Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்துக்கு PF கணக்கை மாற்றுவது எப்படி? - Step-by-step Guide

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கோடிக்கணக்கான பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு காரணங்களால் வெவ்வேறு நிறுவனங்களுக்கு பணி மாறி செல்வது வழக்கம். அப்போது, பிஎஃப் நிதி இருப்பை (பேலன்ஸ்) புதிய நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு நிறுவனங்களுக்கு பணி மாறி செல்வது வழக்கம். அப்படி பணி மாறி செல்லும் நேரங்களில் உறுப்பினர்கள் தங்களது பழைய நிறுவனத்தின் சார்பில் வரவு வைக்கப்பட்ட பிஎஃப் நிதி இருப்பை (பேலன்ஸ்) புதிய நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.  

PF பேலன்ஸை புதிய நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்வது ஏப்படி?

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கோடிக்கணக்கான பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாதந்தோறும் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் இதில் இணைந்தும் வருகின்றனர். இது தொழிலாளர்கள் நலன் கருதி அரசு தரப்பில் நடைமுறையில் உள்ள திட்டமாகும். இதன் மூலம் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அந்த பணத்தை திரும்ப பெறலாம். அதுமட்டுமல்லாது கல்வி, திருமணம் மற்றும் வீட்டு வசதி சார்ந்தும் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை கிளைம் செய்யலாம். 

கடந்த 1952-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதிய திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் தொழிலாளர்களும், தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது பங்களிப்பாக வழங்கும். அது சம்பந்தப்பட்ட தொழிலாளரின் உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவரும் இபிஎஃப்ஓ உறுப்பினர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

pf

இந்த சூழலில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் / ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி இருக்கும் சூழலில் அவர்கள் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் பிஎஃப் கணக்கில் பணத்தை பெற பிரத்யேக மெம்பர் ஐடி பயன்படுத்தப்பட்டிருக்கும். அதே போல, வேறொரு நிறுவனத்துக்கு அவர் பணி மாறி செல்லும் போது அவருக்கு வேறு மெம்பர் ஐடி உருவாக்கப்பட்டு, அதில் பணம் வரவு வைக்கப்படும்.

இதில், உறுப்பினர்கள் தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் மெம்பர் ஐடி உடன், பழைய மெம்பர் ஐடி-யில் உள்ள பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம். இது தானியங்கு முறையில் மாறும் வகையிலான வசதி இபிஎஃப்ஓ-வில் இப்போது உள்ளது. அது வெற்றி பெறாத நிலையில் இணைய வழியில் எளிதில் அதை உறுப்பினர்கள் மேனுவலாக மேற்கொள்ளலாம். 

  • அதில் தங்களது UAN எண், பாஸ்வேர்ட் மற்றும் Captcha-வை  உள்ளிட வேண்டும். தொடர்ந்து உறுப்பினரின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் மற்றும் Captcha-வை உள்ளிட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பிஎஃப் கணக்கு விவரங்கள் ஓபன் ஆகும். 

  • அதில், View என உள்ள மெனுவை கிளிக் செய்து ‘Service History’-யை தேர்வு செய்தால் உறுப்பினர்கள் தாங்கள் பணியாற்றிய நிறுவனங்களின் மெம்பர் ஐடி விவரங்களை அறியலாம். அதில் உள்ள நிதி இருப்பு (பேலன்ஸ்) நிலவரம் குறித்த விவரத்தை அறிய பாஸ்புக் https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login தளத்தில் லாக் இன் செய்து அறிந்து கொள்ளலாம்.

  • தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் ஐடி உடன் பழைய ஐடி-யை இணைக்க விரும்பும் உறுப்பினர்கள் அந்த விவரத்தை குறித்துக் கொள்ள வேண்டும். ஸ்க்ரீன்ஷாட் கூட எடுத்துக் கொள்ளலாம். 

  • பின்னர், இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான தளத்தில் ஹோம் பேஜில் ‘ஆன்லைன் சர்வீஸஸ் என்ற மெனுவை தேர்வு செய்ய வேண்டும். 

  • அதில், ‘One Member One EPF Account’-னை தேர்வு செய்ய வேண்டும். 

  • தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது டிரான்ஸ்பரை பழைய அல்லது புதிய /தற்போது பணியாற்றும் நிறுவனம் என ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்து அட்டஸ்டேஷன் பெற்று டிரான்ஸ்பர் கிளைம் ரெக்வெஸ்டினை மேற்கொள்ளலாம். அதை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் தற்போது பணியாற்றும் நிறுவனத்தினை தேர்வு செய்வதன் மூலம் இந்த செயல்முறையை எளிதாக்கலாம்.  

  • பின்னர், பழைய ஐடியை உள்ளிட்டு, Get Detail ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். 

  • அதில் பயனர்கள் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் விவரங்கள் வரும். அதை உறுதி செய்து கொண்டு உறுப்பினர்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு ‘சப்மிட்’ கொடுக்க வேண்டும். 

  • அடுத்து, டிரான்ஸ்பர் கோரிக்கை தொடர்பாக ‘Form 13’-னை டவுன்லோட் செய்து, அதை உறுப்பினர்கள் தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் வசம் கொடுக்க வேண்டும். 

  • அதையடுத்து, நிறுவனத்தின் தரப்பில் ஒப்புதல் தரப்படும். பின்னர் அது இபிஎஃப்ஓ அலுவலகத்துக்கு அனுப்பப்படும். உறுப்பினரின் விவரங்களை சரிபார்த்து அதற்கு இபிஎஃப்ஓ ஒப்புதல் தரும். 

  • உறுப்பினரின் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் கோரிக்கை நிராகரிக்கப்படும். 

Edited by Induja Raghunathan