Trump 2.0: இந்திய வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்துமா? பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
வாணிபம் மற்றும் விசா நடைமுறைகளில் கடும் இறுக்கம் தோன்றினாலும் சீனாவிடமிருந்து சப்ளை சங்கிலி மாறும் என்பதால் இந்தியா அதன் மூலம் பயனடைய வாய்ப்பிருப்பதாகவும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பதைத் தொடர்ந்து இந்தியா, சீனாவுடனான வர்த்தகக் கொள்கைகள் எப்படி இருநாடுகளையும் பாதிக்கும் என்பது பற்றி பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரிய பொருளாதாரமாக கருதப்படும் அமெரிக்கா, டிரம்ப் அதிபர் பதவிக்காலக்கட்டத்தில் ‘அமெரிக்கக் காப்புக் கொள்கை’யை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் என்பதாலும் சீனா, இந்தியாவின் வாணிபக் கொள்கைகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பதாலும் அமெரிக்க வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்வதையும் அவர் விமர்சித்து வருபவர் என்பதால் நிச்சயம் இந்திய வர்த்தகத்தைக் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வர்த்தகத் துறையில் தாக்கம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாணிபம் மற்றும் விசா நடைமுறைகளில் கடும் இறுக்கம் தோன்றினாலும் சீனாவிடமிருந்து சப்ளை சங்கிலி சீனாவிடமிருந்து மாறும் என்பதால் இந்தியா அதன் மூலம் பயனடைய வாய்ப்பிருப்பதாகவும் சில நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவுக்கு எதிரான டிரம்ப்பின் கொள்கைகள் இந்தியாவை முன்னிறுத்தியே நடைபெறும் என்பதால் இந்தியாவுக்கு நல்லதுதான் என்று சில நிபுணர்கள், கூறுகின்றனர்.
டிரம்ப்பின் ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கை வாஷிங்டன் - பெய்ஜிங் வாணிபப் போரை உக்கிரப்படுத்தினாலும் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கருதுகிறார்கள். வாணிபக் கட்டணங்களை உயர்த்துவத்துவதன் மூலம் டிரம்ப் ஆட்சி சீனாவைத் தண்டிக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்படியே டிரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கான கட்டணங்களை உயர்த்தினாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை நம்பியிருக்கும் இந்தியா, சீனா அளவுக்கு கட்டண உயர்வினால் பாதிக்கப்படாது என்று பார்க்ளேஸ் ஆய்வு புதனன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“டிரம்ப்பின் கட்டண முன்மொழிவுகளால் சீனாவின் ஜிடிபியில் 2% பின்னடைவு ஏற்படும்,” என்கிறது பார்க்ளேஸ் அறிக்கை. சீனாவின் வளர்ச்சிக் குறைவினால் உலக அளவில் சரக்குகளின் விலைகள் குறைவது இந்திய இறக்குமதியாளர்களுக்கு நல்லது என்றும் பார்க்ளேஸ் கூறுகிறது.
ஆனால், பொருளாதார நிபுணர் பிரணாப் சென் கூறுவது என்னவெனில், டிரம்பின் கொள்கைகளினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 அடிப்படைப் புள்ளிகள் குறையும், ஆனால், சீனாவுக்கு 40 அடிப்படைப் புள்ளிகள் குறையும், என்கிறார்.
ஜே.என்.யூ. பல்கலைக் கழக பேராசிரியர் பிஸ்வஜித் தார் கூறும்போது,
"டிரம்ப்பின் முந்தைய ஆட்சியின் போது அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது, என்றார். சீனாவுடன் ட்ரம்ப் வாணிப பேச்சுவார்த்தைகளில் வேளாண் பொருட்கள் பற்றியே அதிக கவனம் செலுத்தினார், இந்தியா, அமெரிக்க வேளாண்பொருட்களை இறக்குமதி செய்து இந்திய விவசாயிகளைக் காயப்படுத்தக் கூடாது," என்றார்.
தகவல் உதவி: தி இகானமிக் டைம்ஸ்