Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

நீங்கள் வாசிப்பில் ஆர்வம் கொண்டவரா? 15 நிமிடத்தில் புத்தகங்களை படிக்க உதவும் செயலி!

புனைவு அல்லாத முன்னணி புத்தகங்களில் இருக்கும் முக்கியத் தகவல்களை சுருக்கப்பட்ட வடிவில் வாசித்துவிடும் வகையில் சுருக்கி வழங்குகிறது இந்த செயலி.

நீங்கள் வாசிப்பில் ஆர்வம் கொண்டவரா?  15 நிமிடத்தில் புத்தகங்களை படிக்க உதவும் செயலி!

Friday November 22, 2019 , 3 min Read

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்கு நிதானமாகப் படிப்பதற்கு நேரம் ஒதுக்கமுடிவதில்லை. இதனால் உள்ளடக்கத்தின் குறுகிய வடிவம் தற்போது பிரபலமாகி வருகிறது. செய்தி, பொழுதுபோக்கு என அனைத்தும் சுருக்கமான வடிவத்தில் வழங்கப்படுகிறது. Blinkist இதைத்தான் செய்கிறது.


விரைவாக வாசிக்க உதவும் இந்த செயலி புனைவு அல்லாத முன்னணி புத்தகங்களில் இருக்கும் முக்கியத் தகவல்களை எழுத்து மற்றும் ஆடியோ வடிவில் பயனர்களுக்கு வழங்குகிறது. இதை வெறும் 15 நிமிடங்களில் வாசித்துவிடலாம் அல்லது கேட்கலாம். ’சிறிய பேக்கேஜ்களில் பெரிய ஐடியாக்கள்’ என்பதே இந்த செயலியின் டேக்லைன்.

தொழில்முனைவு, தலைமைத்துவம், வரலாறு, உளவியல், சுய உந்துதல், பொருளாதாரம், கல்வி போன்ற 28 பிரிவுகளின்கீழ் சிறப்பாக விற்பனையாகும் 3,000-க்கும் அதிகமான புத்தகங்களில் இருந்து முக்கிய தகவல்களை நிபுணர்கள் சேகரித்துத் தொகுக்கின்றனர். இந்த செயலியில் ஒவ்வொரு மாதமும் 30 புதிய தலைப்புகள் சேர்க்கப்படுகிறது.
1

இந்தத் தளத்தை ஆண்ட்ராய்ட், OS, டெஸ்க்டாப் ஆகியவற்றில் 11 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக Blinkist தெரிவிக்கிறது. வாசிக்க உதவும் பெரும்பாலான செயலிகள் போன்றே இதிலும் பயனர்கள் எழுத்துக்களை ஹைலைட் செய்யலாம். கிண்டில் செயலி அல்லது சாதனத்துடன் தேவையான தலைப்புகளை இணைத்துக் கொள்ளலாம். புத்தகம் வாசிக்க தனித்தேவைக்கேற்ற பட்டியலைப் பெறலாம். அதுமட்டுமின்றி பில் கேட்ஸ், அரியானா ஹஃபிங்டன், மிச்சல் ஒபாமா போன்ற பிரபலங்களிடலிருந்து புத்தக பரிந்துரைகளையும் பெறலாம்.


இந்த செயலியில் எவர்நோட் இணைத்துக்கொள்ள முடியும். எல்லா சாதனங்களிலும் குறிப்புகளை இணைத்துக்கொள்ளலாம். ஆஃப்லைனில் வாசிக்கும் வசதியும் உள்ளது.

கூகுள் ப்ளேஸ்டோரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. பயனர்களால் 4.4 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை சேவைகளை இலவசமாகவும் ப்ரீமியம் சேவைகளை கட்டணத்துடனும் வழங்கும் மாதிரியில் செயல்படுகிறது. சாதனத்தில் இருக்கும் செயலியிலேயே வாங்கிக்கொள்ளும் வசதியும் உள்ளது. அல்லது மாத சந்தாவாக 999 ரூபாய் செலுத்தலாம். ஆண்டு சந்தா கட்டணம் 5999 ரூபாய். இத்துடன் செயலியை ஏழு நாட்கள் இலவசமாக முயற்சி செய்து பார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த செயலி குறித்து பார்ப்போம்.


உங்களது ஜிமெயில் வாயிலாகவோ அல்லது ஃபேஸ்புக் கணக்கு வாயிலாகவோ லாகின் செய்யலாம்

2

உங்களுக்கு வரும் முகப்புப் பக்கத்தில் இலவச தினசரி, உங்களுக்கானது, ட்ரெண்டிங், புதிது ஆகிய நான்கு பிரிவுகள் காணப்படும். ஒவ்வொரு பிரிவையும் கிடைமட்டமாக ஸ்வைப் செய்து தலைப்புகளைக் காணலாம்.

3

ஒரு தலைப்பை க்ளிக் செய்து நீங்கள் வாசிக்கலாம் அல்லது கேட்கலாம். ஒவ்வொரு தலைப்பிலும் அது எதைப் பற்றியது, யாருக்கானது, நூலாசிரியர் பற்றிய தகவல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். உங்களது லைப்ரரியில் சேர்த்துக்கொள்ள தலைப்புகளை புக்மார்க் செய்துகொள்ளலாம்.

4

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ளடக்கம் சிறு தொகுப்பாக சுருக்கப்பட்டிருக்கும். இது ’ப்ளிங்க்’ என்றழைக்கப்படுகிறது. வலதுபுறமாக ஸ்வைப் செய்து வாசிக்கலாம். சராசரியாக ஒவ்வொரு புத்தகமும் 12-15 ’ப்ளிங்க்’ கொண்டிருக்கும். வாசிப்பதற்கான பெரும்பாலான செயலிகள் போன்றே இதிலும் எழுத்துக்களை ஹைலைட் செய்யலாம். எழுத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.

5

புதிய ட்ரெண்டிங்கான தலைப்புகளைப் பெற ப்ரீமியம் திட்டத்திற்கு அப்கிரேட் செய்யவேண்டும். The 7 Habits of Highly Effective People, The Subtle Art of Not Giving a Fuck, How To Win Friends & Influence People, Ikigai, The Joy of Work, Keto Answers போன்றவை இதில் காணப்படும் சில பிரபலமான தலைப்புகள் ஆகும்.

6

’எக்ஸ்ப்ளோர் டேப்’ மூலம் பிரிவுகளை ஆராயலாம். ’தேடல் டேப்’ மூலம் குறிப்பிட்ட தலைப்புகளைத் தேடலாம்.

7

ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் தலைப்புகளைக் கண்டறிய பிரிவு வாரியான தேர்வு சிறந்தது.

8

The New York Times Bestsellers, Amazon Charts : Best Books of the Month, Bill Gates’ Favourite Reads போன்ற தொகுக்கப்பட்ட தலைப்புகளையும் எக்ஸ்ப்ளோர் டேப் கொண்டிருக்கும்.

9

லைப்ரரி டேபில் நீங்கள் சேமித்த தலைப்புகளையும் விருப்பமானவற்றையும் ஹைலைட் செய்யப்பட்டதையும் தேதி வாரியாகவும் அகர வரிசைப்படியும் வகைப்படுத்தலாம்.

10

இறுதியாக புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ், வேறொரு சாதனத்திற்கு மாற்றும்போது ரீஸ்டோர் பர்சேஸ், எவர்நோட் உடன் இணைப்பது, ஆடியோ பதிவிறக்கம் போன்றவற்றிற்கு செட்டிங்க்ஸ் டேப் பயன்படுத்தலாம்.

11

கருத்து : ப்ரீமியம் வாசகர்களுக்கு பயனுள்ளது

Blinkist சராசரி வாசகர்களுக்கானது அல்ல. இதன் உள்ளடக்கம் புனைவு அல்லாதவற்றில் கவனம் செலுத்துகிறது. வணிக தலைவர்கள், தொழில்முனைவோர், ஊக்கமிகு பேச்சாளர்கள், கல்வியாளர்கள், முதுகலை மாணவர்கள் போன்றோரை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது.


படிக்கவேண்டும் என நீங்கள் தீர்மானித்த புத்தகங்கள் உங்களது புத்தக அலமாரியை நிரப்பிவிட்டதா? அவற்றைப் படிக்க நேரம் ஒதுக்கமுடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியானால் Blinkist உங்களுக்கான செயலி. இந்த செயலி பெரிய புத்தகங்களின் சுருக்கப்பட்ட வடிவத்தை வழங்கினாலும் அதன் தரம் குறையவில்லை.


ஆடியோ வடிவமும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. தலைப்புகளை உங்களது சாதனத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. நாள் ஒன்றிற்கு ஒரு தலைப்பை மட்டுமே இலவசமாக பெறும் வகையில் இந்த செயலி அமைந்திருப்பதால் இதற்கான கட்டணம் சற்று கூடுதலாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இது சராசரி மக்களுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இருப்பினும் கட்டணம் செலுத்தாத பயனர்கள் பலர் இதன் மூலம் பலனடைகின்றனர்.

”நான் இந்த செயலிக்கான சந்தா பெறவில்லை. இருப்பினும் ஒரு நாள்கூட இலவச புத்தகத்தை பயன்படுத்திக்கொள்ளத் தவறியதில்லை. ஆங்கிலம் என்னுடைய மூன்றாவது மொழி என்பதால் உச்சரிப்பு, சொல் வளம், இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள Blinkist உதவியது,” என்று பயனர் ஒருவர் குறிப்பிட்டார்.

டவுண்லோட் செய்ய: Blinkist


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா