‘என்னை போல் வேறு யாரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக் கூடாது’ - லட்சுமி பமானியின் துயரக் கதை!
`எந்த பெண்ணும் இதை அனுபவிக்கக்கூடாது'.. லட்சுமி பமானி!
இந்த வார சர்வைவல் தொடரில் பாலியல் தொழிலாளியாக இருந்த லட்சுமி பமானி என்பவர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை, அதிலிருந்து தப்பித்து வந்ததை பற்றி கூறுகிறார்.
”எனது கணவரின் கடுமையான துன்புறுத்தல்களை நான்கு வருடங்கள் சந்தித்த பிறகு அவரை விட்டு வெளியேறி நீண்ட தூரம் வந்துவிட்டேன். நான் ஏழு மாத கர்ப்பமாக இருந்தபோதும், என் கணவர் என்னைத் தொடர்ந்து அடிப்பார். அவர் என்னைக் கைவிட்ட பிறகு, அம்மா வீட்டிற்குச் செல்ல முயற்சித்தேன், ஆனால் என் அம்மா என்னைத் திரும்ப ஏற்க மறுத்துவிட்டார். நல்ல வேலை கிடைக்கவில்லை. என் குழந்தைகளுக்கும் எனக்கும் உணவுக்கும் வழிதேடி ஒரு வீட்டில் வேலைச் சேர்ந்தேன். ஒரு நாள், ஒரு நபர் என்னை அணுகி, அவருடன் நான் உறவு வைத்துக்கொண்டால் ரூ.100 தருவதாகக் கூறினார். அந்த நேரத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை, நாங்கள் பட்டினி கிடந்தோம். அதனால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்படித்தான் நான் முதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டேன்.
எனினும் வாழ்க்கையை நடத்துவதற்கு காய்கறிகளை விற்க முயற்சித்தேன். ஆனால் விற்பனையாளர் அவருடன் பாலுறவில் ஈடுபட்டால் அதற்கு ஈடாக எனக்கு காய்கறிகளை மட்டுமே தருவதாகக் கூறினார். அவர் எனக்கு ரூ.2,000 மதிப்புள்ள காய்கறிகளைக் கொடுத்தார். அடுத்த சில ஆண்டுகளை நான் இப்படி செலவிட்டேன். ஆனால் இரண்டு சிறிய குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கு எனக்கு வேறு வழியில்லை, எனக்கு உதவ யாரும் இல்லை. என் கணவர் என்னை விட்டு வெளியேறினார்.
என் சொந்த குடும்பத்தினர் என்னை மறுத்துவிட்டனர். நான் சந்தித்த ஒரே நபர்கள் எனது வாடிக்கையாளர்கள். அவர்களின் வேலை முடிந்ததும், அவர்கள் எனக்கு ரூ.10 அல்லது ரூ.20 தருவார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இப்படி கடந்த நிலையில், தபஸும் ஷேக் என்பவரை சந்தித்த நாளில் எனது வாழ்க்கை மாறியது. அவர் என்னிடம் காய்கறி வாங்கும் பெண். ஒருநாள் என்னிடம் காய்கறி வாங்குவதை நிறுத்திவிட்டார். அந்த நாள் எனக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தபோது, நான் மயங்கிவிட்டேன். நான் இரண்டு நாட்களுக்கும் மேலாக பட்டினி கிடந்தேன்.
தபஸும் பெக்காலு மஹிலா சங்கா என்ற சமூக அமைப்பில் பணிபுரிந்தார். இது சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பெண்களுக்கான அமைப்பாகும். நான் அவர்களின் தன்னார்வத்தொண்டு அலுவலகத்திற்குச் சென்றபோது, சேவை ஒருங்கிணைப்பாளர்கள் எனது நிலைமை குறித்து என்னிடம் கேட்டார்கள். எனது முழு கதையையும் அவர்களிடம் சொன்னேன் - என் கணவர் என்னை எப்படி துஷ்பிரயோகம் செய்தது, பாலியல் தொழிலில் தள்ளப்பட்டது குறித்து பேசினேன்.
இந்த அமைப்பில் சேர்ந்த பிறகு, நான் மட்டும் இந்த அதிர்ச்சியை சந்தித்ததில்லை என்பதையும், என்னைப் போன்ற பலர் இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தேன். இந்த அமைப்பு எனக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க உதவியது. என் குழந்தைகளை ஒரு பள்ளியில் அனுமதித்தது. காய்கறி விற்பனையாளரிடம் பேசி அவருடன் உடலுறவு கொள்ள என்னை ஒருபோதும் வற்புறுத்த வேண்டாம் என்று எச்சரித்தது. பின்னர் அவர்களின் சேத்தானா திட்டத்தில் என்னைச் சேர்த்து எனது தொழிலை மீண்டும் தொடங்க ரூ.20,000 வழங்கப்பட்டது.
என் குழந்தைகள் என் பலம்; அவர்கள் தான் என் தைரியம். அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்க என்னை நானே உத்வேகம் கொடுத்துகொண்டு இருக்கிறேன். என் துயரத்திலிருந்து என்னை வெளியேற்ற எனக்கு உதவியதால் நான் தபஸூமை சந்தித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது யாராவது என்னிடமிருந்து இப்போது பாலியல் உறவு வேண்டும் என்று கேட்டால், ’உங்களில் யாராவது என்னைத் தொட்டால், எனது அமைப்பு உறுப்பினர்களை அழைப்பேன்,’ என்று சொல்கிறேன்.
நீங்கள் என்னை குடிக்கவும் நடனமாடவும் பயன்படுத்தினீர்கள். இப்போது நீங்கள் என்னை குடிக்க கட்டாயப்படுத்தினால், அதற்கு பதிலாக நான் உங்களை அடிப்பேன், என்று கூறிவிடுவேன்.
தான் கடந்து வந்த போராட்டங்கள், வேறு எந்த பெண்ணும் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது, என வேதனையும் நம்பிக்கையுடனும் பேசும் லட்சுமி பமானி, தாராஸ் கூட்டணி என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார், இது பாலியல் பணித் தலைவர்கள் மற்றும் அவர்களின் சமூக அமைப்புகளில் பெண்களுக்கான தேசிய தளமாகும்.
தகவல் உதவி: சோஷியல் ஸ்டோரி | தமிழில்: மலையரசு