தமிழ்நாட்டின் சிறந்த தொழில் முனைவர்களை கௌரவித்த TiECON சென்னை அமைப்பு!
நாடு முழுவதும் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோர், துறைசார் தலைவர்கள், வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆர்வம் கொண்ட தொழில்முனைவோர் உள்ளிட்ட 550 பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மிகப்பிரபலமான தொழில்முனைவோர் விருது TiECON சென்னை 2022, பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. வெவ்வேறு பிரிவுகளின்கீழ் சமூக நலனிற்காக பங்களித்தவர்களும் துறைசார் சாதனையாளர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.
நாடு முழுவதும் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோர், துறைசார் தலைவர்கள், வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆர்வம் கொண்ட தொழில்முனைவோர் உள்ளிட்ட 550 பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
TiE Global Board of Trustees தலைவர் பி.ஜே. அருண், துணைத் தலைவர் முரளி புக்கப்பட்டினம் ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
'எல்லையற்ற மீள்திறன்’ என்பதை மையமாகக் கொண்ட இந்த மாநாட்டில், பெருந்தொற்று காலமும் அதன் தாக்கமும் தொழில்முனைவு சுற்றுச்சூழலை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பது வலியுறுத்தப்பட்டது.
தொழில்துறையில் சாதனை படைத்த முன்னோடிகள், முதல் தலைமுறை தொழில்முனைவோர், ஆர்வம் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், C-நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட சென்னையின் வணிகம் மற்றும் தொழில்முனைவு பிரிவுகளைச் சேர்ந்த பிரபல தலைவர்கள் பங்கேற்றனர்.
வென்சர் கேப்பிடலிஸ்ட், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் நிர்வாகிகள், வங்கியாளர்கள் போன்றோருடன் ஒருங்கிணைய மிகப்பெரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. TiE Chennai அமைப்பு இத்தகைய தனித்துவமான, பிரத்யேக தளத்தை அமைத்துக் கொடுத்ததற்காக நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினார்கள்.
TiECON Chennai 2022 விருது வென்றவர்கள்:
வாழ்நாள் சாதனையாளர் விருது – எம்.எம். முருகப்பன், தலைவர், Corborundam Universal Ltd (CUMI) முருகப்பா குழுமம். பல்வேறு துறைகளில் தனக்குள்ள அனுபவங்களைக் கொண்டு பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கும் நிர்வாகத்திற்கும் வழிகாட்டுவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது – கௌதம் சரயோகி, Go Colors. ஆடை வர்த்தக துறையில் இவருக்குள்ள தனித்திறனுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் – மதுமிதா, The Indus Valley
- இந்த ஆண்டில் சிறப்பாக மீண்டெழுந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் – ஹரி கணபதி, PickYourTrail
- இந்த ஆண்டில் சிறந்த பெண் தொழிலமுனைவர் – பத்மினி ஜானகி, Mind & Mom
- இந்த ஆண்டின் டீப்டெக் ஊக்குவிப்பாளர் – டாக்டர் சத்யா சக்கரவர்த்தி
இந்நிகழ்ச்சி குறித்து TiE Chennai தலைவர் சிகே ரங்கநாதன் கூறும்போது,
“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு TiECON Chennai நிகழ்வின் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 15வது எடிஷனை கொண்டாடும் இந்த வேளையில், ஆர்வம் கொண்ட தொழில் முனைவோர்களின் வளர்ச்சியில் TiECON தொடர்ந்து பங்களிக்கும் என நம்புகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த தரமான தொழில்முனைவோர் நாட்டின் தொழில்முனைவு சமூகத்தை வலுப்படுத்துகின்றனர். துறை சார்ந்தும் சமூக அளவிலும் இவர்களது பங்களிப்பை நினைத்துப் பெருமைப்படுகிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற Corborundam Universal Ltd (CUMI) முருகப்பா குழுமம் தலைவர் திரு. எம்.எம். முருகப்பன் கூறும்போது,
“துறைசார்ந்த அனுபவசாலிகள் மற்றும் சக தொழில்முனைவோர் மத்தியில் எனக்கு இந்த விருது வழங்கி கௌரவித்ததற்காக TiE Chennai அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகாலம் செயல்பட்டதில் நானும் என் ஊழியர்களும் துறைக்கு மதிப்பு சேர்க்க முற்பட்டிருக்கிறோம். அதேபோல், சேவை தொடர்பான வலுவான அமைப்பை உருவாக்கவும் முற்பட்டிருக்கிறோம். நேர்மை, பொறுப்புணர்வு, ஆர்வம், மரியாதை, தரம் போன்ற அம்சங்களுடன் சமூகத்தின் வளர்ச்சியிலும் பங்களித்திருக்கிறோம். இந்த விருது பெற்றதன் மூலம் எங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதுடன் அடுத்தகட்ட முன்னெடுப்புகளுக்கும் உந்துதல் கிடைத்திருக்கிறது,” என்கிறார்.