சிறு தொழில் நிறுவனங்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ’வாட்ஸ் அப் பே’ வசதி: ஆயவறிக்கையில் தகவல்!
பி.சி.ஜி- ஒமிடியார் ஆய்வு அறிக்கை வாட்ஸ் அப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி சாத்தியமானதும், இந்தியாவின் 50 சதவீத எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இதை பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது.
சர்வதேச அளவில் தகவல் தொடர்பை வாட்ஸ் அப் மாற்றி அமைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது, இந்நிறுவனம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் இந்த பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு துவக்கத்தில் வாட்ஸ் அப், 210 மில்லியன் பயனாளிகளை கொண்ட இந்தியாவில் தனது ஒரு மில்லியன் பயனாளிகளுக்கு பண பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்தது. ’வாட்ஸ் அப் பே’ சேவையின் அறிமுகம் இன்னமும் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வசதி இந்தியாவின் சிறு வணிகர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பிசிஜி மற்றும் ஒமிடியார் நெட்வொர்க், கிரெடிட் டிஸ்ரப்டட்: டிஜிட்டல் எம்.எஸ்.எம்.இ லெண்டிங் இன் இந்தியா எனும் அறிக்கையை கூட்டாக வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் பே மூலம் இந்தியாவில் உள்ள 60 சதவீத குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) மேம்பட்ட கடன் வசதி பெறும் என தெரிவிக்கிறது. தற்போது, 45 சதவீத எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வங்கி அல்லாத இடங்களில் இருந்தே கடன் வசதி பெறுகின்றன.
வாட்ஸ் அப் பே, கூகுள் பே போன்ற வசதிகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாற உதவும். இதன் மூலம் அவற்றின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான தடம் இருக்கும் என்பதால் அவற்றின் கடன் தகுதி மேம்படும். இது, வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறும் வசதியை உண்டாக்கும்.
வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை வசதி அறிமுகமானதும், 50 சதவீத எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இதை பயன்படுத்த இருப்பதாக கூறியதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
"சிறிய அளவிலான வணிகர்கள் பெரிய அளவில் இந்த மேடைகளுக்கு வர வாய்ப்புள்ளதால், வாட்ஸ் அப் மற்றும் கூகுள் பே ஆகிய சேவைகள் டிஜிட்டல் பரவர்த்தனை ஏற்பில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் வாய்ப்புள்ளது.”
இதன் விளைவாக, டிஜிட்டல் திறன் பெற்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது அதிகரிக்கும் டிஜிட்டல் முதிர்ச்சியை உணர்த்துகிறது.
"மக்களின் தனிப்பட்ட வாழ்வில், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் மேடைகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் எம்.எஸ்.எம்.இ டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தயாராகி வருகின்றன. தரவுகளை பகிரவும் தயாராக உள்ளன,” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
வாட்ஸ் அப் வர்த்தக சேவையில் இந்த வசதி இணைக்கப்படும் போது இந்த மாற்றம் இன்னும் விரைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் அப் வர்த்தக சேவையை இந்தியாவில் ஐந்து மில்லியனுக்கு மேல் வர்த்தகர்கள் பயன்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் கடனில் மாற்றம்
யுவர்ஸ்டோரியிடம் பேசிய, பிசிஜி இயக்குனர் மற்றும் ஆசிய பசுபிக் மூத்த பங்குதாரர்,
"வாட்ஸ் அப் பே இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாளிதழ் விற்பவர், வாட்ஸ் அப் மூலம் கட்டணம் வசூலிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் வங்கிக்கு கடன் பெற செல்லும் போது, டிஜிட்டல் பர்வர்த்தனை வரலாறு மற்றும் வாடிக்கையாளர் பட்டியலை கொண்டிருப்பார். இந்த வெளிப்படையான தன்மை அவரது நம்பிக்கை தன்மையை அதிகரிக்கும்,” என்று கூறினார்.
"வாட்ஸ் அப், கூகுள் போன்ற மேடைகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் கடன் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் டிஜிட்டல் நட்புத் தன்மை அதிகரித்துள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களில் ஸ்மார்ட்போன் ஏற்பு 2015 ல் 45 சதவீதத்தில் இருந்து 2018 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. மலிவு விலை ஸ்மார்ட் போன்கள் மற்றும் குறைந்த கட்டண இணைய வசதி இதற்கு உதவியுள்ளது. மூன்றில் ஒரு பங்கு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் ஈர்த்து வருகிறது.
"ரூ 10 லட்சம் கீழ் உள்ள 60 சதவீத எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இப்போது டிஜிட்டல் மயமாகியுள்ளன. இதற்கு அதிக பரப்பில் இன்னும் அதிக அளவில் டிஜிட்டல்மயமாகியுள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பலனை உணர்ந்தால், அவற்றுக்கான் கடன் தகுதி மேம்படும்,” என்கிறார் ஒமிடியார் நெட்வொர்க் முதலீட்டு இயக்குனர் அனுராதா ராமசந்திரன்.
“டிஜிட்டல் கடன், இந்திய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் உலக அளவில் செயல்திறன் பெற வழிவகுக்கும் என்று ஒமிடியார் நெட்வொர்க் நிர்வாக இயக்குனர் மற்றும் பங்குதாரர் ரூபா குட்வா கூறினார்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்; சைபர்சிம்மன்