'800 பேருக்கு வேலை வாய்ப்பு; ஆனா...’ Zomato சிஇஓ பதிவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
January 25, 2023, Updated on : Fri Jan 27 2023 05:10:27 GMT+0000

- +0
- +0
உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை பணியை விட்டு நீக்கிக் கொண்டிருக்கும் போது,
நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.இந்தியர்களைப் பொறுத்தவரை ஜோமேட்டோ உணவு டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. உலகம் முழுவதும் பணி நீக்கம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், வேலையில்லாதவர்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தனது நிறுவனம் குறித்து ஊடகங்களில் வரும் பல செய்திகளுக்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் பதிலளித்துள்ளார்.

Deepinder Goyal, Founder & CEO, Zomato
வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி:
கடந்த ஆண்டு தொடங்கி பணி நீக்க நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கூகுள், அமேசான், மெட்டா, ட்விட்டர் என திரும்பிய பக்கமெல்லாம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஜோமேட்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஜோமேட்டோ நிறுவனத்தில் 5 வகையான பணிகளுக்கு புதிதாக 800 பேர் பணியமர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நியமனங்கள் CEO, General, Growth Manager, Product Owner மற்றும் Software Development Engineer ஆகிய பிரிவுகளின் தலைமைப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கூறியுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவும், மேலும், பணி விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தன்னைத் தொடர்புகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார். ஃபுட்டெக் நிறுவனர் ஒவ்வொரு பணி குறித்த விவரங்கள் மற்றும் தேவைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், ஜோமேட்டோ நிறுவனத்தைச் சேர்ந்த உயர்மட்ட ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உணவு விநியோக சேவையையும் ஜோமேட்டோ நிறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இரண்டு மாதங்களுகு முன்பு, செலவு குறைப்பின் ஒரு பகுதியாக 3 சதவீத ஊழியர்களையும் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த பதிவில், “இது ஒரு 24*7 வேலை, அதனால் பணி-வாழ்க்கை சமநிலை பற்றிய பாரம்பரிய ஊழியர்களின் மனநிலை வேலை செய்யாது,” என குறிப்பிடப்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இது உழைப்பு சுரண்டல் என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த பணி இடத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
ஜோமேட்டோ தோல்வி அடைந்ததா?
அடுத்தடுத்து சிக்கலில் சிக்கித் தவிப்பதால் ஜோமேட்டோ தனது வணிகத்தில் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் திணறி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. இவை அனைத்திற்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தனது லிங்க்டின் போஸ்ட் மூலம் பதிலளித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியாகும் ஜோமேட்டோ குறித்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என மறுத்துள்ள அவர், பார்ட்டனர் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பான சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

10 நிமிடங்களில் டெலிவரி:
அதிகரித்து வரும் நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக விரைவான டெலிவரி முறையை ஜோமேட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் திட்டம் மார்ச் 2022ம் ஆண்டு முதன் முறையாக டெல்லி குருகிராமில் தொடங்கப்பட்டது. பின்னர், இந்த சேவை பெங்களூருவிலும் தொடங்கப்பட்ட நிலையில், மிகவும் குறுகிய காலத்தில் டெலிவரி செய்வது பணியாளர்களுக்கு பாதுகாப்பானது அல்ல என கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, ஒரு பகுதியில் அடிக்கடி ஆர்டர் செய்யப்படும் 30 வகையான உணவுகளை அடிப்படையாகk கொண்டு 'ஃபினிஷிங் ஸ்டேஷன்' அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடங்களில் டெலிவரி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- +0
- +0