அடுத்த அரசிடம் இருந்து ஸ்டார்ட்-அப் சமூகம் எதிர்பார்ப்பது என்ன?

அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய காத்திருக்கும் இவ்வேளையில், இந்திய ஸ்டார் அப் சூற்றுசூழல் புதிய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் இவை...

அடுத்த அரசிடம் இருந்து ஸ்டார்ட்-அப் சமூகம் எதிர்பார்ப்பது என்ன?

Thursday May 23, 2019,

3 min Read

இன்னும் சில மணி நேரங்களில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடுத்த அரசாங்கத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இந்தியாவின் 900 மில்லியன் வாக்காளர்களில், 600 மில்லியன் வாக்காளர்கள் 2019 பொதுத்தேர்தலில்  வாக்களித்தார்கள்.



17வது மக்களவை அமையும் அதே நேரத்தில், இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகளின் நிலையும் நிர்ணயிக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளில், வேகமாக வளரும் நம் ஸ்டார்ட்-அப் சூழலியல், சில உயர்வுகளையும் தாழ்வுகளையும் சந்தித்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் எட்டு ’பில்லியனர் பிசினஸை’ நாம் சேர்த்திருக்கிறோம். இந்த வருடம் தொடங்கி ஐந்து மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், பில்லியனர் பிஸினஸ் குழுவில் மூன்று புது உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.


அது மட்டுமில்லை, எளிதாக வணிகம் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 23 ரேங்குகள் முன்னேறியிருக்கிறது. இப்போதைய ஸ்டார்ட்-அப் சூழல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், நம்மால் இதைத் தாண்டியும் சாதிக்க முடியும் என பங்குதாரர்கள் நம்புகிறார்கள். யார் நம்முடைய பிரதமர் என எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், அடுத்த ஐந்து வருடத்தில் இந்திய ஸ்டார்ட்-அப் சூழலியலுக்கான நம் எதிர்பார்ப்புகள் எவை என பார்ப்போம்.


திட்டத் தெளிவு மற்றும் கட்டுப்பாடுகள்


பெங்களூரூவை சேர்ந்த ஸோலோஸ்டேஸின் (ZoloStays) இணை நிறுவனரும் சி.இ.ஒ-வுமான நிகில் சிக்ரி,

 

“என்ன வேகத்தில் தொழில்துறை வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ற கட்டுப்பாடுகளும், திட்டங்களும் தேவை. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எது சரி, திட்டங்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்து தெளிவு தேவை. ஒவ்வொரு துறைக்கும் இடையே இருக்கும் கோடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதால், நமக்கு புதிய விதிமுறைகள் தேவை”.


குருகிராமை சேர்ந்த சுகாதார ஸ்டார்ட்-அப்பான ஹெல்த்கார்ட்டின் (Healthkart) இணை நிறுவனரும், சி.இ.ஓவுமான சமீர் மஹேஷ்வரி, இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்-அப்கள் எல்லாம் வெளியே தெரிய தொடங்கும் இந்த வேளையில், திட்டவரைவுகளில் ஒரு நிலைத்தன்மை வேண்டும் என்று சொல்கிறார்.


 “தொழில்நுட்ப நிறுவனங்களை எடுத்துக் கொள்ளும் போது, ஒரு சமநிலை, கணிக்க கூடிய தன்மை மற்றும் திட்டங்களில் தெளிவு இருக்க வேண்டும்” என்கிறார் சமீர்.


வேளாண் ஸ்டார்ட்-அப்பான டிஹாட்டின் (Dehaat) இணை நிறுவனர் ஷாஷாங் குமார், அரசு எந்த திட்டங்களை முன்னெடுத்தாலும் அதை செயல்படுத்த மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒத்துழைப்பு தேவை என விளக்குகிறார்.


“யார் அதிகாரத்திற்கு வந்தாலும், சரியான ஒத்துழைப்பிற்கான தேவை இருக்கிறது” என்கிறார் ஷாஷாங் குமார்.


பத்திரவேலைகளை குறைத்தல்


சென்னையை சேர்ந்த இணைய திருமண பதிவு ஸ்டார்ட்-அப்பான வெட்டிங் விஷ்லிஸ்டின் ( Wedding Wishlist) இணை நிறுவனரும், சி.இ.ஓவுமான கனிகா சுப்பையா, இந்தியாவில் ஸ்டார்ட்-அப் தொடங்குவதற்கான பத்திர வேலைகள் இன்னமும் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்.


தன்னுடைய கடைசி நிதி திரட்டின் போது, இந்த பத்திர வேலைகளினால், மொத்த செயல்பாடும் 50 நாட்கள் தாமதமானது என்கிறார் நிகில்.முன்னர் இருந்ததை விட இது குறைவு தான் என்றாலும், ஒப்பந்த விவரங்கள் மற்றும் பத்திரிக்கை வேலைகளை எல்லாம் இன்னமும் குறைக்க முடியும்.


“நிறைய திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம் ஸ்டார்ட்-அப்களுக்கு உதவியிருக்கிறது என்றாலும், இந்த பத்திர வேலைகள், உரிமங்கள் மற்றும் ஒப்பந்தத்தில் வரும் சிக்கல்கள் எல்லாவற்றையும் குறைக்க வேண்டும். சிங்கப்பூரை போல இந்தியாவில் எல்லாம் டிஜிட்டல் ஆக்கப்பட வேண்டும்” என்கிறார் கனிகா.


முதலீட்டாளரும், வழிகாட்டியுமான சஞ்சய் அனந்தராம், ஒரு ஸ்டார்ட்-அப் வெறும் முப்பதே நிமிடங்களில் நிறுவனமாகிவிடும் என்ற சத்தியம் நிறைவேற அரசு இனிமேல் தான் வேலை செய்ய தொடங்க வேண்டியிருக்கிறது. “இதெல்லாம் இனி எளிதாக பிசினஸ் செய்ய உதவும்” என்று அவர் சொல்கிறார்.


நிறைய செயல்பாடுகளை தானியங்கி முறைக்கு மாற்றுவதன் வழியே, தாமதங்களையும் மோதல்களையும் குறைக்கலாம் என்று அவர் நம்புகிறார். இந்தியாவில் இருந்து நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் தான், ஒப்பந்தங்களை எல்லாம் டிஜிட்டலாக மாற்றி, அவற்றை எளிதாக்க வேண்டியது முக்கியமாகிறது.


முதலீட்டை எளிதாக்குதல்!


ஏஞ்சல் டாக்ஸ் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றாலும், அதை முற்றிலுமாக நீக்க வேண்டியதன் அவசியமிருக்கிறது என்று சஞ்சய் விளக்குகிறார்.


 “இந்திய நிதிகளில், உள்நாட்டு முதலீடு செலுத்தப்படவும் நமக்கு வழிகள் தேவைப்படுகிறது. இன்று, நிறுவனங்கள் தொடங்குகையில் வரும் நிதியுதவியில் 90% வெளிநாட்டு முதலீடாகவே இருக்கிறது. அரசாங்கம், குடும்ப நிறுவனங்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார்.


ஓரீயோஸ் வென்சர்ஜ்ஸின் (Orios Ventures) மேனேஜிங் பார்ட்னரான அனூப் ஜெயின், பிசினஸ்  செய்வதை எளிதாக்க அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்றாலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை எளிதாக்க வேண்டிய நேரம் இது என்கிறார்.


 “முதலீட்டு வரவுகளை பார்க்கும் போது, அது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பெரிய ரிஸ்குகள் எடுக்கிறார்கள். எனவே, பட்டியலிப்பட்ட நிறுவனங்கள், பட்டியலிடப்படாத நிறுவனங்கள் என இரண்டு தரப்பிற்குமே சாதகமான நீண்ட-கால வரவுகள் வரக்கூடிய வகையில் வெகுமானங்கள் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.


மேலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியாவில் எளிதாக முதலீடு செய்யவும், பத்திர வேலைகளை எல்லாம் குறைக்கவும் ஒரு அமைப்பை அரசு தொடங்க வேண்டும் என்றும் சொல்கிறார்.


 “நம் ஸ்டார்ட்-அப்கள் உலக அளவில் இயங்க இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு வர்த்தக ஆணையம், இந்திய ஸ்டார்ட்-அப்களை உலகளவில் விளம்பரப்படுத்த தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். இந்தியா இன்னமும் உலகின் பிபிஓ-வாக இல்லை, நாம் அந்த திசையில் சரியான அடி எடுத்து வைப்பதற்கான நேரம் இது” என்கிறார் அனூப்.


ஆங்கில கட்டுரையாளர் – சிந்து காஷ்யப்

தமிழில் - ஸ்னேஹா