வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டியை மீறி வெற்றிக் கொடி நாட்டும் ஒனிடா!
நீண்ட வாலுடன் வரும் சாத்தான், அண்டைவீட்டாரின் பொறாமை வாசம் நினைவில் உள்ளதா? ஆம், இந்திய நுகர்வோர் துறையில் முத்திரை பதித்த ஒனிடா நிறுவனம் பற்றிய கதை இது!
விஜய் மனுக்ஷனி 1970 களில் ஈரானிய வர்த்தகக் கடற்படை சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியை துவக்கிய நிலையில், இந்திய வர்த்தகக் கடற்படை ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடியதை விட ஆறு மடங்கு அதிக சம்பளம் வாங்கி கொண்டிருந்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். எனினும், தனது வர்த்தக பங்குதாரரான குலு மீர்சந்தானியை சந்தித்த போது அவரது வாழ்க்கையே மாறியது.
உடனே அவர் கப்பலில் இருந்து தொழில்முனைவுக் கடலில் குதிக்கத் தீர்மானித்தார்.
நல்ல சம்பளம் தரும் வேலையை விடுவது என்பது ரிஸ்க் தான். ஆனால் அதையும் மீறி, விஜய் தனது பங்குதாரருடன் இணைந்து வர்த்தகத்தை வெற்றிகரமாக செயல்பட்டு, வெற்றிகரமான ஒனிடா பிராண்டை உருவாக்கினார்.
“தில்லியில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்ற போது நிறுவனத்தை துவக்கினோம். தேசிய ஒளிபரப்பு மற்றும் வண்ணத் தொலைக்காட்சியை அறிவித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வாய்ப்புகளை அகல திறந்துவிட்டிருந்தார்” என்று நினைவு கூர்கிறார் மிர்க் எலக்ட்ரானிக்ஸ் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் மன்ஷுகானி.
“என் பொறியல் படிப்பு நாட்கள் முதல் சரியான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தேன். ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது வாய்ப்பை கண்டறிந்தேன்,” என்கிறார் அவர். உடனே கடற்படை பொறியாளர் வேலையை விட்டு விட்டு தொழில்முனைவில் குதித்தேன். இப்படி தான் ஒனிடா பிறந்தது,” என்கிறார் அவர்.
அதன் பிறகு விடாமுயற்சியுடன், மோசமான பொருளாதாரச் சூழல், வெளிநாட்டு நிறுவனங்களின் கடும் போட்டி உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு ஒனிடா வெற்றி பெற்றுள்ளது. முதல் டிவியை வாங்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் விருப்பத்தேர்வாக அமைந்தது.
பல சவால்களை மீறி, விஜய் ஒனிடா நிறுவனத்தை ரூ.736 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக வளர்த்திருக்கிறார். 69 வயதாகும் விஜய், தொழில்முனைவோராக தான் எடுத்த ரிஸ்க் மற்றும் ஒனிடா வெற்றி பயணத்தை smb ஸ்டோரி நேர்காணைல் பகிர்ந்து கொள்கிறார்.
smb ஸ்டோரி: கடற்சார் பொறியிலில் இருந்து தொழில்முனைவுக்கு வந்தது எப்படி?
விஜய் மனுக்ஷனி: நான் மும்பையைச் சேர்ந்தவன். கடல்சார் பொறியியல் கல்லூரியில் பயின்றேன். பின்னர் இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனில் சேர்ந்தேன். அதான் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் ஈரான் சென்றேன். இந்த காலத்தில் தான் என் பங்குதாரர் குலு மீர்சந்தானியை சந்தித்தேன். பிட்ஸ் பிலானி பொறியாளரான அவர் மருந்தக துறையில் இருந்தார்.
தொலைக்காட்சி தயாரிப்புக்கான வாய்ப்பை உணர்ந்த போது, வங்கிக் கடன் பெறுவது தொடர்பான நடைமுறை குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை என உணர்ந்தோம். எனவே எங்களிடம் உள்ள சேமிப்பு மற்றும் தனிநபர்கள் அளித்த நிதியுடன் துவங்கினோம். 1992ல் முதல் பங்கு வெளியீட்டை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. லக்கி செக்யூரிட்டிசின் அசிஷ் கசோலியாவிக்கு முன்னுரிமை பங்குகள் அளித்து ரூ.144 கோடி திரட்டினோம். கடந்த காலங்களில் புரமோட்டர்கள், பங்குதாரர்கள் முன்னுரிமை வெளியீடுகள் மூலம் நிதி அளித்துள்ளனர்.
smb ஸ்டோரி: ஒனிடா பயணத்தின் முக்கிய மைல்கற்கள் எவை?
வி.எம்: எங்களுடைய அடையாளமான சாத்தான் சின்னம் மற்றும், அண்டைவிட்டாரின் பொறாமை எனும் வாசகத்துடன் 36 ஆண்டுகளாக இந்திய இல்லங்களில் கோலோச்சி வருகிறோம். எங்கள் வெற்றியை சாத்தியமாக்கிய பல மைல்கற்களை அடைந்துள்ளோம். ஆரம்பக் காலத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமையான தயாரிகளை கொண்டு வந்தோம்.
2006 ல், டன் & பிராட்ஸ்டீரீட்டின், நுகர்வோர் தயாரிப்பு துறையில் முன்னணி நிறுவன பட்டியலில் நாங்கள் 2 வது இடம் பிடித்தோம். ஏசி தயாரிப்பிலும் ஈடுபட்டு, மிகவும் எரிபொருள் திறன் வாய்ந்த பிரிவில், உர்ஜவரான் பவுண்டேஷனின் நட்சத்திர சான்றிதழ் பெற்றோம்.
2012ல் இந்திய பிராண்ட் நம்பிக்கை அறிக்கையில் 18 வது இடம்பெற்றோம். இந்த காலங்களில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து கொண்டிருந்தோம். இந்த புதுமைகள் குறித்துவாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் தகவல் அளித்திக் கொண்டிருந்தோம்.
smb ஸ்டோரி: உங்கள் தலைமையகம் மற்றும் உற்பத்தி ஆலை பற்றி?
வி.எம்: தற்போது பேனல் டிவி, ஏசிகள், வாஷிங் மிஷின் மற்றும் மைக்ரோவேவ் அவன்கள் உள்ளிடவற்றை உற்பத்தி செய்கிறோம். எங்கள் தலைமையகம் மும்பை அந்தேரியில் அமைந்துள்ளது. வாடா மற்றும் ரூர்கேவில் நவீன உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ளன. வாடாவில் டிவிகளும், ரூர்கியில் வாஷிங் மெஷின்களும் தயாரிக்கிறோம். உற்பத்தி ஆலைகள் தானியங்கிமயமானவை. அனைத்து இயந்திரங்களும் அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேந்ர்ந்தவை.
பேனல் டிவிகள் மீது அரசு, சுங்க வரி வித்திருப்பதை இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க ஊக்குவிக்கிறது. எனவே வாடா ஆலையில் டிவி பேனல்களை தயாரிக்கத்துவங்கியுள்ளோம்.
smb ஸ்டோரி: தற்போது சந்தை எப்படி இருக்கிறது? வாடிக்கையாளர்களை சென்றடைய என்ன செய்கிறீர்கள்?
வி.எம்: இந்தியன் பிராண்ட் ஈக்விட்டி பவுன்சேஷன் தகவல்படி, எல்.இ.டி பேனல் சந்தை ரூ.7,371 கோடி மதிப்புடையது. இதில் நாங்கள் 5 சதவீத பங்கை பெற்றுள்ளோம். ஏசிகளின் சந்தை ரூ.12,840 கோடி கொண்டது, எங்கள் பங்கு 2 சதவிதமாகும். வாஷிங் மிஷின் சந்தை ரூ. 7,700 கோடி கொண்டது. இதில் 3 சதவீத சந்தை பங்கு பெற்றுள்ளோம்.
இந்த சந்தையை அடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கிய அம்சமாக இருக்கிறது.
புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுடன் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொள்கிறோம். டிஜிட்டல் மீடியா, கூகுள் விளம்பரம் மூலம் விளம்பரம் செய்கிறோம். தொடர்ந்து பிராண்ட் தகவல்களை பகிர்ந்து வருகிறோம். எங்கள் மக்கள் தொடர்பு முயற்சி ஆன்லைன் ஸ்டொபொரில் பலன் அளிக்கிறது. இது பிராண்ட் ஆற்றலை வளர்க்கிறது.
smb ஸ்டோரி: உங்கள் பணியின் தாக்கம் வாடிக்கையாளர் மற்றும் சமூகம் மீது எப்படி இருக்கிறது?
வி.எம்: ஒரு பிராண்டாக ஒனிடா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் இருந்து பிராண்ட் மற்றும் தரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் அடையாள சின்னத்துடன் கேத்தேட் ரே டிவி அறிமுகம் செய்யப்பட்ட போது, பெரும் பரபரப்பு உண்டானது. எல்லோரும் அந்த தயாரிப்பை விரும்பினர். இதனால் நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லா வீடுகளிலும் ஒரு ஒனிடா தயாரிப்பு இருக்கும்.
பின்னர் இந்த வகை டிவிகள் செல்வாக்கு குறைந்து பேனல் டிவிகள் வந்தன. இங்கு வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டி அதிகம் இருந்தது. ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் பிராண்ட் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு புதிய தயாரிப்புகளை கொண்டு வந்தோம். ஏசிகள், வாஷிங் மிஷின்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
smb ஸ்டோரி: வர்த்தக வளர்ச்சியில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
வி.எம்: எங்கள் வர்த்தகத்தின் தன்மை, தொடர்ந்து தொழில்நுட்ப மேம்பாடு தேவைப்படுவதாக இருக்கிறது. குறிப்பாக நுகர்வோர் தயாரிப்புகளில் வாடிக்கையாளர் திருப்தியை நிறைவேற்ற வேண்டும் எனில், நாம் தொடர்ந்து நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தொழில்நுட்பப் புதுமைகள் தவிர, நுகர்வோர் தயாரிப்புகள் மீதான வரிகள் மற்றொரு சவாலாக இருக்கிறது. இத்துறை மீதான சுங்க வரி மீது அரசு கவனம் செலுத்தினால், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மேலும் நல்ல பலன் கிடைக்கும். ஒனிடா போன்ற மேக் இன் இந்தியா பிராண்டுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஏசிகள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி அதிகமாகும்.
smb ஸ்டோரி: இதே துறையில் வர்த்தகம் துவங்குபவர்களுக்கான உங்கள் அறிவுரை என்ன?
வி.எம்: சந்தை பெரிதாக உள்ளது. புதிதாக வருபவர்கள் சந்தையை விரிவாக்குவார்கள். ஆலை அமைக்க பெரிய அளவிலான முதலீடு, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கு பின் சேவை பிரிவை அமைப்பது, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்களை வாங்குவது என பல்வேறு சவால்கள் உள்ளன. பிராண்டை உருவாக்கி, வாடிக்கையாளர்கள் நம்பிகையை பெறுவது புதியவர்களுக்கு அதிக காலம் பிடிக்கலாம்.
வி.எம்: வரும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். தேவை மற்றும் தற்போது குறைந்த அளவே ஊடுருவி இருப்பதால் நுகர்வு அதிகரிக்கும். தொடர்ந்து லாபம் ஈட்டுவோம்.
இந்தியா முழுவதும் 4,000 டீலர்கள் கொண்டுள்ளோம். இந்த எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். நவீன ரீடைல் மூலம் 15 சதவீத வருவாய் பெறுகிறோம். ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் போன்ற மேடைகளில் இடம்பெற்றுள்ளோம்.
நான் கேப்டிவ் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். கேவல் ஜி மீர்சந்தானி அடுத்த தலைமுறை தலைவராக உருவாகி உள்ளார். இப்போது அவர் மிர்க் எலக்ட்ரானிக்ஸ் இயக்குனராக இருக்கிறார். இந்த துறையில் அனுபவம் மிக்கவர்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர்சிம்மன்