Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அதிர்ஷ்டமும் பேருந்தும்: நமக்கும் பொருந்தும் கிங் லு வாழ்க்கைத் தத்துவம்!

வாய்ப்புகள் வரும்போது அதைப் பயன்படுத்த தயாராகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குய் லுவின் சொந்த வாழ்க்கைத் தத்துவம்.

அதிர்ஷ்டமும் பேருந்தும்: நமக்கும் பொருந்தும் கிங் லு வாழ்க்கைத் தத்துவம்!

Wednesday March 06, 2024 , 2 min Read

உறுதியும் தயார் நிலையும் ஒருவரின் விதியை எவ்வாறு வடிவமைக்கும் என்பதற்கு குய் லு (Qi Lu) கடந்து வந்த பாதையின் கதை ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம்.

அதிர்ஷ்டம் குறித்து குய் லு உதிர்த்த தனித்துவமான கண்ணோட்டம் இது:

ஓர் உருவகமாக அல்லது ஒப்புமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘வாய்ப்பு’ என்னும் பேருந்தில் ஏறிட பஸ் கட்டணம் என்னும் ‘தயார் நிலை’ தேவை.

சீனாவின் ஷாங்காய் அருகே வறுமையில் வளர்ந்த குய் லுவின் ஆரம்பகால வாழ்க்கை சவாலானதாக இருந்தது. ஆயினும்கூட, அவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஒரு முக்கிய நபராக உயர்ந்தார்.

குறிப்பாக, ‘பிங்’ தேடல் இயந்திரப் பிரிவை வழிநடத்தினார். எளிமையான பின்னணியில் இருந்து, உலகின் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் ஆன்லைன் சேவைகளின் தலைவரான அவரது பயணம் அசாதாரணமானது.

qi lu

அதிர்ஷ்டமும் பேருந்துப் பயணமும்

வெற்றியை அடைவதில் அதிர்ஷ்டத்தின் பங்கு பற்றிக் கூறும்போது, ​​குய் லு ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கினார்.

‘வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒரு பங்கு வகிக்கிறது. ஆனால், அந்த அதிர்ஷ்டம் பலர் நினைக்கும் விதத்தில் இருக்காது’ என்கிறார் .

அதிர்ஷ்டத்தை ஒரு சீரற்ற வாய்ப்பாகவோ அல்லது லாட்டரியாகவோ பார்க்காமல், குய் லு அதை ஒரு பேருந்து சேவையுடன் ஒப்பிடுகிறார்.

நிஜ வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒப்புமை ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.

குய் லுவின் கருத்துப்படி, வாழ்க்கை ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதைப் போன்றது. வாய்ப்புகள் என்பது பேருந்துகளைப் போலவே, அவ்வப்போது வரும். நீங்கள் ஒன்றை தவறவிட்டால், அதன் வழியில் இன்னொன்று எப்போதும் வரவே செய்யும். இருப்பினும் முக்கியமான காரணி, நம் தயாரிப்புத் தன்மையில் உள்ளது.

இங்கே ‘தயார் நிலை’ என்பது பேருந்துக் கட்டணத்தைப் போன்றது என்பதை லு வலியுறுத்துகிறார். எத்தனை பேருந்துகள் (வாய்ப்புகள்) வந்தாலும், நீங்கள் தயாராக இல்லை என்றால், நீங்கள் அவற்றைப் பயன்படுத்த முடியாது.

அதிர்ஷ்டம் பற்றிய இத்தகைய தத்துவம், அதிர்ஷ்டம் ஒரு சீரற்ற, கட்டுப்படுத்த முடியாத காரணியாக இருந்து கவனத்தை மேலும் கணிக்கக்கூடிய மற்றும் ஒருவரின் செயலுறுதியாகவும் மாறுகிறது என்பதே.

வாய்ப்புகள் வரும்போது அதைத் தட்டிப் பறிக்கத் தயாராகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குய் லுவின் சொந்த வாழ்க்கை. அவரது பயணமே இந்தக் கொள்கைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

qi lu

குய் லுவுக்கு ஆரம்ப நாட்களில் கடும் சவால்கள் இருந்தபோதிலும், அவரது தயாரிப்பு, தயார் நிலை மற்றும் கடின உழைப்பு வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த அவருக்கு உதவியது. தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு இட்டுச் சென்றது.

குய் லுவின் கதை அவரது தொழில்முறை சாதனைகளைப் பற்றியது மட்டுமல்ல. இது அதிர்ஷ்டத்துக்கும் தயாராக இருத்தலுக்கும் இடையிலான சமநிலை பற்றிய பாடம்.

வாய்ப்புகள் எப்போது வரக்கூடும் என்பதை அதிர்ஷ்டம் தீர்மானிக்கும் அதே வேளையில், இந்த வாய்ப்புகளை ஒருவர் அதிகம் பயன்படுத்த முடியுமா என்பதை ஒருவரின் தயார் நிலைதான் தீர்மானிக்கிறது.

சீனாவின் ஒரு கிராமத்தில் வறுமை நிலையில் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர் பதவிக்கு உயர்ந்த அவரது பயணம், ஒருவரின் பாதையை வடிவமைப்பதில் உள்ள தயார் நிலையின் ஆற்றலை விளக்குகிறது.

வாய்ப்புகள் வரும்போது நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், கதவைத் திறக்க நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது என்பதையும் குய் லுவின் நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் வணிகத்திற்கு அப்பாற்பட்ட வெற்றியின் பயணத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது பற்றிய ஆழமான புரிதலையும் வழங்குகிறது.

மூலம்: Nucleus_AI




Edited by Induja Raghunathan