Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வருவாய் ஈட்டக்கூடிய 100 ஆன்லைன் வணிக ஐடியாக்கள்!

5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் வருவாய் ஈட்டக்கூடிய 100 ஆன்லைன் வணிக ஐடியாக்கள்!

Tuesday February 27, 2018 , 13 min Read

வருவாய் ஈட்டுவதற்கு எண்ணற்ற வழிகள் இருப்பினும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியடைய முடியும். முதலில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் ஒரு துறை அல்லது பிரிவை தேர்ந்தெடுத்து அதில் குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை செலவிட்டு உங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.

5,000 ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் வருவாய் ஈட்டக்கூடிய 100 ஆன்லைன் வணிக யோசனைகள் இதோ:

image


ஐடியா # 1 காமெடி க்ளப் : நகைச்சுவைத் திறன் கொண்ட எத்தனையோ பேர் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் தளம் இல்லாமல் தவிப்பதால் காமெடி ஆன்லைன் க்ளப் உருவாக்கி சிறப்புறலாம்.

ஐடியா # 2 வேடிக்கையான வீடியோ நூலகம் : குழந்தைகள் மற்றும் வளர்ப்புப்பிராணிகளின் வேடிக்கையான வீடியோக்களை மக்கள் விரும்புவதால் அவற்றை நூலகமாக தொகுத்தால் கண்டெண்ட் மார்கெட்டிங் பயன்பாட்டிற்குத் தேவைப்படுவோர் அணுகுவார்கள்.

ஐடியா # 3 ஆன்லைன் நடன வகுப்புகள் : நடன பயிற்சியை சிறு வீடியோவாக பதிவு செய்தால் நடனத்தில் ஈடுபாடு இருப்போரும் குடும்ப விழாக்களில் நடனமாட விரும்புவோரும் அதைக்கண்டு பயனடைவார்கள்.

ஐடியா # 4 ஆன்லைன் ரியாலிட்டி ஷோ : யார் வேண்டுமானாலும் ஆன்லைன் டிவி ஷோக்களை சொந்தமாக்கி பிரபல சானல்களுடன் போட்டியிடலாம்.

ஐடியா # 5 இசைப்பிரியர்கள் குழு : இதற்கான பிரத்யேக ப்ராடக்ட் உருவாக்க முடியாவிட்டாலும் இசைப்பிரியர்களை ஒருங்கிணைக்கும் குழுவை உருவாக்கலாம். வலைதளம் வாயிலாக செயல்பட்டு பின்னர் மொபைல் செயலிக்கு மாறலாம்.

ஐடியா # 6 இசைப்பள்ளி : ஆரம்பத்தில் இலவச யூட்யூப் வீடியோ சானலைத் துவங்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். தரமான இசைப்பள்ளியை உருவாக்கினால் சிறப்புறுவது உறுதி.

ஐடியா # 7 பார்ட்டி ஏற்பாட்டாளர் : இந்தப் பகுதியில் குழந்தைகள், இளம் வயதினர் போன்றோருக்கான பார்ட்டிகளை ஏற்பாடு செய்யலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கவனம் செலுத்தி பின்பு விரிவடையலாம்.

ஐடியா # 8 வைரல் வீடியோ தயாரிப்பு : வீடியோக்கள் குறைந்த நேரத்தில் அதிவேகமாக பரவிவிடுவதால் பல ஸ்டார்ட் அப்கள் இந்த சேவையை நாடுகின்றனர். எனவே இதற்கான சந்தை பெருகி வருகிறது.

ஐடியா # 9 கிரிக்கெட் ரசிகர்கள் க்ளப் : கிரிக்கெட் பொழுதுபோக்குத் துறையைப் போன்றே செயல்படுவதால் உங்களுக்கு பிடித்தமான வீரரை தேர்ந்தெடுத்து ரசிகர் மன்றத்தை உருவாக்கலாம்.

ஐடியா # 10 வட்டார விளையாட்டு க்ளப் : வட்டார அணிகளைக் கொண்டு ஐபிஎல் விளையாட்டு உருவாகி பிரபலமடைந்துள்ளதால் உங்களது வட்டார கிரிக்கெட் விளையாட்டிற்கான ஆன்லைன் விளையாட்டு க்ளப் உருவாக்கலாம்.

ஐடியா # 11 செய்தி மற்றும் போக்குகள் : சமீபத்திய கிரிக்கெட் செய்தி, கிரிக்கெட் சார்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஆகியவற்றை தொகுத்து ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்க்கலாம்.

ஐடியா # 12 உண்மைகள் மற்றும் ஆச்சரியங்கள் : வழக்கமான செய்திகளிலிருந்து வேறுபட்டு விளையாட்டு வீரர் குறித்தும் அவரது வாழ்க்கை மற்றும் விளையாட்டு குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கலாம்.

ஐடியா # 13 அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை : அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளையும் அது சார்ந்த நிறைவேற்றப்படும் பணிகளையும் தொகுத்து வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தினால் பலர் ஆர்வம் காட்டுவார்கள்.

ஐடியா # 14 செய்தித் தொகுப்பு : வெவ்வேறு செய்தி சானல்கள் வெவ்வேறு விதத்தில் செய்திகளை வெளியிடுவதால் அவற்றை தொகுத்து ஒரே இடத்தில் வழங்கினால் படிப்பவர்கள் ஒரே செய்தி குறித்த பல்வேறு கருத்துக்களைப் பெறமுடியும்.

ஐடியா # 15 போலியான செய்திகளை கண்டறிய உதவும் செயலி : போலியான செய்திகளால் பல்வேறு பிரச்சனைகள் எழுவதால் செய்திகளை உண்மையா போலியா என்பதை சரிபார்க்கும் முறையை அறிமுகப்படுத்தலாம்.

ஐடியா # 16 சுயசார்புடன்கூடிய வருவாய் : மக்கள் சுயசார்புடன் வருவாய் ஈட்ட உதவக்கூடிய ஆலோசனைகளை வழங்கலாம்.

ஐடியா # 17 விற்பனை செய்ய கற்றுக்கொடுக்கலாம் : பலர் விற்பனை முறையை சோதித்து தோல்வியுற்றே கற்றுக்கொள்வார்கள். உங்களுக்கு விற்பனை சார்ந்த அனுபவம் இருந்தால் வலைப்பக்கத்தை உருவாக்கி அதில் பகிர்ந்துகொண்டு உதவலாம்.

ஐடியா # 18 ஸ்டார்ட் அப்களுக்கான வடிவமைப்பு : ஸ்டார்ட் அப்கள் தங்களுக்கான பிரத்யேக வலைதளம் மற்றும் செயலியை வடிவமைப்பதில் சிக்கல்களை சந்திப்பதால் நீங்கள் அவற்றை வடிவமைத்து வெற்றியடையலாம்.

ஐடியா # 19 பணியிலமர்த்தும் முறை : சரியான நபரை பணியிலமர்த்தவில்லையெனில் நிறுவனத்தில் மதிப்பு குலைந்துவிடும். நீங்கள் பணிக்கு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் முறையில் புதுமைகளை புகுத்தி செயல்படலாம்.

ஐடியா # 20 கண்டெண்ட் மார்கெட்டிங் : உங்களுக்கு கண்டெண்ட் மார்கெட்டிங் பிரிவில் அனுபவமும் ஆர்வமும் இருக்குமாயின் சிறப்பான சந்தை தேவை இருப்பதால் இதில் செயல்படலாம்.

ஐடியா # 21 டிஜிட்டல் மார்கெட்டிங் : நீங்கள் ஒரு சில மாதங்களிலேயே டிஜிட்டல் மார்கெட்டிங் குறித்து கற்றுக்கொண்டு சொந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியைத் துவங்கலாம்.

ஐடியா # 22. சினிமா செய்திகள் : பாலிவுட்/கோலிவுட் திரைப்பட விமர்சனங்கள், பிரபலங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் போன்றவற்றை எழுதலாம்.

ஐடியா # 23 ஸ்டார்ட் அப் செய்திகள் : ஒரு குறிப்பிட்ட பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் அப்பின் நிறுவனர்களை பேட்டி எடுத்து வெளியிடலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு மேலும் சுவாரஸ்யமாக்கலாம்.

ஐடியா # 24 தொழில்நுட்ப செய்திகள் : உங்களுக்கு தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்து சமீபத்திய போக்குகள் குறித்து அறிந்து வைத்திருப்பவராக இருந்தால் இது தொடர்பான ஆன்லைன் வணிகத்தை நீங்கள் துவங்கலாம்.

ஐடியா # 25 சாதனங்கள் குறித்த போக்கு : உதாரணத்திற்கு பிரத்யேகமாக ஆப்பிள் சாதனம் குறித்த செய்திகளுக்கான போர்டலை உருவாக்கலாம். இதனால் ஐஃபோன், ஐபேட் முதலிய பொருட்கள் குறித்த தகவல்கள் தேடுவோர் அணுகுவர்.

ஐடியா # 26 ஃபேஷன் போக்குகள் : ஃபேஷன் சந்தையின் சமீபத்திய போக்குகளால் கவரப்பட்டோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். சமீபத்திய அறிமுகங்களை மக்கள் தேர்ந்தெடுக்க உதவலாம்.

ஐடியா # 27 பங்குச்சந்தை மற்றும் வணிக செய்திகள் : முதலீட்டாளர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் நம்பகமானோர் மிகச்சிலரே இருப்பதால் இந்தப் பிரிவில் செயல்பட சரியான தகவல்களை வழங்கி நம்பிக்கையைப் பெறவேண்டியது மட்டுமே அவசியம்.

ஐடியா # 28 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் : சாஃப்ட்வேர் ப்ராடக்டுகளை உருவாக்குவதில் ஆர்வம் இருந்தால் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் சரியான தேர்வாகும். நீங்கள் விற்பனை மற்றும் மார்கெட்டிங்கில் சிறப்பானவராக இருப்பின் தொழில்நுட்ப டெவலப்மெண்டிற்கு இணை நிறுவனரைக் கண்டறியலாம்.

ஐடியா # 29 மொபைல் செயலி : மலிவு விலை மொபைல்களும் இலவச இணைய வசதிகளும் கிடைப்பதால் மொபைல் செயலி வணிகத்திற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஐடியா # 30 ஆன்லைன் குழு : மக்கள் ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ளும் தகவல்களே நம்பகமானதாக இருக்கும். ரெட்டிட், சொமேடோ போன்றவை இதற்கு உதவுகிறது. நீங்களும் ஒரு புதிய குழுவை உருவாக்கலாம்.

ஐடியா # 31 தொழில்நுட்ப வலைப்பக்கம் : ஒரு குறிப்பிட்ட கீவேர்ட் ஆய்வு மேற்கொண்டு அது குறித்து வலைப்பக்கத்தில் பதிவிடலாம்.

ஐடியா # 32 ஆன்லைன் சந்தைப்பகுதியில் விற்பனை : சந்தையின் தயாரிப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை ப்ராண்டிங் செய்து ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற சந்தைப்பகுதிகளில் விற்பனை செய்யலாம்.

ஐடியா # 33 தள்ளுபடி/ கூப்பன்களை விற்பனை செய்யும் நிறுவனம் : இவை இந்திய ஆன்லைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. எனவே கூப்பன் அல்லது தள்ளுபடிகளைத் தேடும் சரியான வாடிக்கையாளரைக் கண்டறிந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

ஐடியா # 34 ஷாப்பிங் தொடர்புடைய வலைப்பக்கம் : ஆன்லைன் இது குறித்து ஆழமாக தெரிந்துகொண்டு ஷாப்பிங் தொடர்புடைய வலைப்பக்கத்தை துவங்கலாம்.

ஐடியா # 35 நிதி சார்ந்த ப்ராடக்டுகள் விற்பனை : காப்பீடு, ம்யூச்சுவல் ஃபண்ட் வீட்டுக் கடன் போன்றவற்றை ஆஃப்லைன் ஏஜெண்டுகளைப் போன்றே ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

ஐடியா # 36 வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் : இந்தியாவில் வெகு சிலரே வருமான வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். பலர் இதற்கு வெளியாட்களையே நாடுவதால் இந்தப் பிரிவில் செயல்படலாம்.

ஐடியா # 37 வலைப்பக்கம் / யூட்யூப் சானலில் விளம்பரம் செய்தல் : நிதி மேலாண்மை தொடர்பான உயர்தர நடுநிலையான தகவல்களை கண்டறிவது கடினம் என்பதால் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஐடியா # 38 நிதி ஆலோசனை : எதில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பது போன்ற திட்டமிடலில் மக்கள் பல்வேறு சிக்கலகளை சந்திப்பதால் இதில் கவனம் செலுத்தலாம்.

ஐடியா # 39 சந்தா அடிப்படையிலான ப்ரீமியம் கண்டெண்ட் : இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் முறையாக ஆராயப்படாத நிலையில் கிடைப்பதால் நீங்கள் நிதி சார்ந்த் ப்ராடக்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவற்றை வெளியிடலாம்.

ஐடியா # 40 நிதிப்பிரிவில் நிபுணத்தும் பெற்றவர்கள் அடங்கிய குழு : நிதி, பொருளாதாரம், பணம் போன்றவை குறித்து ஆழ்ந்து விவாதிக்கும் பலரை ஒன்றிணைக்கலாம்.

ஐடியா # 41 கணக்கியலில் உதவி : இதற்கு நீங்கள் பட்டயக்கணக்காளராகவோ நிதி ஆலோசகராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை. நிதி அல்லது வணிகவியல் பட்டதாரியாக இருந்தால் போதும் மக்கள் தங்கள் கணக்குகளை முறையாக நிர்வகிக்க உதவலாம்.

ஐடியா # 42 நிதி சார்ந்த வீடியோ வலைப்பக்கம் : சிலர் நிதி சம்பந்தப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக வீடியோக்களை வெளியிடுகின்றனர். இதை மில்லியன்கணக்கோர் பார்க்கும்போது உங்களுக்கான வருவாயும் அதிகரிக்கும்.

ஐடியா # 43 நிதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவலாம் : நிதிப் பிரிவில் நீங்கள் படித்திருந்தால் உங்களது அறிவுத்திறனையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

ஐடியா # 44 மருத்துவர்கள் குறித்த விமர்சனங்கள் : நோயாளிகள் மருத்துவர்களை தேர்ந்தெடுக்க தீர்மானிப்பதற்கு உதவும் வகையில் மருத்துவர்கள் குறித்த விமர்சனங்களை பட்டியலிடலாம்.

ஐடியா # 45 மிகப்பெரிய சிகிச்சைகளுக்கு தள்ளுபடி : மக்கள் குறைந்த செலவில் சிகிச்சைகளைப் பெற உதவும் தளத்தை நிறுவலாம்.

ஐடியா # 46 உண்மையான தேவை இருக்கும் நோயாளிகளுக்காக நிதி உயர்த்தலாம் : விலையுயர்ந்த சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் அத்தகைய தொகையை செலுத்த இயலாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்காக நிதி உயர்த்தலாம்.

ஐடியா # 47 பரஸ்பர உதவிக்காக நோயாளிகள் அடங்கிய குழு : நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உருவாக்க முன்வந்தால் அதில் இணைய பலர் தயாராக் இருப்பார்கள். மருத்துவரின் தலையீட்டிற்கு முன்பே இந்த குழு வாயிலாக பல விஷயங்களை கேட்டறியலாம்.

ஐடியா # 48 மன அழுத்தத்துடன் போராடுவோருக்கான சமூகம் : மன அழுத்தம் சார்ந்த தங்களது சிக்கல்களை பலர் பகிர்ந்துகொள்ள முன்வரமாட்டார்கள். ஒரு ஆன்லைன் சமூகம் இவர்களுக்கு உதவும்.

ஐடியா # 49 ஆண்கள் ஆரோக்கியம் சார்ந்த வலைப்பக்கம் : இணையத்தில் தேடி பல தகவல்களைப் பெறலாம். இதன் தலைப்புகள் ஆய்வு செய்யவும் எழுதவும் எளிதாக இருக்கும்.

ஐடியா # 50 பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த வலைப்பக்கம் : ஆண்களுக்கான வலைப்பக்கத்தை போன்றே பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து இந்த வலைப்பக்கத்தில் பதிவிடலாம்.

ஐடியா # 51 - கர்ப்பகால கவனிப்பு பிளாக்: தனித்துவமான எழுத்துக்களால் பெண்களின் உடல்சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்தும், குறிப்பாக கர்ப்பகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், கவனிப்பு பற்றியும் இதில் எழுதலாம்.

ஐடியா #52 - குழந்தை ஆரோக்கிய பிளாக் : குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த ஆயிரம் கேள்விகள் எப்போதுமே பெற்றோருக்கு உண்டு. இது தொடர்பான கவுன்சிலிங்குகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த விவரங்களை இந்தியர்களின் பார்வையில் எழுதலாம்.

ஐடியா # 53 - இயற்கை வாழ்வியல் முறை பிளாக் : ஆர்கானிக் என்றதுமே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு மட்டும் என்றில்லை, ஆர்கானிக் லிவிங் எனப்படும் இயற்கையோடு இணைந்த வாழ்வியலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இந்த பிளாக்கில் உணவு, உடை மற்றும் வாழ்விடங்கள் என இயற்கை வாழ்வியல் பற்றி எழுதலாம்.

ஐடியா # 54 வீட்டு வைத்தியம் பிளாக் : வீட்டு வைத்தியத்திலேயே எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். எனவே நீங்கள் இந்த பிளாக்கில் சாதாரண நோய்களை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு குணமாக்கலாம் என எழுதலாம்.

ஐடியா # 55 - விளையாட்டு மூலம் கல்வி (5 - 15 வயது குழந்தைகளுக்கானது): நீங்கள் புதிய விளையாட்டுகளை உருவாக்கும் திறமை பெற்றவர் என்றால் உங்களுக்கு நல்ல வருமானம் உறுதி. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விளையாட்டாக கல்வியை எப்படி கொண்டு சேர்க்கலாம் என புதிய எளிய விளையாட்டுகளை உருவாக்கலாம்.

ஐடியா # 56 - கேரியர் கவுன்சிலிங் (15 - 21 வயதுடையோருக்கு) : எதிர்காலத்தில் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உங்களால் உதவ முடியும். எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவும், அதன் எதிர்காலம் குறித்த தெளிவும் இருந்தால் நீங்கள் நிச்சயம் இந்தத் துறையில் வெற்றி பெற முடியும்.

ஐடியா # 57 - போட்டித் தேர்வுகளுக்கு உதவுதல் : தேர்வுகள் என்றாலே மாணவர்கள் மட்டுமல்ல, அனைவருக்குமே பயம் தான். இந்த பயத்தை உங்களின் தொழில் மூலதனமாகக் கொள்ளலாம். போட்டித் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என வகுப்பெடுக்கலாம்.

ஐடியா # 58 - அரசு வேலை பெற உதவுதல் : கால் காசு என்றாலும் கவர்ண்மெண்ட் காசு என்ற மனநிலை இன்னும் வேலை தேடுபவர்கள் மத்தியில் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கு எப்படித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவது போன்ற வழிகளைச் சொல்லித் தந்து வருமானம் ஈட்டலாம்.

ஐடியா # 59 - வேலைவாய்ப்பு பயிற்சி : கல்லூரிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் அரசு அல்லது தனியார் வேலையை எதிர்பார்க்காமல், எப்படி சொந்தக்காலில் தொழில் முனைவோர் ஆவது என்பதற்கான பயிற்சியை அளிக்கலாம்.

ஐடியா # 60 - பள்ளிக்குத் தேவையான பொருட்கள் பற்றிய விமர்சனம் (ஆய்வுக்கூடங்கள், கணினி மென்பொருட்கள், செயல்முறைப் பொருட்கள்) : பள்ளிகளுக்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், கணினி மென்பொருட்கள் மற்றும் செயல்முறைப் பொருட்கள் எவை எவை சந்தையில் விற்பனைக்கு உள்ளன என்பது பற்றி பிளாக் ஆரம்பித்து, அவற்றின் விலை ஒப்பீடு, தரம் பற்றி விரிவாக விமர்சித்து எழுதலாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இதற்கான பணத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இது அவர்களது பொருட்களுக்கான ஒரு வகையான விளம்பரமே ஆகும்.

ஐடியா # 61 - கல்வி சம்பந்தமான பொருட்களின் விமர்சனம் ( பெற்றோருக்கானது) : தங்களது குழந்தைகளுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் பற்றிய விமர்சனங்களை இதில் நீங்கள் எழுதலாம். இதன்மூலம் பெற்றோரை எளிதில் தங்களது பொருட்கள் சென்றடைவதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிச்சயம் உங்களுக்கு அதிக பணம் தரும்.

ஐடியா # 62 - சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய விமர்சனம் : மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் துறை உள்ளது. காரணம் பெற்றோர் பள்ளிக் கல்வி தாண்டியும் தங்களது குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். எனவே, அத்தகைய வகுப்புகள் பற்றியும் அதனை கற்றுத் தரும் நிறுவனங்கள் பற்றியும் விமர்சித்து இந்த பிளாக்கில் எழுதலாம்.

ஐடியா # 63 - தலைமுறை இடைவெளி பற்றிய பிளாக் : ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான புரிதல் குறித்து பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள் உள்ளன. இது தொடர்பான கருத்துக்களை இந்தப் பிளாக்கில் எழுதலாம்.

ஐடியா #64 - அரசு வேலைத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் : அரசு வேலைக்கான தேர்வுகளின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.

ஐடியா # 65 - எழுத்தாளர்களுக்கான வழிகாட்டி தளம் : எந்த ஒரு நிறுவனத்திலும் ஒப்பந்தமாகாமல் சுதந்திரமாக கட்டுரை, கதைகள் எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளை தகுந்த தளங்களுக்கு கொண்டு செல்லும் இணையதளத்தை உருவாக்கலாம்.

ஐடியா # 66 - மேம்படுத்தப்பட்ட ரெசியூம்களை உருவாக்க உதவுதல் : தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், தொழில் நிறுவனங்களைக் கவரும் வகையிலும் ரெசியூம் எனப்படும் சுயவிபரக் குறிப்புகளை உருவாக்குவதில் வேலை தேடுவோருக்கு சிக்கல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரெசியூம்கள் எழுதுவது எப்படி என கற்றுத் தரலாம்.

ஐடியா # 67 - பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் & நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி : பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் மாணவர்களுக்கு புத்தகக் கல்வியை மட்டுமே போதிக்கின்றன. அவற்றைத் தாண்டி சமூகத்தில் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்வது என்ற தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பயிற்சியையும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியையும் அளிக்கலாம்.

ஐடியா # 68 - அரசு வேலைத் தொடர்பான செய்திகள் : அரசு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் மற்றும் தேர்வுத் தேதிகள் குறித்த செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிக்கலாம்.

ஐடியா # 69 - அரசுவேலை பெற சுலப வழிமுறைகள் : கஷ்டப்பட்டு அரசு வேலை பெறுவதைவிட சுலபமான வழியில் சம்பந்தப்பட்ட தேர்வுகளில் வெற்றிப் பெற வேண்டும் என்று தான் அனைவரும் ஆசை படுவார்கள். அந்தவகையில், அரசு வேலை தொடர்பான தேர்வுகளை எப்படி சுலபமாக எதிர்கொள்ளலாம் என்பதைக் கற்றுத் தரலாம்.

ஐடியா #70 - கிளாஸ் டாப்பர் ஆவது எப்படி? : பார்முலாக்களை மனப்பாடம் செய்வது உட்பட பல சுலப வழிகளைச் சொல்லித் தந்து அதன் மூலம் கிளாஸ் டாப்பர் ஆவது எப்படி என்பதைச் சொல்லித் தரலாம்.

ஐடியா # 71 - தோல்வி அடைந்தவர்களுக்கான சப்போர்ட் குரூப் : வாழ்க்கையில் வெற்றித் தோல்வி சகஜம். ஆனால், தோல்விகளால் துவண்டு வெற்றி கிடைக்காது என மனச்சோர்வு அடைந்துவிடக் கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு மன தைரியத்தை அளிக்கும் வகையில் குழு ஒன்றை ஆரம்பித்து கவுன்சிலிங் தரலாம்.

ஐடியா # 72 - அழகுக்குறிப்புகள் : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பக்கங்கள் ஆரம்பித்து, அதில் அழகுக்குறிப்புகளைப் பதிவிட்டு வரலாம். குறிப்பிட்ட பொருட்கள் குறித்து அதிகம் எழுதுவதன் மூலம் அதிகம் சம்பாரிக்க வாய்ப்புகள் அதிகம்.

ஐடியா #73 - தோல் பராமரிப்பு குறிப்புகள் : வயதாக ஆக தோல் சுருங்கும் தன்மை இருப்பதால், தங்களை எப்போதும் இளமையாக பொலிவான தோலுடன் வைத்துக் கொள்ள பெண்கள் பெரிதும் விரும்புவர். எனவே, தோல் பராமரிப்பு குறிப்புகளை எழுதலாம்.

ஐடியா # 74 - பேஷன் பொருட்கள் விமர்சனம் : ஆடைகள், ஆபரணம் உள்ளிட்ட பேஷன் பொருட்கள் தொடர்பான விமர்சனங்களை எழுதலாம்.

ஐடியா #75- நவநாகரீக ஆடைகள் குறித்த யோசனைகள் : பார்ட்டிக்கு எந்த மாதிரியான உடை அணிவது, திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு எப்படி உடை அணிவது போன்ற யோசனைகளைக் கூறலாம்.

ஐடியா # 76 - நவநாகரீக பொருட்களை வாங்கச் சரியான இடம் : நீங்கள் பேஷன் பற்றிய விரிவான, தெளிவான அறிவை உடையவர் என்றால், எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்து யோசனைகள் வழங்கலாம். உங்களது பார்வையாளர்களைப் பொருத்து பொருளின் விலைக்கேற்ப பொருட்கள் கிடைக்கும் இடங்களை வகைப்படுத்தலாம்.

ஐடியா #77 - கர்ப்பகாலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை : கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு பிரத்யேக கவனிப்பு தேவை. உணவு, உடற்பயிற்சி என தினசரி செயல்பாடுகளில் எத்தகைய சிறப்பு கவனிப்பு தேவை என்பது குறித்த யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பிரசவத்திற்கு முன் மற்றும் பின் என பெண்கள் இத்தகைய யோசனைகள் அதிகமானவற்றை எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா # 78- பிறந்த குழந்தை பராமரிப்பு : குழந்தைப் பிறந்தவுடன் அதனை எவ்வாறு கவனித்துக் கொள்வது, அவற்றின் தேவை எப்படி என்பது போன்ற பராமரிப்புக் குறிப்புகளை அளிக்கலாம்.

ஐடியா # 79 - குழந்தைகளுக்காக கை வைத்தியம் : உணவே மருந்தென வாழ்ந்தவர்கள் நாம். வளரும் குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் கெமிக்கல் கலந்த மாத்திரைகளை வாங்கிக் கொடுக்காமல், கை வைத்தியத்தில் நோய் தீர்க்கும் மருந்துகளைத் தருவது எப்படி என யோசனைகள் தரலாம்.

ஐடியா #80 - தாய்ப்பால் தர யோசனை : இன்று பெரும்பாலான ஃபேஸ்புக் பக்கங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது தொடர்பான சந்தேகங்கள் தான் இளம் தாய்மாரிடம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், தாய்ப்பாலின் மகத்துவம், அதனை எப்படி தர வேண்டும், எவ்வளவு காலம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட யோசனைகளை தரலாம்.

ஐடியா # 81 - பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி? : பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஒருவித மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான விசயம் தான். அதிலிருந்து விடுபடுவது எப்படி என யோசனைகள் கூறலாம்.

ஐடியா # 82 - தாய்மார்களுக்கான பகுதி நேர வேலை : கர்ப்பம், குழந்தைப் பேறு, தாய்மை போன்றவை ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அற்புதமான நாட்கள். ஆனால், அதுவரை பிசியாக இருந்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பள்ளி செல்லத் தொடங்கியதும் வீட்டில் அதிக நேரம் பொழுதுபோகாமல் இருப்பதாக பெண்கள் உணர்வதுண்டு. அப்படிப்பட்டோருக்கு வீட்டில் இருந்தபடியே என்ன மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து யோசனைகள் கூறலாம்.

ஐடியா # 83 - குழந்தை வளர்ப்பு, விளையாட்டு பற்றிய ஆன்லைன் டிவி : இணையத்தின் வளர்ச்சியால் சுலபமாக ஆன்லைன் டிவி தொடங்கும் வாய்ப்புகள் அனைவருக்கும் சாதகமாக உள்ளது. எனவே, குழந்தை வளர்ப்பு, விளையாட்டு போன்றவற்றை மையமாக வைத்து ஆன்லைன் டிவி தொடங்கலாம்.

ஐடியா # 84 - வீட்டு உணவுகள் விற்பனை : இணையதளம் ஆரம்பித்து அதன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உங்கள் ஊரில் எளிதாக விற்பனை செய்யலாம்.

ஐடியா # 85 - பாரம்பரிய உணவுகளைக் கண்டறிதல் : மக்களுக்கு பாரம்பரிய உணவுகள் பற்றிய தேடல் சமீபகாலமாக அதிகமாகியுள்ளது. இதனை உங்களது வியாபாரத்திற்கான வாய்ப்பாக பயன்படுத்தி, பாரம்பரிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்யலாம்.

ஐடியா # 86 - உணவுப் பிரியர்களுக்கான சந்திப்புகளை உருவாக்குதல் : இன்றைய வாழ்க்கைச் சூழலில் உணவு சார்ந்த வேலைகளுக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது. உணவுப் பிரியர்களின் தேவையை உணர்ந்து, அவ்வப்போது உணவுத் திருவிழா போன்றவற்றை நடத்தலாம்.

ஐடியா # 87- குறிப்பிட்ட உணவுப் பிரியர்களுக்கான குழு அமைத்தல் : அனைத்து உணவுகளுக்கும் பொதுவானதாக நடத்தாலும், குறிப்பிட்ட உணவுகளுக்கு என தனியாக உணவுத் திருவிழா நடத்தலாம். உதாரணமாக தேநீர் பிரியர்களை மட்டும் ஒருங்கிணைத்து அவர்களுக்கென விதவிதமான தேநீர் வகைகளை அறிமுகப்படுத்திடும் வகையில் உணவுத் திருவிழா நடத்தலாம்.

ஐடியா # 88 - ஆர்கானிக் உணவுப் பொருள் விற்பனை : விவசாயிகளிடமிருந்து நேரடியாக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருட்களைப் பெற்று அதனை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யலாம்.

ஐடியா # 89 - குறிப்பிட்ட பொருட்களைப் பற்றிய உணவுக்குறிப்புகள் தருதல் : காளான் போன்ற குறிப்பிட்ட உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் குறித்த சமையல் குறிப்புகளை தரலாம். எல்லாதரப்பட்ட உணவுக் குறிப்புகளையும் தருவதற்குப் பதில், இப்படி குறிப்பிட்ட பொருளைக் கொண்டு பலவகைப்பட்ட உணவுகளைத் தயாரிக்கும் யோசனைகள் தந்து அசத்தலாம், வருமானமும் ஈட்டலாம்.

ஐடியா # 90 - இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி? : கண்ணுக்குத் தெரியாத இடத்தில் ஏதேதோ உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் பயிர்களைவிட, தங்கள் வீட்டைச் சுற்றி அல்லது மொட்டை மாடியில் இயற்கை முறையில் விவசாயம் செய்து அதை சாப்பிடுவதில் மக்களுக்கான ருசி அதிகரித்துள்ளது. அந்தவகையில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி என யோசனைகள் கூறலாம்.

ஐடியா # 91 - பேக்கிங் டெக்னிக்ஸ் : பேக்கிங் சம்பந்தப்பட்ட அறிவு உங்களுக்கு அதிகமாக இருக்குமானால், அது தொடர்பான டிப்ஸ்களை வாசகர்களுக்கு வழங்கலாம். முழு உணவுக் குறிப்புகளைவிட இது போன்ற டிப்ஸ்களை மக்கள் அதிகம் விரும்பிப் படிப்பர்.

ஐடியா #92 - சிறந்த நியூட்ரிசியனை அடையாளம் காண்பது எப்படி? : நியூட்ரிசியன் மற்றும் ஆரோக்கியம் என்றுமே தேவை உள்ள துறைகள். நியூட்ரிசியன் சம்பந்தமான தளத்தை உருவாக்கி அதில் ஆரோக்கியமான பதிவுகளை வெளியிடலாம்.

ஐடியா #93 - டயட் இல்லாமல் எடையைக் குறைப்பது : டயட் இல்லாமலேயே உடல் எடையை எப்படி சுலபமான வழிகளில் குறைக்கலாம் என்பது குறித்த யோசனைகளைக் கூறலாம்.

ஐடியா # 94 - குழந்தைகளுக்கான பிரிய உணவுகள் : குழந்தைகளுக்கு பிரியமான உணவுகளைத் தருவது தான் எல்லா தாய்மார்களுக்கும் மிகவும் சவாலான விசயம். அந்த வகையில், குழந்தைகளின் ருசியை உணர்ந்து விதவிதமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த குறிப்புகளைத் தந்து அதிக தாய்மார்களை வாசகர்கள் ஆக்கலாம்.

ஐடியா # 95 - உள்ளூர் வழிகாட்டிகள் : வெளியூர்களுக்குச் செல்லும் போது சரியான வழிகாட்டிகள் இல்லாமல் அவதிப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். இதனை களையும் வகையில் உள்ளூர் வழிகாட்டிகளை ஒருங்கிணைத்து அதன்மூலம் சம்பாதிக்கலாம்.

ஐடியா # 96 - சுற்றுலாத் திட்டங்களை உருவாக்குதல் : நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்களின் வசதிக்காக அனைத்து விபரங்களும் உள்ளடக்கிய சுற்றுலாத் திட்டங்களை உருவாக்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

ஐடியா # 97 - சுற்றுலாப் பிரியர்களை ஒருங்கிணைத்தல் : சிலருக்கு ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்களை ஒருங்கிணைத்து சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தரலாம்.

ஐடியா # 98 - உணவகங்கள், தங்கும் விடுதிகள் குறித்த விமர்சனம் : வெளியூர் செல்பவர்களுக்கு எங்கே தங்குவது, எங்கே சாப்பிடுவது போன்ற குழப்பம் இருக்கும். அதனைக் களையும் விதத்தில் கட்டண அடிப்படையில் உணவு மற்றும் தங்கும் விடுதிகள் குறித்த விமர்சனங்களை தொகுத்து வழங்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறலாம்.

ஐடியா # 99 - பயணத்தின் போது சிறந்த ஆப்ஸ், டூல்ஸ்களை வகைப்படுத்துதல் : வனப்பகுதி, மலை பிரதேசம் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, தேவையான தகவல்களைப் பெறும் வகையிலான ஆப்ஸ்கள், டூல்ஸ்களை தொகுத்து வழங்கலாம்.

ஐடியா # 100 - குறைந்த செலவில் சுற்றுலைவை அனுபவிப்பது எப்படி? : குறைந்த செலவில் மகிழ்ச்சிகரமாக சுற்றுலா சென்று வருவது எப்படி என்பதற்கான யோசனைகளைத் தொகுத்து வழங்கலாம்.

ஐடியா # 101 - சுற்றுலாத் தளங்களை அடையாளப் படுத்துதல் : பிரபலமாகாத சுற்றுலாத் தளங்களை அடையாளம் கண்டு, அவற்றின் சிறப்புகளை எடுத்துக் கூறி பிரபலப் படுத்துதல். இது புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு உதவியாக இருக்கும். இதன்மூலம் வாசகர்கள் அதிகரித்து உங்கள் வருமானம் பெருகும்.

ஐடியா # 102 - அட்வென்சர் டிரிப் ஐடியா : சவாலான, திரில்லான இடங்களுக்கு செல்வது சிலருக்குப் பிடிக்கும். அத்தகைய இடங்கள் குறித்தத் தகவல்களை உங்கள் பிளாக்கில் தொகுத்துத் தரலாம்.

ஐடியா # 103 - சாலை பயண திட்டமிடல், யோசனைகள், சவால்கள் : சாலை வழியாக நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்களுக்கென யோசனைகள் கூறலாம். எங்கே பயணத்தைத் தொடங்கலாம் என்பது தொடங்கி, சாலை பயணத்தில் உள்ள சவால்கள் போன்றவை குறித்து தெளிவான திட்டங்களை வகுத்துத் தரலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: பிரதீப் கோயல்