Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கும் 5 வங்கிகள் இதோ!

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனப் பற்றாக்குறையைப் போக்கி கடன் வசதிகளை வழங்க பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் வழங்கும் 5 வங்கிகள் இதோ!

Thursday May 12, 2022 , 4 min Read

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் மத்திய (எம்.எஸ்.எம்.இ.) தொழில் நிறுவனங்கள். கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீள்வதில் எம்.எஸ்.எம்.இ-க்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

Msme துறையானது ஜிடிபி-யில் 29 சதவீதம் பங்களிக்கிறது. இத்துறையின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவதே தனது நோக்கம் என்று குறிப்பிட்டிருந்தார் முன்னாள் எம்.எஸ்.எம்.இ மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

1
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக் கொண்டு விரிவடைய அதிக முதலீடு தேவைப்படுகிறது. இந்தத் துறை சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை செயல்பாட்டு மூலதனத்தின் பற்றாக்குறை. அடுத்தது போதிய கடன் வசதிகள் கிடைப்பதில்லை. இந்நிலையில், பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சிறு வணிகங்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளன.

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கக்கூடிய இந்தியாவின் முன்னணி வங்கிகள் மற்றும் அதன் நிதித்திட்டங்கள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்:

1. பேங்க் ஆஃப் பரோடா

இந்த வங்கி 1908-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுத் துறை வங்கியாக செயல்பட்டு நிதி சேவைகள் வழங்கும் இந்நிறுவனம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத்திற்கு நிதியுதவி அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்த வங்கி கீழ்கண்ட சேவைகளை வங்குகிறது.

2

பரோடா எஸ்.எம். லோன் பேக் (Baroda SME Loan Pack)

இதன்கீழ் செயல்பாட்டு மூலதனத்திற்கும் நீண்ட கால தேவைகளுக்கும் சிக்கலில்லாத முறையில் கடன் வழங்கப்படுகிறது. வணிகத்தின் தன்மை, சுழற்சி, பணப்புழக்கம், பீக் டைம் தேவைகள், எதிர்பாராத வகையில் ஏற்படும் திடீர் சந்தை தேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

MSME Capex Loan

பழைய இயந்திரங்களை மாற்றுதல், பேலன்சிங் இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், நவீனமயமாக்கல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான முதலீடு, சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுதல் (Captive Power Plants), தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான முதலீட்டு செலவுகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

எஸ்.எம்.இ குறுகிய கால கடன் (SME Short Term Loan)

தற்காலிக தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு விற்றுமுதல் 150 கோடி ரூபாய் வரை கொண்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் இந்தக் கடன் வசதி பெற விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கடந்த மூன்றாண்டுகளுக்கான கடன் மதிப்பீடு திருப்தியளிக்கக்கூடியதாக இருக்கவேண்டியது அவசியம். BOB-5 & above, சமீபத்திய பேலன்ஸ் ஷீட், நிதித்திறன், குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் திருப்திகரமாக டீலிங் செய்திருத்தல் போன்றவை அத்தியாவசியமானதாகக் கருதப்படுகின்றன.

எஸ்.எம்.இ நடுத்தர கால கடன் (SME Medium Term Loan)

இந்தக் கடன் வசதியானது நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத்தில் காணப்படும் இடைவெளியை நிரப்புகிறது. பணப்புழக்க விகிதம் (Current Ratio) மேம்பட உதவுகிறது. மற்ற வங்கிகள் அல்லது நிறுவனங்களில் பெறப்பட்ட பாதுகாப்பான கடன் (secured loan) மற்றும் பாதுகாப்பு இல்லாத கடனை (unsecured loan) திரும்ப செலுத்தவும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

ஆனால், நிறுவன செயல்பாடுகள் அல்லாத பிற நடவடிக்கைகளுக்கு கடன் வழங்கப்படாது. ஆண்டு விற்பனை விற்றுமுதல் 1 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை கொண்டுள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2. YES Bank

யெஸ் வங்கி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான உத்திரவாதமளிக்கப்பட்ட அவசரகால கடனளிப்பு (Guaranteed Emergency Credit Line), ஸ்மார்ட் எட்ஜ், ஸ்மார்ட் ஓவர்டிராஃப்ட், Cash Backed Lending Program போன்ற திட்டங்களின்கீழ் சிறு வணிகங்களுக்கு கடன் வழங்கி வருகிறது.

2

எம்.எஸ்.எம்.இ-க்களுக்கான உத்திரவாதமளிக்கப்பட்ட அவசரகால கடனளிப்பு (GECL)

இது ஒரு எம்.எஸ்.எம்.இ கடன் திட்டம். இதற்கு National Credit Guarantee Trustee Company (NCGTC) வங்கிக்கு 100 சதவீத உத்தரவாதம் அளிக்கிறது. தகுதியுள்ள எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு கூடுதல் செயல்பாட்டு மூலதன டெர்ம் லோன் கொடுக்கப்படும்.

கடன் பெறுபவரின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் (50 கோடி ரூபாய் வரை) தொகையில் 20 சதவீதம் GECL கீழ் கடனாகக் கொடுக்கப்படும்.

ஸ்மார்ட் எட்ஜ்

எம்.எஸ்ம்.எம்.இ நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனம் மற்றும் இதர வணிக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் எளிதாகக் கடன் வசதி வழங்கப்படுகிறது. ஸ்கோர்கார்ட் அடிப்படையில் கடன் தொகையின் வரம்பு 1 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஓவர்டிராஃப்ட்

தயாரிப்பு மற்றும் ட்ரேடிங் செய்யக்கூடிய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு பேலன்ஸ் ஷீட் இல்லாமல் 1 கோடி ரூபாய் வரை செயல்பாடு மூலதனம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள், பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் போன்றோருக்கும் இந்தக் கடன் வசதி வழங்கப்படுகிறது.

Cash-Backed Lending Programme

Letter of Credit, Buyers Credit, வங்கி உத்தரவாதம் போன்றவற்றின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

3. ஹெச்.டி.எஃப்.சி வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது. சிறு வணிகங்களுக்கு செயல்பாடு மூலதனக் கடன், வணிகக் கடன், டெர்ம் லோன் போன்றவற்றை வழங்கி உதவுகிறது ஹெச்.டி.எஃப்.சி வங்கி.

1

எஸ்.எம்.இ செயல்பாட்டு மூலதனத்திற்கு இந்த வங்கி முன்னுரிமை அளிக்கிறது. ரொக்கக் கடன் மிகைப்பற்று (Cash Credit Overdraft), குறுப்பிட்ட இடைவெளியில் கட்டி முடிக்கப்படும் கால கடன் (Term Loan), கடன் உறுதிக் கடிதம் (Letter of Credit), வங்கி உத்தரவாதம் (Bank Guarantee), ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து செலவுகளுக்கும் தேவைப்படும் பேக்கிங் கிரெடிட் (Packing Credit), ஏற்றுமதி செய்த பிறகு இறக்குமதியாளர்களிடமிருந்து பணம் கிடைக்கும் வரையிலான போஸ்ட் ஷிப்மெண்ட் நிதி, பில் டிஸ்கவுண்டிங் போன்றவற்றின்கீழ் செயல்பாட்டு மூலதன கடன் வழங்கப்படுகிறது.

வணிகக் கடன்

50 லட்ச ரூபாய் வரையிலான கடன்கள், பிணையம் அல்லது உத்திரவாதம் தள்ளுபடி செய்தல் போன்றவை வணிகக் கடன்களில் அடங்கும்.

டெர்ம் லோன் (Term Loan)

வணிகங்கள் விரிவடையவும் மூலதன செலவுகளுக்கும் நிலையான சொத்துகளுக்கும் ஐந்தாண்டுகள் வரை டெர்ம் லோன் வழங்கப்படுகிறது. எஸ்.எம்.இ-க்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறுகிய கால நிதிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

4. ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனம். குஜராத்தின் வதோதராவில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் செயல்படுகிறது. கார்ப்பரேட் அலுவலகம் மும்பையில் உள்ளது. எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் தனித்தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது.

எஸ்.எம்.இ கடன்

செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காக ரொக்க கடன்/மிகைப்பற்று மூலமாக எஸ்.எம்.இ கடன் வழங்குகிறது. ஏற்றுமதிக்கு முன்பும் பிறகும் கடன் வழங்குகிறது.

வர்த்தகத்திற்கு உதவும் வகையில் கடன் உறுதிக் கடிதம் வசதியை வழங்குகிறது. வணிக சொத்துகள் கொள்முதல் செய்யவும் வணிக விரிவாக்கத்திற்கும் டெர்ம் லோன் வழங்குகிறது.

பிணையம் இல்லாத கடன்

எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு பிணையம் இல்லாத ரொக்க கடன், 2 கோடி வரையிலான டெர்ம் லோன் ஆகியவற்றை CGTMSE திட்டத்தின்கீழ் வழங்குகிறது. இதர செயல்பாட்டு மூலதன கடன்கள், டெர்ம் லோன், ஜிஎஸ்டி வணிக கடன் போன்றவற்றையும் ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது.

5. பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா 1906-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1969-ம் ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமானதாக ஆனது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. CLCS-TU திட்டம், Star MSME E-Rickshaw, Star MSME GST Plus Scheme, Star Weaver MUDRA Scheme, Star SME Education Plus, Star Start Up Scheme என பல்வேறு திட்டங்களின்கீழ் சிறு வணிகங்களுக்கு நிதி வழங்கி வருகிறது.

ஸ்டாண்ட் அப் இந்தியா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, கிளஸ்டர் ஃபைனான்ஸ் போன்ற அரசாங்க திட்டங்களையும் வழங்குகிறது.

ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா