Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

3 குழந்தைகளின் தாய், வெள்ளை மாளிகை ஆலோசகர், ஃபார்சூன் 40 இளம் தொழிலதிபர் இவாங்கா ட்ரம்ப்!

அமெரிக்க அதிபரின் மகள் என்பது மட்டுமல்லாமல் தன் கடின உழைப்பால் 38 வயதான இவாங்கா ட்ரம்ப், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக திறம்பட செயல்படுகிறார்.

3 குழந்தைகளின் தாய், வெள்ளை மாளிகை ஆலோசகர், ஃபார்சூன் 40 இளம் தொழிலதிபர் இவாங்கா ட்ரம்ப்!

Wednesday February 26, 2020 , 2 min Read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றார். அவருடன் அவரின் மனைவி மெலினியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப் மற்றும் அவரின் கணவரும் இந்தியா வந்திருந்தனர். அப்போது இந்திய மக்களின் மனம் கவர்ந்தவராக இவாங்கா ட்ரம்ப் ஆனார். அவர் ட்ரம்பின் மகளாக மட்டும் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை, இவாங்காவுக்கு பலமுகங்கள் இருக்கிறது என்று அப்போதுதான் பலர் அறிந்து கொண்டனர்.


வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவர்கள் அனைவரும் கடினமான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர்களே. வெற்றிக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை, நாடுகளும் எல்லையல்ல. இத்தகைய தனது கடின உழைப்பால் ஓர் 38 வயது இளம்பெண் இன்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக திறம்பட பணியாற்றி வருகிறார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவியின் மூத்த மகள் இவாங்கா டிரம்ப்.


அதிபரின் மகள் என்பதற்காக அவருக்கு இப்பதவி வழங்கப்படவில்லை. அவரது கடின உழைப்பும், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த இவாங்காவின் சித்தாந்தமே அவருக்கு இந்த பதவியை பெற்றுத் தந்துள்ளது.

Ivanka trump

இவாங்கா ட்ரம்ப். பட உதவி: ட்விட்டர்

2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், மீண்டும் வரும் தேர்தலில் போட்டியிட்டால் நீங்கள் மீண்டும் வெள்ளை மாளிகையில் அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்றுவீர்களா என பத்திரிக்கையாளர் இவரிடம் கேள்வி எழுப்பியபோது,

“எனக்கு என் குடும்பமும், குழந்தைகளும்தான் முக்கியம். குழந்தைகளின் நலன் சார்ந்தே எனது அனைத்து எதிர்காலத் திட்டங்களும் இருக்கும். எனவே நான் முடிந்தளவுக்கு இனிவரும் காலங்களில் அரசுப் பணிகளில் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார் மூன்று குழந்தைகளின் தாயான இவாங்கா டிரம்ப்.

இவரின் மண வாழ்க்கை குறித்த தகவல்கள் நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. மிகவும் சுதந்திரமான அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்து மாடலிங், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி பிரபலமான இவர், தனது காதல் கணவர் ஜேர்ட் குஷ்னரை கைபிடிப்பதற்காக மிகுந்த கட்டுப்பாடுகளும், பழைமைவாதமும் நிறைந்த யூத மதத்துக்கு மாறினார். இதனால் வெள்ளி, சனிக்கிழமைகளில் போனைக் கூட கையில் எடுக்காமல் முழுக்கமுழுக்க ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருவதாக ஓர் தொலைக்காட்சி பேட்டியொன்றியில் தெரிவித்துள்ளார்.

இவாங்கா

1997ல் தனது பதினைந்தாவது வயதில் ‘மிஸ் டீன் அமெரிக்கா’ அழகிப் போட்டியைத் தொகுத்து வழங்குவதற்காக வெளியுலகில், பொதுவெளியில் காலடி எடுத்து வைத்த இவர், விரைவிலேயே புகழ்பெற்ற டீன் என்ற அமெரிக்க பத்திரிக்கையின் அட்டைப் படத்தை அலங்கரித்தார். அப்போது இவருக்கு வயது 16. 17 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த இவர், தனது தந்தையைப் போலவே தொலைக்காட்சித் துறை மட்டுமன்றி, ரியல் எஸ்டேட் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.

இதையடுத்து, 2014ல் ஃபார்ச்சூன் பிசினஸ் பத்திரிகை வெளியிட்ட 40 வயதுள்பட்ட சிறந்த 40 தொழிலதிபர்களில் இவாங்கா 33வது இடம்பிடித்தார். 2015ல் உலகப் பொருளாதார மன்றம் இவருக்கு 'யங் குளோபல் லீடர்' என புகழாரம் சூட்டியது.

அப்பா அமெரிக்க அதிபர் என்பதால்தான், மகள் ஆலோசகராக பதவி வகித்து வருகிறார் என யாரும் எளிதாக எண்ணி விடக்கூடாது. தனது பதினைந்து வயது முதல் இன்றுவரை பல்வேறு துறைகளில் தடம் பதித்து தன்னை நிலைநிறுத்தி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான நிலையிலும், கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த யூத மத கோட்பாடுகளை கடைப்பிடித்துக் கொண்டும்தான் அவர் இன்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவியில் வீற்றிருக்கிறார். இப்பணிக்காக அவர் இதுவரை ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ivanka

இவாங்கா ட்ரம்ப் இந்திய பயணித்தின் போது.

குழந்தைகளும், குடும்பமும்தான் தனது உலகம் என வாழ்ந்தாலும், தனது நாட்டின் முன்னேற்றுத்துக்காகவும் உழைக்கும் இவரைப் போன்ற பெண்கள் உலகம் முழுவதும் நிறைந்துள்ளார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் பெண்ணினத்துக்கே பெருமை என அமெரிக்காவே இவரைக் கொண்டாடுகிறது.