'Infographic' வடிவத்தில் திருக்குறள் பற்றிய குறிப்புகள்!
'Infographics' அதாவது 'தகவல் வரைபடம்' என்பது ஏதேனும் ஒரு தலைப்பை பற்றிய எண்ணங்களை எண்கள் மற்றும் எளிய குறிப்புகளுடன் மிகச்சிறந்த தகவல்களை எல்லா தரப்பு மக்களும் எளிதில் புரிந்துகொள்ள உதவும் ஒரு வடிவமைப்பு.
இந்த இன்ஃபோகிராபிக் வடிவத்தின் மூலம் பல நூறு பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும், நூற்றாண்டின் சாதனையாளர்களின் பெரும் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சில குறுகிய பக்கங்களில் விரிவாக விவரிக்க முடியும். ஆங்கிலத்தில் 'Short is Art' என்றொரு பொன்மொழி உண்டு. இதை தகவல் வரைபடம் வடிவமைப்பின் இலக்கணமாகச் சொல்லலாம்.
Infographic என்ற வடிவமைப்பு தற்காலத்தில் உருவாக்கப்பட்டதல்ல , அது கற்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும், ஆனால் தற்போது அதன் வடிவம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.
ஆரம்ப காலங்களில் மன்னர்கள் தங்களின் நாட்டின் எல்லைகளைக் குறித்து வைத்து பயன்படுத்திய வரைபடங்கள் கூட infographic-ன் ஒரு வடிவமே, இதுவே இன்று எல்லைகளைக் கடந்து பல்வேறு துறைகளின் எண்ணங்களை எளிமையாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.
இந்த தகவல் வரைபட வடிவமைப்பில் பெறும் பங்கு வகிப்பது அதன் தலைப்பும், தலைப்புக்கு ஏற்ப திரட்டிய தகவல்களும் தான்.
Infographic வடிவம் பற்றிய சில குறிப்புகள்:
இந்த வடிவத்தில் திரட்டிய தகவல்களை வெளியிடும் போது அந்த தகவல்கள் பார்வையாளர்களை திகட்டாமல் எளிதில் அவர்கள் மனதில் பதிகிறது.
மேலும் இதன் வடிவம் இன்றைய சமூக வலை தளங்களில் பகிர்வதற்கு உகந்ததாக உள்ளதால் இணையத்தில் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.
இவ்வாறான பயன்கள் கொண்ட infographic-ன் வடிவத்தில் நம் தமிழ் மொழியின் சிறப்புகளை வெளியிடுவதன் மூலம், இளைய இணைய சமுதாயத்திடம் தமிழ் மொழியின் சிறப்புகளை சுருக்கமாக எடுத்துரைக்க முடியும் என்ற எங்களுடைய எண்ணங்களின் வெளிப்பாடு தான் இந்த 'திருக்குறள்' என்கிற தலைப்பில் தகவல் வகைபட வடிவம். இது போன்று தமிழின் சிறப்புகளையும், தமிழனின் சிறப்புகளையும் மற்றும் இன்ன பிற தலைப்புகளிலும் அவ்வப்போது வடிவமைத்து எங்களின் முகநூல் பக்கத்திலும், வலை தளத்திலும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
திருக்குறள் தகவல் வரைபடத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் மற்றும் தரவுகள்:
உலகப் பொது மறை திருக்குறள் என்பதனை குறிப்பால் உணர்த்த உலக வரைபடத்தை பின்புலமாகக் கொண்டு தொடங்குகிறது,
தமிழில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் தலைமை வகிப்பது திருக்குறள். 80க்கும் மேற்பட்ட மொழிகளில் பகிரப்பட்டுள்ள திருக்குறளின் தமிழ் வடிவத்தில் 14000 வார்த்தைகளும், 42194 முறை எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலத்தில் மட்டுமே 40 ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் முதன் முறையாக ஜி யூ போப் (வீரமாமுனிவர்) என்பவரால் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது .
இது போன்ற பல தகவல்களை இந்த விளக்கப்படத்தில் (infographic) விளக்கப்பட்டுள்ளது .
மென்பொருள் துறையில் பணிபுரியும் நானும் எனது நண்பர்கள் நல்லேந்திரன், கிருஷ்ணா மற்றும் கார்த்திகேயன் பார்த்திபன் இவர்களின் பங்களிப்பில் எங்கள் பதிவுகள் வெளிவருகிறது.
பின்தொடர, முகநூல் பக்கம்:www.facebook.com/timepausecreations
வலைபதிவு:timepausecreations.wordpress.com