தோல்வி முதல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது வரை: ஊக்கம் அளிக்கும் எலன் மஸ்க் பொன்மொழிகள்!
நம் காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான, தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான, எலன் மஸ்க், கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு மிக்க பார்வைக்காக அறியப்படுகிறார். அவர், எண்ணற்ற இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளிப்பவராகவும் இருக்கிறார்.
எலன் மஸ்கின் (48) இளம் வயது எளிதானதாக இருக்கவில்லை. ஆனால் அவர் அத்தனை தடைகளையும் கடந்து, இன்று உலகம் போற்றும் தொழில்முனைவோராக, முதலீட்டாளராக, பொறியாளராக விளங்குகிறார். டெஸ்லா மோட்டார்சின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓவான மஸ்க், பேபால், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் தி போரிங் கம்பெனி ஆகியவற்றின் இணை நிறுவனராகவும் விளங்குகிறார்.
ராக்கெட்டை உருவாக்குவது, வீடியோ கேமை சொந்தமாக கோடிங் செய்வது மற்றும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட மஸ்க், வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்குத் தேவையான எல்லாம் பெற்றிருக்கிறார். தத்துவம், அறிவியல் புனைகதை, கற்பனை உலக நாவல்களில் இருந்த அவரது ஆரம்ப கால ஈடுபாடு, அவரது நடைமுறை தத்துவம் மற்றும் மனிதகுல முன்னேற்றத்திற்கான பார்வையில் பிரதிபலிக்கிறது. கடினமாக உழைக்கக் கூடியவராகவும் அவர் அறியப்படுகிறார். வாரம் 80 முதல் 100 மணி நேரம் உழைக்கிறார்.
இன்று, மின்சார வாகனமான டெஸ்லா மூலம் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை அவர் புவி வெப்பமாதலை குறைக்கத் துவங்கினார். விண்வெளி ஆய்வில் அவருக்கு இருந்த ஆர்வம் மஸ்க் பவுண்டேஷனை உருவாக்க வைத்துள்ளது.
உங்களுக்கு வழி காட்டக்கூடிய மஸ்கின் 11 ஊக்கம் தரும் பொன்மொழிகள் இதோ:
- "நீங்கள் இணை நிறுவனர் அல்லது சி.இ.ஓவாக இருந்தால், நீங்கள் செய்ய விரும்பாத எல்லா வகையான வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் சிறிய வேலைகளை செய்யத் தயாராக இல்லை எனில், உங்கள் நிறுவனம் வெற்றி பெறாது. எந்த வேலையும் குறைவானது அல்ல.”
- “இலக்கு என்ன மற்றும் எதற்காக என்று அறிந்திருக்கும் போது மக்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். காலையில் பணி புரிய வருவதில் ஆர்வம் கொண்டு, அனுபவித்து வேலை செய்வது மிகவும் முக்கியம்.”
- "அதிகத் திறன் வாய்ந்த ஐடியாக்களை அடை காப்பத்தில் என் நேரத்தை செலவிடவில்லை. என் நேரத்தை பொறியியல் மற்றும் உற்பத்தி பிரச்சனைகளை தீர்க்க செலவிட்டேன்.”
- “நாசாவில் தோல்வி என்பது ஒரு வாய்ப்பாக கருதப்படவில்லை எனும் தவறான கருத்து இருக்கிறது. தோல்வி அடையவில்லை எனில், அவர்கள் போதுமான அளவு புதுமையாக்கத்தில் ஈடுபடவில்லை என பொருள்.”
- “நீங்கள் உங்கள் நிறுவனத்தை உருவாக்க விரும்பினால், அது கேக் தயாரிப்பது போன்றது. எல்லா பொருட்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.”
- “ஒரு சிலர் மாற்றத்தை விரும்புவதில்லை. ஆனால் மாற்று வாய்ப்பு பெரும் நாசம் என்றால் நீங்கள் மாற்றத்தை தழுவிக்கொண்டாக வேண்டும்.”
- “நான் எல்லாவற்றையும் இயற்பியல் நோக்கில் அணுகுகிறேன். உதாரணங்களில் இருந்து அல்லாமல் முதல் கோட்பாடுகளில் இருந்து புரிந்து கொள்ள அது கற்றுத்தருகிறது.”
- “மிகப்பெரிய புதுமையாக்கத்தை ஒருவர் கண்டறியும் போது, அது ஒற்றை விஷயமாக அரிதாக இருக்கிறது. ஒரே ஒரு விஷயமாக இன்னும் அரிதாகவே இருக்கிறது. உண்மையில், கூட்டாக பல விஷயங்கள் சேர்ந்தே புதுமையாக்கத்திற்கு வித்திடுகின்றன.”
- “குவாண்டம் இயற்பியல் போன்ற, உள்ளுணர்வுக்கு எதிரான விஷயங்களை கண்டறிவதற்கான வழியாக இயற்பியல் விளங்குகிறது. இது உண்மையில் உள்ளூணர்வுக்கு எதிரானது.”
- “கூடையில் என்ன நடக்கிறது என்பதை கட்டுப்படுத்த முடியும் என்றால் உங்கள் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையும் போடலாம்.”
- "ஏதேனும் ஒன்று முக்கியமாக இருந்தால் நீங்கள் முயற்சிக்க வேண்டும். அதன் விளைவு தோல்வியாக இருந்தாலும், முயற்சிக்க வேண்டும்.“
ஆங்கிலத்தில்: அஸ்மா அன்சாரி | தமிழில் : சைபர்சிம்மன்