Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சந்தா அடிப்படையில் ஆண்கள் உள்ளாடைகளை விற்பனை செய்யும் ’Buttalks’

ஆண்களுக்கான உள்ளாடை சந்தையில் இருக்கும் இடைவெளியை நிறுவனர்கள் உணர்ந்தனர். இதற்கான தீர்வை கண்டறிந்து விற்பனையை தொடங்கினர்.

சந்தா அடிப்படையில் ஆண்கள் உள்ளாடைகளை விற்பனை செய்யும் ’Buttalks’

Saturday September 09, 2017 , 5 min Read

"

பெரும்பாலான ஆண்கள் காதல் வயப்படும் போதோ அல்லது திருமணத்தின் போதோதான் புதிய உள்ளாடைகளை வாங்குவார்கள். மற்ற நேரங்களில் அந்த பொறுப்பு அவர்களின் அம்மாவுடையது. அதன்பிறகு அந்த பொறுப்பு அவர்களது மனையியுடையது என்று டெபென்ஹாம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

Buttalks இணை நிறுவனர் ப்ரிஜேஷ் தேவாரெட்டி யுவர்ஸ்டோரி உடனான தொலைபேசி உரையாடலில் உள்ளாடைகளை டூத்பிரஷ்ஷுடன் ஒப்பிட்டு குறிப்பிடுகையில்,

”நம்மில் பெரும்பாலானோருக்கு டூத்பிரஷ்ஷையும் உள்ளாடைகளையும் எப்போது தூக்கி எறிவது என்பதே தெரியாது. ஆண்கள் உள்ளாடைகளை வாங்கினால் அது நிறம்மாறி, கிழிந்து கறைபடிந்து போகும் வரை பயன்படுத்துவர். ஏனெனில் அது மற்றவர்களின் கண்களுக்குத் தெரியும் பொருளல்ல என்பதால் கவலைப்படவேண்டாம் என்பதே அவர்களது எண்ணம்.”

கிழிந்து போன உள்ளாடை என்பது கல்லூரி ஹாஸ்டலிலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்தார் ப்ரிஜேஷ். ப்ரிஜேஷ், சூரஜ் சலீம், மனீஷ் கிஷோர் ஆகியோர் இணைந்து உள்ளாடை சந்தா ஸ்டார்ட் அப்பை சென்னையில் நிறுவினர். 

\"Buttalks

Buttalks நிறுவனர்கள்


இதுவரை நிகழ்ந்தவை...

உள்ளாடைகளின் சமீபத்திய ஸ்டைலை அறிந்துகொள்ளவும், சில மாதங்களுக்கு பிறகோ அல்லது தேவையெழும்போதோ புதிதாக வாங்கிக்கொள்ளவும் Buttalks உதவுகிறது. ப்ரிஜேஷ் புனேவின் சிம்பயாசிஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனில் ப்ராடக்ட் டிசைன் பட்டம் பெற்றார். அவர் சமகால சிற்பம் மற்றும் இன்ஸ்டலேஷன் கலைஞர்.

இணை நிறுவனர்களான சூரஜ் மற்றும் மனீஷ் டிஜிட்டலி இன்ஸ்பையர்ட் மீடியா என்கிற கிரியேடிவ் டிஜிட்டல் ஏஜென்சி நடத்தி வந்தனர். ப்ரிஜேஷ் தனது பணியின்போது அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சூரஜ் பொறியாளராக இருந்தபோதும் அவரது ஆர்வம் பொழுதுபோக்கு துறையில் இருந்தது. அதனால் மும்பையின் பல்வேறு டெலிவிஷன் ப்ரொடக்‌ஷன் ஹவுஸில் கிரியேடிவ் ப்ரொடியூசராக பணியாற்றினார். எம்பிஏ பட்டதாரியான மனீஷ் டிஜிட்டலி இன்ஸ்பையர்ட் மீடியாவின் இயக்குநர் மற்றும் சிஇஓ.

ப்ரிஜேஷ் கல்லூரியில் படித்த நாட்கள் குறித்து யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார். பெரும்பாலான ஆண்கள் தங்களது உள்ளாடைகளில் கவனம் செலுத்தாமல் இருந்ததை அறிந்தார். மோசமான கிழிந்த உள்ளாடைகளை ஹாஸ்டல் முழுவதும் காணமுடியும் என்றார். பயனர்களின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனமான Wankai என்னும் நிறுவனத்தையும் நிறுவினார் ப்ரிஜேஷ். இந்தப் பகுதி குறித்து ஆராய்வதில் நேரம் செலவிட்டார்.

அற்புதமான தருணம்

பொதுவாக ஆண்கள் உள்ளாடைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை ஆய்வின் மூலம் உணர்ந்தார். ஷர்ட்கள் மற்றும் பேண்ட்கள் வாங்குவதில் எடுத்துக்கொள்ளும் கவனத்தை உள்ளாடைகளுக்கு செலுத்துவதில்லை.

”பொதுவாக உள்ளாடைகள் பில்லிங் பகுதிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் பில்லிங் செய்ய செல்லும் வழியில் அவற்றை வாங்குவார்கள். மேலும் பெரும்பாலான ஆண்கள் ஒவ்வொரு முறையும் ஒரே ப்ராண்டை வாங்குவார்கள். அளவில் மட்டுமே கவனம் செலுத்துவார்களே தவிர உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.”

இந்தப் பிரிவில் சந்தாவுடன் கூடிய வணிக மாதிரி பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார் ப்ரிஜேஷ். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பங்களை பகிர்ந்துகொள்ளலாம். உள்ளாடைகள் ஒரு மர்மமான பெட்டியில் அவர்களது வீட்டிலேயே டெலிவர் செய்யப்படும். பெர்சனல் ஸ்டைலிஸ்டுகளின் உதவியைக் கொண்டு பல்வேறு சர்வதேச மற்றும் புதுமையான ப்ராண்டுகளை அணுகுவதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் பலவிதமான உள்ளாடைகள் தொகுப்பு இருக்கும். இதற்கு உதவுவதே இந்த வணிக மாதிரியின் நோக்கமாகும்.

Buttalks தொடக்கம்

ப்ரிஜேஷ் தனது கலைப்படைப்பு மூலம் சேகரித்த தொகையான 3,00,000 ரூபாயை ஆரம்பகட்ட முதலீடாகக் கொண்டு நிறுவனத்தைத் துவங்கினார். ஸ்டைலிஸ்டான சஷாவின் உதவியுடன் ப்ராண்டை நிலைநிறுத்தினார். Buttalks வலைதளம் சஷாவை பற்றி விவரிக்கையில்,

”நாட்டில் மறைமுக பெர்சனல் ஸ்டைலிஸ்ட் இவர். நியூயார்க் முதல் டோக்யோ வரை உலகம் முழுவதும் ரகசியமாக செயல்பட்டு வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக மிகுந்த செல்வாக்குடையவர்களின் உள்ளாடைகள் ஸ்டைலிங்கில் ஈடுபட்ட இவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.”

மிகுந்த ஆர்வத்துடன் ப்ரிஜேஷிடன் சஷாவின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கேட்டேன். அவர் சிரித்தவாறே,

'டாப் கியரில்' வரும் 'தி ஸ்டிக்' குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சஷா, தி ஸ்டிக்கிற்கு ஒப்பானவர், என்றார்.

’டாப் கியர்’ரில் ’தி ஸ்டிக்’கின் அடையாளம் ரகசியமானது. அந்த கதாப்பாத்திரம் ரேசிங் உடையணிந்து தலைக்கவசம் அணிந்திருக்கும். நிகழ்ச்சியில் சோதிக்கப்படும் கார்களுக்கு லேப் டைம் நிர்ணயிருக்கும். Buttalks நிறுவனத்தில் சஷா திரைக்குப் பின்னால் பணிபுரிகிறார். பயனர்களின் வேறுபட்ட ரசனை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது மிஸ்டரி சந்தா பாக்ஸிற்கு ட்ரெண்ட் உருவாக்குகிறார்.

அறிமுகம் மற்றும் செயல்பாடு

சந்தை குறித்தும் முக்கிய தொழில் குறித்தும் சிறப்பான புரிதல் இருப்பினும் மக்களைக் கவர மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்வதற்கான தேவை இருப்பதை உணர்ந்தார் ப்ரிஜேஷ். இந்தப் பகுதியில்தான் அவரது இணை நிறுவனர்களான சூரஜ் மற்றும் மனீஷ் இருவரின் நிபுணத்துவமும் அவர்களது கிரியேடிவ் டிஜிட்டல் ஏஜென்சியும் கைகொடுத்தது.

மூவரும் இணைந்து தங்களது பண்பாடு மற்றும் நிலைப்படுத்துதல் ஆகியவற்றை விவரிக்கும் மார்க்கெட் வீடியோ ஒன்றை உருவாக்கினர். ப்ரிஜேஷ் நினைவுகூறுகையில், 

“நாங்கள் உருவாக்கிய விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு முன்பே பத்து நாட்களில் 50 தயாரிப்புகள் விற்பனையானது,” என்றார்.


ஜூலை 2017-ம் ஆண்டு இந்த வீடியோ ஒளிபரப்பானது. அதன் பிறகு ஆர்டர்கள் அதிகரித்தது. வீடியோ ஒளிபரப்பு மற்றும் வலைதளம் ஆகியவற்றைக் கண்டு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களது ஒட்டுமொத்த வலிமையையும் ஆய்வதற்கு முன்பு சில மாதங்கள் இந்த தளத்தை மேலும் மேம்படுத்த தீர்மானித்தார்.

Buttalks-ன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரோஹ்தக், காசியாபாத் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல என்று விவரித்தார் ப்ரிஜேஷ்.

ஆனால் வாடிக்கையாளர்களிடமிருந்து மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 

ஸ்டைலிஸ்ட் தனது கைகளால் எழுதிய குறிப்புகளை பெரிதும் பாராட்டினர். மக்கள் தங்களது உள்ளாடைகள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்களது சேவைக்கு உறுதியளித்து தங்களது நண்பர்களுக்கு பரிந்துரைத்தனர். வாடிக்கையாளர்களில் பலர் தங்களது நண்பர்களும் சந்தாதாரர்கள் என்பதை உறுதியளிப்பதாக தகவல் எழுதினர்.

உள்ளாடை ப்ராண்டின் வாழ்க்கை சுழற்சி

Buttalks ஆர்டர் செய்ய வாடிக்கையாளர்கள் மூன்று வழிமுறைகளை பின்பற்றவேண்டும். முதலில் வாடிக்கையார்கள் தங்களது வசதிக்கேற்ப ’சாம்பிளர்’ அல்லது ‘வருடாந்திர சந்தா’ ஆகியவற்றை தேர்ந்தெடுக்கலாம். சாம்பிளர் திட்டத்தில் ஒரு ஆர்டரில் மூன்று உள்ளாடைகள் இருக்கும். வருடாந்திர திட்டத்தில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று உள்ளாடைகள் அனுப்பப்படும்.

\"image\"

image


தற்போது மூன்று திட்டங்கள் உள்ளன. சாம்பிளர் கட்டணம் 999 முதல் 4,999 வரையும் வருடாந்திர திட்டத்தின் கட்டணம் 2,700 முதல் 14,000 வரையாகும். ஒவ்வொரு குறிப்பிட்ட விலையிலும் அந்த பேக்கேஜின் பகுதியாக இருக்கும் குறிப்பிட்ட வகையான ப்ராண்ட் வழங்கப்படும்.

வாடிக்கையாளர்கள் ஒரு முறை Buttalks உள்ளாடையை வாங்கினால் அவர்கள் ஏற்கெனவே பயனபடுத்தி வந்த ப்ராண்டிற்கும் புதிதாக வாங்கியதற்கும் வித்தியாசத்தை நிச்சயம் உணர்வார்கள். ஒருமுறை சாம்பிளரை முயற்சித்தால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் வருடாந்திர திட்டத்தையே தேர்ந்தெடுப்பார்கள்.

”உள்ளாடை என்பது மறைக்கப்பட்ட ஒரு பொருளாக இருந்தாலும் அது ஒருவரது ஆடை அலங்காரத்தில் முக்கியமானதாகும். ஆண்கள் பெண்களை அழகிய உள்ளாடைகளில் பார்க்க விரும்பது போலவே பெண்களும் ஆண்களை அழகிய உள்ளாடைகளில் பார்க்க விரும்புவார்கள்,” என்றார்.
\"image\"

image


செயல்படும் துறை மற்றும் எதிர்கால திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச ப்ராண்டுகள் இந்திய சந்தையில் நுழைந்திருப்பதைப் பார்க்கையில் உள்ளாடை துறையில் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. இந்தத் தகவலை இந்திய உள்ளாடை சந்தை : ட்ரெண்ட்ஸ் மற்றும் வாய்ப்புகள் என்கிற தலைப்பில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அளவு அதிகரித்து வருவதையும் ஒழுங்கற்ற சந்தையின் பங்களிப்பு குறைந்து வருவதையும் பார்க்கையில் விலையைக் காட்டிலும் ப்ராண்டிற்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பது தெளிவாகிறது.

மக்கள் தொகை அடிப்படையிலும் ஒட்டுமொத்த சந்தை வாய்ப்புகளின் அடிப்படையிலும் இந்திய உள்ளாடை சந்தை வருங்காலத்தில் சிறப்பாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. எனினும் ப்ராடக்டின் வகைகள் குறைவாக இருப்பதும் ப்ராண்டை உருவாக்குவதில் அதிக செலவுகளை மேற்கொள்ள நேர்வதும் இந்தத் துறையின் சவாலாக இருக்கும்.

இந்தியாவில் ஆண்களுக்கான உள்ளாடைகளுக்கென சந்தா அடிப்படையிலான சேவை வழங்கும் ஒரே நிறுவனம் Buttalks. இதை உறுதிசெய்வதற்காக முயற்சிக்கையில் அமேசான் ‘சந்தா செலுத்தி சேமிக்கலாம்’ என்கிற வாய்ப்பை வழங்குவதும் அதைத்தவிர குறிப்பிட்ட சேவை வழங்கும் தளங்கள் இந்த சந்தையில் அதிகளவில் காணப்படவில்லை என்பதும் தெரியவந்தது. 

\"image\"

image


ஆண்களின் உள்ளாடைகள், சாக்ஸ், ரேசர்ஸ் போன்ற பொருட்களை சந்தா செலுத்தி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கும் நம்பத்தகுந்த மற்றொரு தளமான மேன்பேக்ஸ். ஆனால் தயாரிப்புகளின் இருப்பு இல்லாததால் இந்தத் தளம் தற்போது செயலற்று காணப்படுகிறது.

டெய்லி ஜாக்ஸ், அண்டர்வேர் நேஷன் போன்றவை உலகளவில் செயல்பட்டு மாதாந்திர சந்தா சேவையை வழங்குகிறது. ட்ரூ அண்ட் கோ, பேண்டி ட்ராப் போன்றவை பெண்களுக்கு சேவை வழங்குகிறது. மீஅண்டீஸ் போன்றவை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சந்தா சேவையை வழங்குகிறது.

தற்போது வளர்ச்சி குறித்து ப்ரிஜேஷ் மற்றும் அவரது குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களது ஆர்டர்களை அதிகரிப்பதிலும் வாடிக்கையாளர்கள் ஒரே ப்ராண்டை மட்டும் பயன்படுத்துவதற்கு மாறாக புதிய வகைகளைக் கண்டறிய உதவவதிலும் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஆண்களின் உள்ளாடைகளில் கவனம் செலுத்தி வந்தாலும் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து பெண்களின் உள்ளாடைகள் சந்தையிலும் எதிர்காலத்தில் செயல்பட விரும்புவதாக தெரிவித்தார் ப்ரிஜேஷ்.

பலவிதமான குழு, வழக்கத்திற்கு மாறான சுவாரஸ்யமான மார்கெட்டிங் உத்திகள், விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் என செயல்பட்டு வருகிறது Buttalks. ஒரு பில்லியன் டாலருக்கு யூனிலிவர் நிறுவனம் வாங்கிய ‘டாலர் ஷேவ் க்ளப்’ நிறுவனமும் சந்தா சேவைகள் வழங்குகிறது. Buttalks நிறுவனமும் அத்தகைய வளர்ச்சியை காணுமா?

ஆங்கில கட்டுரையாளர் : ஹர்ஷித் மல்லய்யா

"