சிறு வணிகங்களுக்கு பணப்புழக்கம் ஏன் முக்கியம்? 4 காரணங்கள் இதோ!
நிறுவனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும், வெற்றிகரமாக வழிநடத்தவும், சிறப்பான முடிவுகளை எடுக்கவும் நிதி முக்கியபங்காற்றுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிசினத்தை பொறுத்தவரை ‘பணம் தான் ராஜா’.
நிறுவனத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும், வெற்றிகரமாக வழிநடத்தவும், சிறப்பான முடிவுகளை எடுக்கவும் நிதி முக்கியபங்காற்றுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பிசினத்தை பொறுத்தவரை ‘பணம் தான் ராஜா’.
வணிக நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையைத் தவிர்க்க அவ்வப்போது பணப்புழக்கத்தைக் கண்காணிப்பது மிகவும் அவசியமானது. உண்மையில், 82% வணிகங்கள் பணப்புழக்கத்தின் மோசமான நிர்வாகத்தால் தோல்வியடைவதாகறு ஃபோர்ப்ஸ் கண்டறிந்துள்ளது.
வணிக நிறுவனங்கள் பணப்புழக்கத்தை கண்காணிப்பது எப்படி, எதற்காக அதை செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக காணலாம்...
பணப்புழக்கம் என்றால் என்ன?
பணப்புழக்கம் என்பது உங்கள் வணிகத்தில் இருந்து பெறப்படும் மற்றும் செலவழிக்கப்படும் தொகையை குறிக்கிறது. ஒரு நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது என்றால், செலவை விட வரவு அதிகமாகவும், மோசமான நிலையில் இருந்தால் வரவை விட செலவு அதிகமாகவும் இருக்கும்.
சிறு வணிகங்களுக்கு பணப்புழக்கம் முக்கியமானது என்பதற்கான நான்கு காரணங்கள் இங்கே உள்ளன.
ஆராய்ந்து முடிவுகளை எடுங்கள்:
உங்கள் பணப்புழக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வது, பிசினஸில் எப்போது பணம் இருக்கிறது, எப்போது இல்லை என்பதைப் பற்றிய சரியான மதிப்பீட்டை வழங்குகிறது. இது உங்கள் நிதி மற்றும் செலவினங்களைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உதவுகிறது.
உங்கள் பணப்புழக்கத்தில் தெளிவான அல்லது துல்லியமான தரவு இல்லாமல், எந்த முடிவையும் எடுப்பது சாதகமானதாக அமையாது.
எடுத்துக்காட்டாக, போதுமான பணப்புழக்கம் இன்றி அறியாமல் மூலப்பொருட்கள், ஊழியர்கள் சம்பளம், இயந்திரத்திற்கான செலவினங்களை மேற்கொள்கிறீர்கள் என்றால், அத்தகைய சூழ்நிலைகள் உங்கள் வணிகத்தை பெரும் நஷ்டத்தில் தள்ளக்கூடும். எனவே, பிசினஸ் செய்பவர்கள் எப்போதும் தங்களது பணப்புழக்கம் குறித்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.
பண வரவு, செலவினத்தைப் புரிந்து கொள்ளுங்கள்:
பணப்புழக்கம் தொடர்பான தகவல்களை அறிந்து வைத்திருப்பது செலவுகளை திறம்பட நிர்வகிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் எவ்வளவு பணத்தை நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் உங்கள் பிசினஸிற்காக புது பட்ஜெட்டை ப்ளான் செய்கிறீர்கள் என்றால், சேகரித்து வைத்துள்ள பணப்புழக்க தரவுகள் உங்களுக்கு துல்லியமாக உதவும்.
கூடுதலாக, உங்கள் வணிகச் செலவுகள் அனைத்தையும் தெரிந்துகொள்வது உங்கள் நிறுவனத்தில் செய்யப்படும் தேவையில்லாத செலவுகளைக் கண்டறிய உதவும். இதனால் நீங்கள் உங்கள் கடன்களைக் குறைத்து, அந்த பணத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பணப்புழக்கத்தை மேம்படுத்துங்கள்:
பைனான்ஸ் அல்லது அக்கவுண்ட்ஸில் நீங்கள் புலியாக இல்லை என்றால் வணிக கணக்குகளை புரிந்து கொள்வது எளிதான காரியம் அல்ல. ஆனால், பணப்புழக்கம் என்பது எளிதானது என்பதால் அதனை புரிந்து கொள்வதில் எவ்வித சிக்கலும் இருக்காது. அனைத்து செலவுகளையும் பட்டியலிட்டு, செலவுகளைச் செலுத்துவதற்கு உங்கள் வங்கியில் போதுமான பணம் உள்ளதா என்பதை சரிபார்த்தாலே, பிசினஸில் வர உள்ள சவால்களை சமாளித்துவிடலாம்.
வணிகத்தை அளவிடுங்கள்:
“சின்ன கல்லு பெத்த லாபம்” என்பது பிசினஸிற்கு ஒத்துவராது. சில சமயங்களில் நிறுவனத்தின் அளவை பொறுத்தே அதன் வளர்ச்சியும் அமைகிறது. எனவே தான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது டீமை விரிவுபடுத்தவும், புதிய சந்தை வாய்ப்புகளை தேடியும் ஆராய்கின்றன.
உங்கள் ஸ்டார்ட்அப்பை வளர்க்க, பொருட்கள் அல்லது பங்குகளை ஆர்டர் செய்தல், அதிக பணியாளர்களை பணியமர்த்துதல், அதிக தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை வாடகைக்கு எடுப்பது உட்பட, நிறைய பணம் தேவைப்படும்.
எனவே, உங்கள் நிறுவனம் நேர்மறையான பணப்புழக்கத்துடன் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வது மிக, மிக அவசியமாகும். குறிப்பாக சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் சிறகு விரித்து விரிவடைய பணப்புழக்கத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் - ஆஸ்மா கான்
ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கான வர்த்தகத் திட்டத்தை செதுக்குவது எப்படி?