2021-ன் சிறந்த ஆப் பட்டியலை வெளியிட்ட கூகுள்: இந்திய அளவில் கல்வி, கேமிங் செயலிகள் முதலிடம்!
கூகுள் பிளேஸ்டோரில் முன்னிலை வகித்த சிறந்த செயலிகள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில், கல்வி செயலியான பிட்கிளாஸ், கிளப் ஹவுஸ், பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா உள்ளிட்ட செயலிகள் முதலிட்டம் பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிளேஸ்டோரில் முன்னிலை வகிக்கும் சிறந்த செயலிகள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில், கல்வி செயலியான பிட்கிளாஸ், கிளப்ஹவுஸ் உள்ளிட்ட செயலிகள் முதலிடம் பெற்றுள்ளன. கேம்ப்களில் பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போன் பயனாளிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் புதுப்புது செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் கூகுள் பிளேஸ்டோரில் அதிக ஆதரவை பெறும் சிறந்த செயலிகளை ஆண்டு இறுதியில் தேர்வு செய்து பட்டியலிடுவதை கூகுள் வழக்கமாகக் கொண்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான பிளேஸ்டோரின் சிறந்த பட்டியலை கூகுள் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பயன்பாடு, கேம்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயலிகளை தேர்வு செய்து கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் புதுமையான செயலிகள் பல அறிமுகம் ஆகியுள்ளதாக கூகுள் வலைப்பதிவு தெரிவிக்கிறது.
மேலும், இந்த ஆண்டு இணைய கற்றல் சார்ந்த செயலிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இந்த வகையில் பிரபலங்கள் பாடங்களை கற்றுத்தரும் ’பிரண்ட்ரோ’ (FrontRow), செயற்கை நுண்ணறிவு சார்ந்த ’எம்பைப்’ (EMBIBE ), உள்ளிட்ட செயலிகள் முன்னிலை பெற்றுள்ளன. இந்த பிரிவில் இணைய வழி கற்றலுக்கான ’பிட்கிளாஸ்’ (Bitclass) செயலி முதலிடம் பெற்றுள்ளது.
பயனாளிகள் தேர்வாக சமூக ஆடியோ சேவையான கிளப்ஹவுஸ் முதலிடம் பெற்றுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உடல நலப்பிரிவில் ’ஜம்பிங் மைண்ட்ஸ்’ (Jumping Minds), ’இவால்வ்’ (Evolve), ’எவர்கிரீன் கிளப்’ (Evergreen Club) உள்ளிட்ட செயலிகள் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த ஆண்டு புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் டேப்லெட்கள், அணிகணிணிகள் மற்றும் டேப்லெட் கேம்கள் ஆகிய மூன்று புதிய அறிமுகம் செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கேமிங் பிரிவில் பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
கூகுள் பிளேஸ்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள செயலிகள் பட்டியல் வருமாறு:
2021 பயனாளிகள் தேர்வு
கிளப்ஹவுஸ் (Clubhouse)
பயனாளிகள் தேர்வு கேம்
- கரேனே பிரிபயர் மேக்ஸ் (Garena Free Fire MAX)
2021 சிறந்த இந்திய செயலி
- பிட்கிளாஸ் (Bitclass: Learn Anything. Live. Together)
சிறந்த கேம்
- பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India)
கேளிக்கை செயலிகள்
- பிரண்ட் ரோ – இசை கற்றல் செயலி (FrontRow: Learn Singing, Music, Rap, Comedy & More)
- கிளப்ஹவுஸ்
- ஹாட்ஸ்டெப் (Hotstep)
தினசரி பயன் செயலிகள்
- சார்டிஸி (Sortizy – சமையல் குறிப்பு திட்டமிடல் செயலி)
- சர்வா – (SARVA – யோகா, தியானம் செயலி)
- கர்டியன்ஸ் – (Guardians from Truecaller)
தனிநபர் வளர்ச்சி செயலி
- பிட்கிளாஸ் - Bitclass: கற்றல் செயலி
- எம்பைப் - EMBIBE: கற்றல் செயலி
- இவால்வ்- Evolve Mental Health: தியானம், தனிநபர் நலம்
அதிகம் அறியப்படாத செயலிகள்
- ஜம்பிங் மைண்ட்ஸ் - Jumping Minds – உரையாடல் மேம்படல் செயலி
- மூன்பீம் – Moonbeam I பாட்காஸ்டிங்
நல்ல நோக்கிலான செயலிகள்
- எவர்கிரீன் கிளப் - Evergreen Club – ஆரோக்கிய, பிட்னஸ்
- பீயிங்- being: மன நல நண்பன்
- ஸ்பீச்சிபை- Speechify – பேச்சு டூ எழுத்து
டேப்லெட் செயலிகள்
- ஹவுஸ்- Houzz – ( இல்ல வடிவமைப்பு)
- கேன்வா- Canva (படைப்பாக்கம், வடிவமைப்பு)
அணிகணிணி செயலிகள்
- மை பிட்னஸ் பால் - My Fitness Pal
- காம்- Calm
- ஸ்லீப் சைக்கிள்- Sleep Cycle
சிறந்த கேமிங் செயலிகள்
- பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா - Battlegrounds Mobile India
- சம்மனர்ஸ் வார் - Summoners War: Lost Centuria
- மார்வல் - MARVEL Future Revolution
- போக்கேமான் யுனைட் - Pokemon Unite
- சஸ்பெக்ட்ஸ்- Suspects: Mystery Mansion
இவற்றைத்தவிர, அன்மேஸ் (Unmaze), டிலைட் (DeLight) , ஹண்ட்டவுன் (Huntdown) , மைபிரண்ட் பெட்ரோ (My Friend Pedro) உள்ளிட்ட செயலிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.