வலிமைமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் 'ஸ்டிர்'
மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற அவர்களுக்கு கல்வி அளிக்கும் ஆசிரியர்களை வலிமையானவர்களாக மாற்றுகிறது ஸ்டிர் எனும் லாப நோக்கமற்ற அமைப்பு
மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த 90 சதவீதமான குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பிக்கப்பட்டு விடுகிறார்கள். இது கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ளும் அரசு, நன்கொடையாளர்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியோருக்குக் கிடைத்த நற்சான்று தான். ஆனால் இவ்வாறு சேர்க்கப்பட்டு விட்டாலும் பிள்ளைகளில் 24 கோடிப் பேர் பள்ளியில் கிட்டத்தட்ட எதுவுமே கற்றுக்கொள்வதில்லை என்பது தான் உண்மை. ஐந்தாம் வகுப்புப் படிக்கும் இந்தியக் குழந்தைகளில் 50 சதவீதம் பேர் மூன்றாம் வகுப்பின் தரத்திற்கும் கீழாகப் பின் தங்கி இருக்கின்றனர். (ASER 2014)) உகாண்டாவைச் சேர்ந்த மூன்றாம் படித்து வந்த மாணவர்களுக்கு கதைப் பிரதியைக் கூட வாசிக்க முடிவதில்லை. அதேபோல 70 சதவீத மாணவர்கள் தங்களது அடிப்படைக் கணக்கைக் கூட போடமுடிவதில்லை. (umezo 2014). உலகளவிலான கற்போருக்கான நெருக்கடியில் இவர்களும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். இந்நெருக்கடி நம் காலத்தின் மனித உரிமை நெருக்கடியாக மாறக் கூடிய அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவரும் தாங்கள் இந்தச் சமூகத்திற்கு அளிக்க வேண்டிய பங்கு குறித்தும் அவர்களது ஆற்றல் குறித்தும் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கிறது கல்வி நெருக்கடி. தாங்கள் கற்றதை வெளிப்படுத்துவதில் மாணவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுமானால் அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஆசிரியர்களை வலிமை மிக்கவர்களாக மாற்றுவது தான் சிறந்த அணுகு முறை என்று சமூக அக்கறை உடைய பலரும் அடிக்கடிப் பேசத் தலைப்பட்டுள்ளனர்.
சரத் ஜீவன் தன் வாழ்நாளில் 20 ஆண்டுகாலத்தை பெருநிருவனங்களுடன் செலவிட்டு வந்தார். பூஷ் ஆலன், இ-பே போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்தார். 2007 ஆம் ஆண்டு தன் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு இங்கிலாந்தில் ஆசிரியர்கள் கற்பதற்கான ‘கற்பிக்கும் தலைவர்கள்’ என்ற ஒருஅமைப்பைத் துவக்கினார். அது ஆசிரியர்களின் ஆற்றலின் மூலம் கல்வி முறையில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் அவருக்கு அளித்தது.
அதன் பிறகு அவர் "ஸ்டிர்" என்ற அமைப்பை உருவாக்குவதற்காக இந்தியாவிற்கு வந்து விட்டார். அதைத் துவக்கும் முடிவிற்கு ஏன் வந்தார் என்பது பற்றி நம்மிடம் தெரிவித்தார், "இந்தியாவில் கற்பிப்பதில் உள்ள பிரச்சனைகளை ஆசிரியர்களால் மட்டுமே எப்படித் தீர்க்க முடியும் என்ற எண்ணம் எனக்கு உதயமாயிற்று. மும்பையின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தராவியில் பெரும் பணக்காரர்களின் பணத்தைப் பயன்படுத்தி கணக்குக் கற்பிக்கும் ஒரு ஆசிரியரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவரைப் போன்று ஆசிரியர் தொழிலில் உள்ளவர்களை மாற்றத்திற்கான சக்தியாக வலிமை பெறச் செய்வது எப்படி என்ற கேள்வி என்னுள் எழுந்தது’’ ஸ்டிரில் அவர் செய்த சேவைக்காக 2014 ஆம் ஆண்டிற்கான அசோகா விருது சரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டிரின் இந்தியாவிற்கான திட்டத்தின் இயக்குனரும் அதை வடிவமைத்து அதில் பங்குதார்ராக விளங்கும் வினோத் கரட்டே, தான் செய்துவந்த பெருநிறுவன வேலையை விட்டு விட்டு ஸ்டிரில் இணைந்தது பற்றிக் கூறுகிறார் – "கல்வி வெளியின் போக்கு உங்கள் வேலையின் ஒரு அங்கம், அதுதான் முன்னணி முதலீட்டு வங்கியின் வளாகத் தேர்விற்கு நெருக்கமாக உன்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. அந்தக் கல்விக்காக நீ என்ன செய்தாய் என்ற டெல்லியின் பொருளாதார நிபுணர் ஸ்டிரின் முன்னோடி கேட்ட இரண்டு வரிக் கருத்து என்னைப் பற்றிக் கொண்டது. நான் சரத்தை சென்று பார்த்தேன். அவர் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அவரது அணுகுமுறை என்னுள் பெருந்தாக்கத்தை அளித்தது. ‘வழக்கமாக நாம் செய்வது போல கல்லூரிக்குப் போகாமல் ஸ்டிர் பள்ளியை நோக்கிப் போக வேண்டும்’ என்று கல்வி பற்றிய பிரச்சனைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவரது எண்ணம் கொக்கி போட்டு இழுத்தது. நான் ஸ்டிரினுள் குதித்து விட்டேன்.
தீர்க்க முயலும் பிரச்சனைகள்
வினோத் கூறுகிறார் "கல்விச் சூழல் நெருக்கடியில், ஆசிரியர்களின் பங்கை நாம் மறுக்க முடியாது. பள்ளிகளின் தோல்விக்கு காரணமான முதல் குற்றவாளிகள் ஆசிரியர்களே என பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டம் முழுமையானதல்ல என்று கூற முடியாது. ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்துவது, பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரை எப்படி ஈடுபடுத்தவது என்பதற்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவது என அரசாங்கம் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு வகைகளிலும் முயன்றுதான் வருகிறது. இருந்த போதிலும் மூன்றாம் உலக நாடுகளில் ஆசிரியர்களின் சுயமுனைப்பும், கட்டுப்பாடுகளும் வருத்தப்படக் கூடிய அளவிற்குப் பின் தங்கியேதான் இருந்து வருகிறது. இந்தியாவில் நான்கில் ஒரு ஆசிரியர் என்ற அளவில் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுகின்றனர். இதேபோல உகாண்டாவில் 84 சதவீத ஆசிரியர்கள் வாய்ப்புக் கிடைத்தால் போதும் பள்ளிக்குச் செல்வதில்லை. இதன் விளைவால், லாப நோக்கின்றி அல்லது லாப நோக்கோடு அரசு சார் மற்றும் அரசுசாரா அமைப்புகள் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் பல தீர்வுகளை முன்வைத்து வருகின்றன என்றாலும் அதன் ஆதாரச் சக்கரமான ஆசிரியர்களிடம் எந்தவிதமான மாற்றமும் உருவாகவே இல்லை’’ என்கிறார்.
முன்மாதிரி நடவடிக்கை
ஸ்டிரின் தலைமை, 10-12 பள்ளிகளில் இருந்து 30-35 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து மாதிரி வலைப்பின்னலை உருவாக்கி உள்ளது. இந்த வலைப்பின்னலின் வேலைகள் கல்வித் தலைவர்களால் (வள மேம்பாட்டாளர்கள் அல்லது ஆசிரியர்களால்) முன்னெடுத்துச் செல்லப்படும். நல்ல விளைவுகள் ஏற்படும் பகுதிகளுக்கு அவ்வப்போது செல்வதன் மூலம் இந்த வலைப்பின்னல் ‘மாற்றத்தை உருவாக்கும் ஆசிரியர் பயணத்தை’ நடத்துகிறது. இப்பயணம் ஆர்வமூட்டல், ஒருங்கிணைதல், உறைநிலை மாற்றம் என மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளது.
ஆர்வமூட்டுதல்
ஆசிரியர்களின் சின்னச் சின்ன கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறோம். கற்பித்தலில் தாங்கள் மேற்கொள்ளும் சின்னச் சின்ன புதிய உத்திகளால் ஆசிரியர்கள் வகுப்பில் ஏற்றுக் கொள்ளும்படியான மாற்றங்களை கொண்டுவர முடியும். அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும் போது ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தினால் வலைப்பின்னலுக்கு வெளியே உள்ள ஆசிரியர்களும் சின்னச் சின்ன மாற்ற உத்திகளை பின்பற்றத் தொடங்குவார்கள்.
ஒருங்கிணைதலின் போது ஆசிரியர்களுக்கு வாசிப்பு, வகுப்பறை போன்ற வடிவங்களில் சவாலாக விளங்கும் அம்சங்களைக் களைவதற்கு ஆசிரியர்கள் கூட்டு ஆய்வு மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறது.
உறைநிலையில் மாற்றம்
இறுதியாக எமது வலைப்பின்னல் கற்றலில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் கற்றுக் கொண்டு வலைப்பின்னல் செயல்பாட்டை முழுமையாக வழி நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வினோத் கூறுவது - மாணவர்களைக் கீழ்மட்ட நிலையில் இருந்து மேலே கொண்டு வருவதற்கு மாறுபட்ட அணுகுமுறை மிகவும் அவசியமாக இருக்கிறது. அழுத்தம் மேலோட்டமாக மெல்லியதாகக் கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பயணத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவ அடிப்படையான சமுதாய சிந்தனை, சமூகத்திற்கு தேவை. என்கிறார். அவர் மேலும் "தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக இணை மாற்ற உருவாக்குனராக இத் திட்டத்தில் சேர்கிற ஒருவருக்கு விரைவிலேயே மாற்ற உருவாக்குனராக பதவி உயர்வு தரப்படுகிறது. பிறகு அவரே இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்குவார். நாங்கள் இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆசிரியர் பயிற்சி நிறுவனமான ரோகேம்பியன் பல்கலைக்கழத்தின் பங்குதாரராக இருக்கிறோம். அவர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் பெற்றுத் தருகிறோம்’’.
கூட்டுச் செயல்பாடும் நிதியாதாரமும்
இவர்களது ஆதாரமான வலைப்பின்னல் செயல்பாடுகள் ஒரு இயக்க நடவடிக்கையாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்றபோதிலும் எமது வலைப்பின்னல் தனித்தே இயங்க முடியாது என்பதை எங்களது ஸ்டிர் குழு புரிந்து கொண்டுள்ளது. மாற்றத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் வலைப்பின்னல் அமைப்பிற்கு முழுமையான அடையாளத்தைத் தருவதற்காக மைய வலைப்பின்னலுக்கு இணையான பல அமைப்புகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
"இத்தகைய இயக்கத்தை தனித்துக் கட்டமைக்க முடியாது. கூட்டு நடவடிக்கை தான் எமது அணுகுமுறைக்கு அடிப்படைச் சக்தியாக இருக்கிறது’’ என்கிறார் வினோத். ஸ்டிர் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளை தனது பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்படுகிறது. உதாரணமாக உத்திரப்பிரதேசத்தில் SECRET, தெற்கு டில்லியில் நகராட்சியின் டில்லி கல்வித்துறை போன்றவற்றுடன் உறவு கொண்டுள்ளது. ப்ராதம், அமெரிக்கன் இண்டியா பவுன்டேசன், பார்தி பவுன்டேசன், எஜுகேட் கேர்ல்ஸ், அகான்க்சா ஆகிய தன்னார்வ அமைப்புகள் தங்கள் திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்து மகத்தான சக்தி அளிப்பது ஸ்டிர் அமைப்பின் உள்திட்டம் என்று கூறுகின்றனர். இதுவே மேலும் மேலும் பல ஆசிரியர்கள் ஸ்டிர் இயக்கத்தால் பலன் அடைந்து வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. முன்னணி ஆசிரியர் பயிற்சி தன்னார்வ அமைப்பான முக்டான்கன் என்ற அமைப்புடன் கூட்டுறவு வைத்துள்ளோம் என்கிறார் வினோத். அது எங்களது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கு உதவுகிறது’’.
ஸ்டிரிற்கு USAID, DFID, MacArthur, mastercard, ARK, UBS, Mulgo, Draper Richards Kaplan, Peery, segal foundation உள்ளிட்ட முப்பதுக்கும் மேலான அமைப்புகள் நன்கொடைகள் அளித்து வருகின்றன என்றாலும் ஸ்டிர் ஒரு லாப நோக்கற்று இயங்கும் அமைப்பாகும்.
தாக்கம், போட்டி, எதிர்காலத்திட்டம்
25 ஆசிரியர்களைக் கொண்டு துவங்கிய ஸ்டிர் இன்று 12000 ஆசிரியர்களைக் கொண்ட அமைப்பாக இந்தியாவிலும் உகாண்டாவிலும் வளர்ந்து நிற்கிறது. இந்தப் பெருமைகள் அனைத்தையும் ஸ்டிருடன் கைகோர்த்துச் செயல்படும் அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களது பங்குதாரர்களுக்கு சமர்ப்பிக்கிறார் வினோத். மனதை நெகிழச் செய்யும் சம்பவம் ஒன்றைச் சொல்கிறார் வினோத் "இத்திட்டத்தை நாங்கள் துவக்கியபோது எங்களுடன் தன்னை இணைத்தக் கொண்டு பணியாற்றிய ஆசிரியர் இந்திரா எங்களிடம் இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே தான் சேவையில் நீடிக்கப்போவதாகவும் அதன் பின்னர் ஓய்வு பெற இருப்பதாகவும் சொன்னார். ஆனால் எங்களுடன் ஸ்டிருடன் பணியாற்றிய உற்சாகத்தில் உள்ளூர் பள்ளிகளில் அவரது சின்னச்சின்ன புதிய உத்தி முறைக் கண்டுபிடிப்புகளால் எங்களது இயக்கத்தில் முக்கியமான ஒருவராகி விட்டார் இந்திரா. பதினெட்டு மாதங்களுக்குப் பின்னர் உலகளாவிய கல்வி மாநாட்டில் பில் கிளிண்டன், டோனி பிளேர் எதிரில் உரையாற்றினார்’’.
இத்தத் துறையில் போட்டியே இருப்பதாகக் கருதவில்லை ஸ்டிர். கல்வி வெளியில் நாம் மேலும் மேலும் முன்னேறி வர வேண்டியுள்ளது. புதிய புதிய பிரச்சனைகளையும் கையில் எடுக்க வேண்டியுள்ளது. கல்வி வெளியைப் பல புதிய பிரச்சனைகள் பீடித்துக் கொண்டே உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு ஆற்றல் மிக்க பலர் மேலும் மேலும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்கிறார் வினோத்.
எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கூறும்போது வினோத் "இந்தியாவிலும் உகாண்டாவிலும் மூன்று மில்லியன் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை நிகழ்த்தவல்ல ஆசிரியர்கள் 120,000 பேரை இன்னும் ஐந்தாண்டுகளில் உருவாக்குவது தான் எங்களது திட்டம். இந்தியாவில் ஸ்டிர் திட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கு நெருக்கமாக உள்ள தன்னார்வ மற்றும் அரசு அமைப்புகளை அவர்களது சொந்தத் திட்டத்தைத் உருவாக்கச் செய்து மூன்று மாநிலங்களின் கல்வித் திட்ட அணுகுமுறையில் 10% சதவீதமான அளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பத்துலட்சம் வலிமையான ஆசிரியர்களை உருவாக்கி 2022 ஆம் ஆண்டில் 40 கோடி மாணவர்களிடம் தாக்கத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எங்களது லட்சியத்தைச் சாதிக்க நினைக்கிறோம்’’.
நாம் சந்திக்கும் கல்வி நெருக்கடியில் தான் பெற்ற தாக்கம் குறித்து சரத் கூறினார் – ‘’மகாத்மா காந்தியும், மார்டின் லூதர் கிங்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் காவிய நாயகர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் சமூகத்தை மாற்ற வல்ல சமூக உரிமைக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள். நம் காலத்து கல்வி நெருக்கடியானது இந்தியாவில் சமூக உரிமைப் பிரச்சனையாக மாறி விட்டது. கல்வி நமது நாட்டின் வருங்காலத் தலைமுறையை வடிவமைக்கக் கூடியது. நம் காலத்தில் ஒரு தலைவரிடம் இருந்து பெறுவதற்குப் பதிலாக பல லட்சம் ஆசிரியர்களிடமிருந்து ஒளிக் கீற்றை பெற வேண்டிய தேவை இருக்கிறது. மாணவர்கள் தங்களது மெய்யான ஆற்றலை உணரச் செய்ய ஆசிரியர்களால் தான் உதவ முடியும்’’ என்றார் தன் பங்கிற்கு சரத்.
இணையதள முகவரி: STIR