Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

உங்கள் வணிக யோசனையை சரிபார்க்க உதவும் 5 குறிப்புகள்!

தொழில்முனைவோர் தங்கள் தொழில் யோசனையைக் களமிறக்குவது முன்பு, அந்த யோசனைகள் சரியான வரவேற்பைப் பெறுமா என்பதையும் வளர்ச்சியடைவது சாத்தியமா என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்கவேண்டியது அவசியம்.

உங்கள் வணிக யோசனையை சரிபார்க்க உதவும் 5 குறிப்புகள்!

Monday May 22, 2023 , 2 min Read

தொழிலில் வெற்றிபெற ஏராளமான காரணிகள் உள்ளன. சிலருக்கு பல காலமாகவே ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்யவேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். சிலருக்கு திடீரென்று ஒரு பொறி தட்டும். இந்த வணிக யோசனையை முன்னெடுத்தால் சந்தையில் சிறப்பிக்கலாம் என்று தோன்றும்.

இதுபோன்ற யோசனைகள் எல்லாமே வெற்றியை எட்டிவிடுவதில்லை. சில குறிப்பிட்ட யோசனைகள் சாதாரணமாக இருப்பினும் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். சந்தையில் சிறப்பாக நிலைநிறுத்தப்படும்.

தொழில்முனைவோர் தங்கள் தொழில் யோசனையைக் களமிறக்குவது முன்பு, அந்த யோசனைகள் சரியான வரவேற்பைப் பெறுமா என்பதையும் வளர்ச்சியடைவது சாத்தியமா என்பதையும் தெளிவாகத் தீர்மானிக்கவேண்டியது அவசியம்.

இந்தத் தீர்மானத்திற்கு வழிகாட்டும் வகையில், தொழில்முனைவோரின் தொழில் யோசனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என சரிபார்க்க உதவும் 5 குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

business ideas

1.சந்தை ஆய்வு செய்யவேண்டும்

தொழில்முனைவோரின் தொழில் யோசனை சரியானதா என்பதை உறுதிப்படுத்த சந்தையை ஆய்வு செய்யவேண்டியது முக்கியம். வாடிக்கையாளர்கள், போட்டியாளர்கள், சந்தை செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களைத் திரட்டவேண்டும்.

எப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படலாம் என்பதையும் எப்படிப்பட்ட சந்தை தேவையை தொழில்முனைவோரின் முயற்சி பூர்த்தி செய்யும் என்பதையும் தெரிந்துகொள்ள இது உதவும்.

ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்யலாம். வாடிக்கையாளர்களிடையே உரையாடி புரிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட துறையின் போக்குகளை ஆய்வு செய்து புரிந்துகொள்ளலாம். போட்டியாளர்கள் துறைசார் சவால்களை எப்படித் திறம்பட கடந்து நிலைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து புரிந்துகொள்ளலாம். இதுபோன்ற சந்தை ஆய்வுகள் வணிக யோசனையை மெருகேற்றிக்கொள்ள உதவும்.

2.தொழில் யோசனையை MVP (Minimum Viable Product) மூலம் சோதனை செய்யவேண்டும்

MVP என்பது ஒரு தயாரிப்பின் ஆரம்பநிலை வெர்ஷன். அதாவது, சோதனை ஓட்டத்திற்கான தயாரிப்பு வெர்ஷன். தொழில் யோசனை திறம்பட இருப்பதை அளவிடவும் நுண்ணறிவு பெறவும் இது உதவும். MVP வெளியிடுவதன் மூலம் தயாரிப்பின் சந்தை தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். இதில் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில் தயாரிப்பை மாற்றியமைக்கலாம்.

MVP என்பது சந்தையில் வெளியிடுவதற்கான இறுதி தயாரிப்பு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சந்தை தேவைக்கேற்ப தயாரிப்பை மாற்றியமைக்க இந்த ஆரம்பகட்ட சோதனை முயற்சி உதவும்.

3.கூட்டுநிதி தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

Kickstarter, Indiegogo போன்ற கூட்டுநிதி தளங்கள் தொழில்முனைவோரின் யோசனைகளை, சாத்தியக்கூறுகள் நிறைந்த வாடிக்கையாளர்களிடம் நிதி திரட்டுவதன் மூலம் சரிபார்க்க வாய்ப்பளிக்கிறது. கூட்டுநிதி மூலதனத்திற்கு உதவுவதுடன் தொழில்முனைவோரின் தயாரிப்பு அல்லது சேவைக்கான தேவையைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

4.துறைசார் நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகளிடம் ஆலோசனை பெறலாம்

துறைசார் நிபுணர்களும் ஆலோசகர்களும் அனுபவமிக்கவர்கள். இவர்களது அனுபவம் தொழில்முனைவோரின் வணிக யோசனைகளை சரிபார்க்க உதவும். இவர்களது வழிகாட்டல் தொழில்முனைவோரின் கான்செப்டை மெருகேற்றவும் வெற்றிகரமாக சந்தையில் செயல்படவும் உதவும். நெட்வொர்க்கிங் நிகழ்வுகள், ஆன்லைன் ஃபோரம், உள்ளுர் வர்த்தக குழுக்கள் போன்றவை மூலம் துறைசார் நிபுணர்களிடம் தொடர்பில் இருக்கலாம்.

5.நிதி சார்ந்த திட்டமிடலை ஆய்வு செய்யவேண்டும்

ஸ்டார்ட் அப் செலவுகள், நிர்வாகச் செலவுகள், வருவாய் திட்டமிடல், லாபம் போன்ற நிதி சார்ந்த திட்டமிடலை ஆய்வு செய்வது முக்கியம். தொழில்முனைவோரின் யோசனையை வணிகமாக முன்னெடுத்து செல்வது உகந்ததா என்பதை தீர்மானிக்க இந்த ஆய்வு உதவும்.

ரிஸ்க் இல்லாமல் எந்தத் தொழிலும் இல்லை. ஆனால் மேற்கூறிய முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு தொழில் யோசனையை சரிபார்த்த பிறகு தொழிலைத் தொடங்கினால் தேவையில்லாத செலவுகளையும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம். தொழில்முனைவோர் தன்னிடமிருக்கும் வணிக யோசனையில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யலாமா என்பதை இந்தக் காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யலாம். இதனால் வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.