Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

’தெருவில் இருந்து ஆகாயம் வரை... ’ உலகெங்கும் விமானத்தை பறக்கவிட்ட ’ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனரின் கதை!

’தெருவில் இருந்து ஆகாயம் வரை... ’ உலகெங்கும் விமானத்தை பறக்கவிட்ட ’ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனரின் கதை!

Thursday October 20, 2016 , 2 min Read

’தெருவில் இருந்து ஆகாயம் வரை... ’ - இந்தியாவின் பதினாறவது பணக்காரரின் வாழ்க்கை பயணத்தை இப்படி வர்ணிக்கலாம். நரேஷ் கோயலின் குடும்பம் ஓட்டாண்டி ஆன போது அவருக்கு வயது 12. அவர்களிடம் இருந்த அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் போனது. 

“சாப்பிடக்கூட என்னிடம் பணம் இல்லை. படிக்க, ஒரு இடத்தில் தங்க கூட என்க ளிடம் பணம் இல்லை...” என்று நரேஷ் சிஎன்பிசி டிவி18 பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். 
பட உதவி: ்Google Images (Representational picture)

பட உதவி: ்Google Images (Representational picture)


நரேஷ், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், இவரது குடும்பம் பஞ்சாபில் உள்ள சங்க்ரூர் எனும் இடத்தில் நகை வியாபார தொழிலில் ஈடுபட்டிருந்தது. திடீரென இவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவாலாக ஊரை விட்டே வெளியேறினார்கள். நரேஷின் தாயாரின் மாமா வீட்டில் தங்கி வந்தனர். படிப்பில் ஆர்வமாக இருந்த நரேஷ், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெரு விளக்கடியில் அமர்ந்து படிப்பார். கல்வி தனக்கு ஒரு நல்ல வருங்காலத்தை அமைத்து தரும் என்று அவர் நம்பினார். 

பட்டயக்கணக்காளராக ஆக விரும்பிய நரேஷ், பி.காம் படிப்பில் சேர்ந்தார். 1967 இல் பட்டம் பெற்றப்பின், வீட்டின் வறுமை காரணமாக படிப்பை தொடரமுடியாமல், தனது மாமாவின் டிராவல் ஏஜென்சியில் காஷியராக பணியில் சேர்ந்தார். அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் கிடைத்தது. 

நரேஷின் உழைப்பிற்கும், நேர்மைக்கும் 1969 இல் பதில் கிடைத்தது. இராக்கி ஏர்வேசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை கிடைத்தது. 1971 முதல் 1974 வரை ALIA, ராயல் ஜார்டேனியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பிராந்திய மேலாளராக பணிபுரிந்தார். இந்த காலக்கட்டத்தில், பல வெளிநாடுகளுக்கு செல்லவும், அங்கு போக்குவரத்துத்துறை தொழில் குறித்த பயிற்சிகளும் பெற நரேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. 

1974 இல் நரேஷ் தான் சொந்தமாக நிறுவனம் தொடங்க முடிவு எடுத்தார். தன் தாயாரிடம் இருந்து கொஞ்சம் பணத்தை கடனாக பெற்று தன் சொந்த டிராவல் ஏஜென்சி ஒன்றை தொடங்கினார். அதன் பெயர் ‘ஜெட் ஏர்’. ஏர் ப்ரான்ஸ், ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் மற்றும் காத்தே பசிபிக் போன்ற பன்னாட்டு விமான நிறுவனங்களில் மார்க்கெடிங் மற்றும் விற்பனை பிரிவை கையாண்டது இவரது ஏஜென்சி நிறுவனம். 

1991 இல் இந்தியாவில் விமான போக்குவரத்து துறைக்கு உருவாகிய சந்தை வாய்ப்பை கண்ட நரேஷ் அதை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். இவரது டிராவல் ஏஜென்சி, ‘ஜெட் ஏர்வேஸ்’ என்று மாற்றப்பட்டு ஒரு விமான நிறுவனமாக உருப்பெற்றது. 1993 இல் உள்ளூர் விமான போக்குவரத்தை மட்டும் நடத்தி வந்த ஜெட் ஏர்வேஸ், 2004 இல் சர்வதேச விமான பயணத்தையும் தொடங்கியது. 

2007 இல் ஜெட் ஏர்வேஸ், ’ஏர் சஹாரா’ நிறுவனத்தை கையகப்படுத்தி, 2010 இல் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனம் ஆனது. 

நரேஷ் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். நாடெங்கும் உள்ள விமானத்துறையில் உள்ள பிரச்சனைகள், தொழில் போட்டிகள், கட்டண போட்டிகள் என்று பல விஷயங்களை சந்தித்துள்ளார் நரேஷ். இருப்பினும் தொடர்ச்சியாக தனது தொழிலில் மாற்றங்களை கொண்டுவந்து இன்றளவும் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். மொத்த சந்தையில், 21 சதவீத விமான பயணிகள் அளவை ஜெட் ஏர்வேஸ் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2016 இல், ‘ஜெட் ஏர்வேஸ்’ தனது முதல் ஆண்டு லாபத்தை வெளியிட்டது. 8 ஆண்டுகளாக லாபக்கணக்கை வெளியிடாமல் இருந்த இவர்கள், தங்களது அதிக லாபத்தை 2016 இல் பெற்றதாகவும் கூறினர். இது குறித்து நரேஷ், ‘தி ஹிந்து’ நாளிதழ் பேட்டியில் கூறும்போது,

“ஜெட் ஏர்வேஸ் கடந்து 2 ஆண்டுகளில் தனது தொழிலை மறுசீரமைத்துள்ளது. எங்களது குறிப்பிட்ட முயற்சிகள் நல்ல பலனை தந்துள்ளது. அதன் காரணமாக தொழிலில் வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க லாபமும் அடைந்துள்ளோம்,” என்றார். 

கட்டுரை: Think Change India