நிறைவேற்றுகிறது,” என்கிறார் நிறுவனர் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆகாஷ் தாஹியா.

சுயநிதியாக துவக்கப்பட்ட நிறுவனம், 2022 கடைசி காலாண்டில், விதை நிதி மற்றும் ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக ரூ.4.5 கோடி மற்றும் ரூ.3 கோடி நிதி திரட்டியது.

சிக்கலான சந்தை

இந்தியாவில் சுய நிதி பயண சந்தை 42 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், மிகவும் பிளவுபட்டு இருப்பதாக, கிராண்ட் தார்டன் ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றில் 90 சதவீதம் இன்னமும் ஆப்லைனில் தான் நிகழ்கின்றன. உடனடி நிதி வாய்ப்புகள் அதிகம் இல்லை.

“பல்வேறு நகரங்களில் இந்த சந்தையில் 3,00,000 பயண ஏற்பாட்டாளர்கள் சேவை அளிக்கின்றனர். சிறிய நகரங்களில் முகவர்களை அடைவது கடினம்,” என்கிறார் தாஹியா.

இந்த சிக்கல்கள் சிலவற்றை சன்கஷ் இல்லாமல் செய்துள்ளது. பயண வணிகருக்கு பல்வேறு கடன் சேவையாளர்கள் கொண்ட ஒருங்கிணைந்த தீர்வு அளிப்பதன் மூலம், சொந்தமாக நிதி தேடுவதுவதற்குத் தேவையான நேரத்தை குறைக்கிறது. இந்த முறையில், பயணிகளின் தரவுகளையும் வணிகர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம்.

“முழுவதும் ஆன்லைன் சேவை, உடனடி அனுமதி, கடன் வழங்கல், கடன்களுக்கு கட்டணம் இல்லாதது, ஏபிஐ முதல் அணுகுமுறை ஆகியவை, இண்டிகோ, ரேடிசன் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவற்றுடன் கூட்டு ஏற்படுத்திக்கொள்ள உதவியுள்ளன,” என்கிறார் தாஹியா.

தற்போதைய சந்தையில், டிரிப்மணி மற்றும் மேம்க்மைடிரிப் ஆகிய நிறுவனங்களை சன்கஷ் போட்டியாளராக கருதுகிறது.

“மேக்மைடிரிப் ஏற்கனவே வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது, புதியவர்களுக்கு அல்ல, எங்கள் நிறுவனம் இருதரப்பையும் கவனிகிறது,” என்கிறார் தாஹியா.

செயல்பாடு

சன்கஷ் சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. பயணிகள் பேக்கேஜ் அல்லது பயண சேவையை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, பயண வணிகர்களிடம் இருந்து வரும் விண்ணப்ப இணைப்பை பூர்த்தி செய்து கே.ஒய்.சி மற்றும் வருமான விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

சன்கஷ் சேவை இயந்திரம் இந்த தகவல்கள் அடிப்படையில் செயல்பட்டு, பொருத்தமான வங்கிசாரா நிதி நிறுவனத்தை பரிந்துரைக்கிறது. அதன் பிறகு, வாடிக்கையாளர் விவரம் அனுப்பி வைக்கப்படும்.

 “சன்கஷ் மூலம் பயணிகள் ரூ.10 லட்சம் வரை டிஎன்பிஎல் கடன் பெறலாம். எல்லாமே ஆன்லைனில் நிகழ்கிறது. வாடிக்கையாளர் எந்த அலுவலகத்தையும் தேடிச்செல்ல வேண்டாம்,” என்கிறார் இணை நிறுவனர் மற்றும் சி.ஓ.ஓ அபிலாஹ் நேகி தாஹியா.

ஆண்டுதோறும் நிறுவனம் 30 மில்லியன் பயணிகளை சென்றடைவதாகக் கூறுகிறார்.

“இந்த பயணிகள் பரப்பில் எங்கள் பங்கு 5 சதவீதமாக உள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் என வளர்கிறது. இப்போது பெரும்பாலான பயணிகள் அனுபவம் சார்ந்த பயணத்தை விரும்புவதாக தெரிவிக்கிறார்.

நிறுவனம் பயணிகளிடம் இருந்து, கடன் தொகையில் 1-2 சதவீதம் செயல்முறை கட்டணம் மற்றும் வணிகர்களிடம் இருந்து தள்ளுபடி கட்டணமாக 3 சதவீதம் பெறுகிறது. நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் கமிஷனாக 1.2 சதவீதம் பெறுகிறது.

இந்தியாவில் உள்ள பயண தொகுப்பு சேவை நிறுவனமான டிராவல் பொடிக் ஆன்லைன் கூட்டு மூலம் ஆப்லைன் வலைப்பின்னலையும் நிறுவனம் பெற்றுள்ளது. சொந்த விற்பனை பிரிவையும் கொண்டுள்ளது. நிறுவனத்தில் 60 ஊழியர்கள் உள்ளனர்.

எதிர்காலத் திட்டம்

நிறுவனம் பயண வணிகர்கள் மூலம் 338 நகரங்களில் செயல்படுகிறது. பயணம், விமானம் மற்றும் விருந்தோம்பல் துறையில் உள்ளவர்களை இலக்காக கொண்டுள்ளது. 2025ல் 15,000 பயண வணிகர்கள் அளவுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போதைய வருவாய் விகிதம் 2.1 மில்லியன் டாலராக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டில் இதை 29 மில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தற்போது, இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடனான ஆன்லைன் கூட்டை ஒருங்கிணைக்கும் பணியில் உள்ளது.

“அதே போல சேவை நிறுவனங்கள் மற்றும் ஓடிஏக்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ஓடிஏ சந்தையையும் கைப்பற்ற பேச்சு நடத்தி வருகிறோம். இரண்டு அல்லது மூன்று பெரிய ஓடிஏ நிறுவனங்கள் மற்றும் ரேடிசன் ஒட்டல்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன,” என்கிறார் தாஹியா.

ஆங்கிலத்தில்: சுஜாதா சங்வான் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan