Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இளம் தொழில் முனைவோரை ஊக்கம் அளிக்கும் குமார் மங்களம் பிர்லாவின் 10 மேற்கோள்கள்!

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லாவிம், இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிக்க கூடிய பத்து மேற்கோள்கள்.

இளம் தொழில் முனைவோரை ஊக்கம் அளிக்கும் குமார் மங்களம் பிர்லாவின் 10 மேற்கோள்கள்!

Saturday April 23, 2022 , 2 min Read

ஆதித்ய பிர்லா தொழில் குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லா, இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர், நன்கொடையாளராக விளங்குகிறார்.

கொல்கத்தாவில் வர்த்தகக் குடும்பத்தில் 1967ல் பிறந்தவர் பின்னர் மும்பையில் வளர்ந்தார். இளங்கலை பட்டம் முடித்ததும் அவர் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் உயர் கல்வி பயின்றார். மார்வாரி பிர்லா குடும்பத்தைச்சேர்ந்த அவருக்கு ராஜஸ்தானில் அரண்மனை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திறமை மற்றும் ஆற்றல் காரணமாக நன்கறியப்பட்ட தொழில்முனைவோராக உருவான அவரது நிகர மதிப்பு 17.5 பில்லியன் டாலராகும். 2020ல் அவர் கோவிட் நிவாரணத்திற்காக ரூ.500 கோடி வழங்கினார். இதில் ரூ.400 கோடி பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்பட்டது.

பிர்லா

லண்டன் பிஸ்னஸ் ஸ்கூலில் ஆண்டுதோறும் 10 முழு நேர எம்பிஏ மாணவர்களுக்கான 15 மில்லியன் பவுண்ட் நன்கொடை திட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பிகே பிர்லா ஸ்காலர்ஸ் திட்டம் அவரது தாத்தா பசந்த் குமார் பிர்லா பெயரில் வழங்கப்படுகிறது. ஐரோப்பிய கல்லூரி ஒன்றுக்கான மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாக இது அமைகிறது.

தி இண்டஸ் எண்டர்பிரன்ஸ் அமைப்பின், ஆண்டின் சிறந்த சர்வதேச தொழில்முனைவோர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள குமார் மங்களம் பிர்லாவின் பத்து மேற்கோள்கள்.

  • நாம் எல்லோரும் தோற்கிறோம். நாம் எல்லோரும் தவறுகள் செய்கிறோம். தவறுகளை அலட்சியம் செய்யாமல் இருப்பதே முக்கியம். தவறு செய்யும் போது மூன்று வாய்ப்புகள் உள்ளன: நீங்கள் அவற்றை மறுக்கலாம், உங்களை பாதிக்க அனுமதிக்கலாம் அல்லது தவற்றை ஒப்புக்கொண்டு, வேகமாக சரி செய்யும் நடவடிக்கை எடுத்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.

  • நான் எந்த வகையான மனிதர்களுடன் பணியாற்றுகிறேன் எனும் முக்கிய அம்சமே என்னை இயக்குகிறது.

  • உங்களுக்கு ஈடுபாடு மிக்க விஷயத்தை பின் தொடந்து உங்கள் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றை செய்ய வேண்டும் என்பது தான் பொன் விதி.

  • தோல்வி என்பது முடிவல்ல. அது தவிர்க்க இயலாதது. நீங்கள் தோல்வி அடையவில்லை எனில் போதுமான இடர்களை மேற்கொள்ளவில்லை எனப் பொருள்.

  • உங்களால் கூட்டு முயற்சியில் ஈடுபட முடியவில்லை எனில் உங்களால் வெற்றி பெற முடியாது. தனியாக சாதிப்பதை விட ஒரு குழுவாக சாதிப்பதன் ஆனந்தம் தனியானது.

  • உங்கள் வீட்டு பின் பக்கத்தில், உங்கள் தற்போதைய வர்த்தகத்தில் வாய்ப்புகள் இருக்கும் போது, புதிய எல்லைகளை தேடிச்செல்வது நல்ல யோசனை அல்ல.

  • தனிப்பட்ட திறன் உங்களை ஒரளவே கொண்டு செல்லும். வர்த்தகம் முதல் எந்த துறையிலும் வெற்றிக்கு குழுவாக செயல்படுவதே முக்கியக் காரணம்.

  • இளம் தலைமுறை மேலும் பரிசோதனைகளில் ஈடுபட விரும்புகிறது. முந்தைய தலைமுறை போல அவர்கள் பணம் மற்றும் ஈடு தொகையால் அதிகம் ஈர்க்கப்படுவதில்லை. இரண்டாவதாக, நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகம் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.

  • உணர்ச்சி மேலிடும் போது தான் நீங்கள் கோபம் கொள்கிறீர்கள். உங்களிடம் மாற்று பார்வை இருக்கலாம். ஆனால், அது ஆக்கப்பூர்வமான எதிர்ப்பாக இருக்கும் வரை சுவையாகவே இருக்கும்.

  • நீங்கள் எந்த அளவு அனுபவித்து பணி செய்கிறீர்கள் என்பது பணிச் சூழலை பொருத்தது. அறிவுசார் தன்மையுடன் மென் திறன்களும் கொண்ட ஸ்மார்ட்டானவர்களுடன் வேலை செய்வது முக்கியம்.

ஆங்கிலத்தில்: பூஜா மாலிக் | தமிழில்: சைபர் சிம்மன்