'ஸ்டார்ட் அப் பயணம்'- தொழில் முனைவோருக்கு ஓர் புதிய அனுபவம்!

'ஸ்டார்ட் அப் பயணம்'-  தொழில் முனைவோருக்கு ஓர் புதிய அனுபவம்!

Sunday January 31, 2016,

2 min Read

'ஹெட்ஸ்டார்ட்' (Headstart) என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழு, தொடக்க நிறுவனங்களை பார்வையிடுவதற்கான “ஸ்டார்டப் பயணம்” (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டத்தை வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இப்பயணம், கோயம்புத்தூர் ஸ்டார்ட் அப் அலுவலகங்களுக்குச் செல்லவுள்ளது. இது முழுக்க முழுக்க மாணவ மற்றும் தொழில் முனைவோர்களுக்காகவே தொடங்கப்பட்ட விழிப்புணர்வு முயற்சியாகும். இன்றைய காலகட்டங்களில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவர்கள், சமூக வளைதளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில்தான் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றி கேட்டும், படித்தும் தெரிந்து கொள்கிறார்கள். 

image


உண்மையான ஸ்டார்ட் அப் பற்றிய முழு விவரங்களை அவர்களுக்கு அனுபவம் மூலமாக பெற்றுத்தருவதே ஸ்டார்டப் பயணத்தின் லட்சியமும் அதுவே. இதில் தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள், உத்திகள், சிக்கல்களிலிருந்து மீண்டு வரும் அனுபவங்கள் பற்றிய விவரங்களும் விளக்கப்படும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவர்களை ஊக்குவித்து, தொழில்முனைவுச் சூழலின் நன்மைகளைப் பற்றி நேர்மையாக வெளிப்படுத்தும் ஸ்டார்ட் அப் சமுதாயத்தின் ஒரு முயற்சியாகும்.

"ஸ்டார்ட் அப் பயணம்" என்றால் என்ன?

6 சக்கரங்கள் | 7 தொடக்கங்கள் | 42 பயணிகள்

ஒரு மனிதன் தன் இலக்கை அடைய சில கரடு முரடான சாலைகள், குறுகிய பாதைகள், வேகத்தடைகள், போக்குவரத்து குறிகளை கடக்க வேண்டியது இருக்கும். இலக்கை விட இலக்கை அடைவதற்கான பயணமே முக்கியமாகும். ஸ்டார்ட் அப் பயணத்தின் இலக்கும் அதுவே. அனுபவசாலிகளிடம் நேரடியாக சென்று அவர்களின் ஸ்டார்ட் அப் பயணத்தை பற்றிய முழு விவரங்களை அவரை பார்த்தும் கேட்டும் கற்றுக்கொள்ளலாம்.

இந்திய இளைஞர்களுக்கு மத்தியில் தொழில் முனைவுக் குறித்தான எண்ணங்களை ஊக்குவிக்கும் முயற்சியே இந்தப் பயணம். பங்கேற்பாளர்களை, புதிதாக மலரக்கூடிய பல நிறுவனங்கள் மற்றும் நிறுவப்பட்ட பல நிறுவனங்களுக்கு, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கொண்டு செல்வதே ஸ்டார்ட் அப் பயணத்தின் திட்டம் ஆகும்.

image


பயணம்:

1. காலை 8 மணி: காந்திபுரத்தில் நிற்கக்கூடிய ஸ்டார்ட் அப் பயணப் பேருந்தில் பங்கேற்பாளர்கள் ஏறிய பிறகு, பயணம் இனிதே தொடங்கும்!

2. 10 மணி: முதல் ஸ்டார்ட் அப் நிறுவன அலுவலகம் அடைந்த பின், அதன் நிறுவனர் அவரது தொழில்முனைவு பயணத்தைப் பற்றி அவரது அலுவலகத்தில் இருந்து பகிர்ந்து கொள்வார்.

3. 12 மணி: அடுத்த நிறுத்தத்திற்கு செல்ல ஸ்டார்ட் அப் அலுவலகம் இரண்டில் இருந்து பேருந்தில் ஏறிவிட வேண்டும்.

4. பங்கேற்பாளர்களின் பசியைப் போக்க, இரண்டாம் ஸ்டார்ட் அப் நிறுவனருடன் பட்டிஸ் கஃபே பயணம்.

5. முதல் மாணவ தொழில்முனைவருடன் பயணம்.

6. இரண்டாம் மாணவ தொழில்முனைவருடன் பயணம்.

7. 2 மணி: அடுத்த நிறுத்தம் மூன்றாவது ஸ்டார்ட் அப் அலுவலகம்.

8. 4 மணி: மூன்றாவது தொழில்முனைவருடன் பயணம் தொடங்கும்.

தொடக்க நிறுவனங்களை, சரியான தகுதியுள்ளவர்களுடன் இணைத்து, அவர்களது எண்ணங்களை, பெற்றுள்ள குழுக்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஒன்றுசேர்ப்பதே எங்களின் குறிக்கோள் ஆகும். நம் நாட்டின் மூலை முடுக்கான இடங்களில் இருந்தும் பல பல அற்புதமான எண்ணங்கள் தோன்றுகின்ற என்பதை நாங்கள் நம்புகிறோம். அவற்றையெல்லாம் இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். 

ஸ்டார்ட் அப் பயணம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு: StartupPayanam

இப்பயணத்தின் மீடியா பார்ட்னர்: தமிழ் யுவர்ஸ்டோரி