Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

‘2022 இந்திய பணக்காரர்களின் பட்டியல்’ - ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இவர்களின் சொத்து மதிப்பு என்ன?

2022ம் ஆண்டின் 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. சொத்து மதிப்பு வளர்ச்சியில் யாரை யார் முந்தி இருக்கிறார்கள், புதிதாக பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்கள் யார் எனப் பாருங்கள்.

‘2022 இந்திய பணக்காரர்களின் பட்டியல்’ - ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இவர்களின் சொத்து மதிப்பு என்ன?

Monday December 05, 2022 , 3 min Read

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது 2022ம் ஆண்டில் தொழில்துறையினருக்கு பேரிடியைத் தந்தது. மந்தமான உலகப் பொருளாதார நிலையில் திக்குமுக்காடி திணறிப் போய் தொழிலை மீட்க பாடுபடும் தொழிலதிபர்களுக்கு இப்படித் தொழில் செய்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வியக்க வைத்திருக்கிறார்கள் இந்தியாவின் பழைய மற்றும் புதிய செல்வந்தர்கள்.

2022ம் ஆண்டிற்கான '100 இந்தியப் பணக்காரர்கள்' பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பணக்காரர்களின் சொத்து 2500 கோடி பில்லியன் டாலர் வளர்ச்சி கண்டு 100 செல்வந்தர்களின் மொத்த மதிப்பு 800 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. டாப் 10 செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 385 பில்லியன் டாலர், அதாவது, 38 ஆயிரத்து 500 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

Top 100 rich indians

முதலிடத்திற்கு முன்னேறிய அதானி

டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இருந்த இரண்டாம் இடத்தில் இருந்து இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் கௌதம் அதானி.

அதிக வருவாய் ஈட்டி இருப்பதில் உள்கட்டமைப்புத் துறையில் கோலோச்சும் கௌதம் அதானி பெரும்பங்கு வகிக்கிறார், 2008க்குப் பிறகு முதல் முறையாக இது உச்சத்தில் உள்ள வரிசையில் இவர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சதவிகித மற்றும் டாலர் அடிப்படையில் இந்த ஆண்டு 3 மடங்கு லாபம் ஈட்டி இருக்கும் அதானி, அடுத்த தசாப்தங்களில் 100 பில்லியன் டாலரை பசுமை ஆற்றலுக்கு செலவிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, 150 பில்லியன் டாலர் (ரூ. 1,211,460.11 கோடி) சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி உலக அளவில் மூன்றாவது பணக்கார பில்லியனராக உள்ளார்.

முகேஷ் அம்பானி

செல்வந்தர்கள் பட்டியலில் அதானிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆவார். ஆயில், தொலைதொடர்பு என பல துறைகளில் ஈடுபட்டிருக்கும் இவருடைய சொத்து மதிப்பு கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து, 88 பில்லியன் டாலர் அல்லது ரூ.710,723.26 கோடி நிகர மதிப்பாக உள்ளது.

முதல் 2 பணக்கார இந்தியர்களான அதானி மற்றும் அம்பானி இந்தியாவின் 100 செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.
அதானி

ராதாகிஷன் தமானி

நாட்டின் சில்லறை வர்த்தக அரசனாகத் திகழ்கிறார் DMART சூப்பர் மார்க்கெட்டுகளின் சொந்தக்காரரான ராதாகிஷன் தமானி. 27.6 பில்லியன் டாலர் (ரூ. 222,908.66 கோடி) சொத்துக்களுடன் மூன்றாவது பணக்கார இந்தியாராக இருக்கும் இவரது நிகர சொத்து மதிப்பு 6 சதவீதம் குறைந்தாலும் அவர் டாப் 3 செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.

சைரஸ் பூனாவாலா

கோவிட் -19 தடுப்பூசிகள் இந்த ஆண்டும் சீரம் நிறுவனத்திற்கு பம்பர் லாபத்தை பெற்றுத் தந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவின் தலைவர் சைரஸ் பூனாவாலா 1.5 பில்லியன் டாலர் அல்லது ரூ.173,642.62 கோடி சொத்துகள் பெற்று நாட்டின் 4வது பெரும் செல்வந்தராக உருவெடுத்திருக்கிறார்.

ஷிவ் நாடார்

HCL டெக்னாலஜிஸின் தலைவரான ஷிவ் நாடார், இந்த ஆண்டு கல்வி தொடர்பான காரணங்களுக்காக $662 மில்லியனை நன்கொடையாக அளித்துள்ளார். எனினும், மொத்த நிகர மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டு $21.4 பில்லியன் அல்லது ரூ. 172,834.97 கோடி மதிப்பு சொத்துகளுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

shiv nadar

சாவித்ரி ஜிண்டால்

ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு கோடீஸ்வர பெண்மணி ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால். இந்தியாவின் கோடீஸ்வர பெண்மணி என்றும் அறியப்படும் சாவித்ரியின் நிகர சொத்து மதிப்பு $16.4 பில்லியன் அல்லது 132,452.97 கோடி ஆகும். 100 செல்வந்தர்கள் பட்டியலில் இவர் 6வது இடத்தில் இருக்கிறார்.

திலீப் சங்வி

சன் பார்மாசூட்டிகல்ஸ் தலைவரான திலீப் சங்வியின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர் அல்லது 125,184.21 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 மற்றும் 10ம் இடங்கள்

ஹிந்துஜா குழுமம் இந்திய டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தையும் அடுத்ததாக டெக்ஸ்டைல்ஸ்-டு-சிமென்ட் கூட்டு நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமம் 15 பில்லியன் டாலர் அல்லது ரூ.121,146.01 கோடி நிகர சொத்து மதிப்புடன் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Falguni Nayar The Founder of Nykaa

Falguni Nayar, Founder, Nykaa

புதுமுக செல்வந்தர்கள்

இந்த ஆண்டில் 9 புதிய முகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் மூன்று ஐபிஓக்களும் அடங்கும். முன்னாள் வங்கி ஊழியரான ஃபல்குனி நாயர் இந்தியாவின் செல்வந்தப் பெண்ணாக மாறி இருக்கிறார் பட்டியலில் 44வது இடத்தில் உள்ளார். அழகுப் பொருட்கள் மற்றும் பேஷன் ரீடெய்லான நைகாவின் மூலம் இவர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்; 50வது இடத்தில் ஆடை உற்பத்தியாளரான ரவி மோடி இடம் பெற்றுள்ளார். மெட்ரோ நிறுவனத்தின் ராபிக் மாலி 89வது இடத்தில் உள்ளார்.