பெயர் மாற்றி வெற்றிக்கண்ட 6 முன்னணி வர்த்தக நிறுவனங்கள்...
மறுபிராண்டிங் மூலம் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொண்ட 6 முன்னணி நிறுவனங்களின் வெற்றிக்கதை, பிளாக்பெரி மற்றும் கூகுள் உள்ளிட்ட பெயர் மாற்றங்கள் எப்படி அந்த நிறுவனங்களின் வர்த்தக இலக்குடன் இணைந்திருந்தன என்பதை உணர்த்துகிறது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் மறு பிராண்டிங் செய்வது என்பது முக்கிய தருணமாக அமைகிறது. புதிய ஆரம்பம் அல்லது தனது இலக்குடன் இணைந்த மேம்பட்ட தொடர்பிற்கான வாய்ப்பாக இது அமைகிறது.
இன்று நாம் அறிந்த பல முன்னணி பிராண்ட்கள் தங்கள் பயணத்தை வேறு ஒரு பெயரில் துவங்கியவை. அந்த வகையில், தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொண்ட ஆறு முன்னணி நிறுவனங்களையும் அவற்றின் பெயர் மாற்றம் வழங்கும் வர்த்தக பாடங்களையும் பார்க்கலாம்.
வேறு பெயருடன் துவங்கிய 6 முன்னணி நிறுவனங்கள்
Google - கூகுள்
மாற்றத்திற்கான காரணம்: அதிர்ஷ்டவசமான பிழை
1996ல், லாரி பேஜ் மற்றும் செஜி பிரின் தங்கள் நிறுவனத்தை துவக்கிய போது, பின் இணைப்புகளை குறிக்கும் வஜ்கையில் பேக்ரப் (Backrub) என்றே பெயர் வைத்திருந்தனர். அவர்கள் வேறு பொருத்தமான பெயரை தேடிய போது, சீன் ஆண்டர்சன் எனும் ஸ்டான்போர்டு மாணவர், கூகோல் (googol) எனும் கணித சொல்லை மையமாக கொண்டு கூக்ளோபிலக்ஸ் எனும் வார்த்தையை பரிந்துரைத்தார்.
சீன் தவறாக உச்சரித்த இந்த வார்த்தை கூகுள் எனும் சொல்லை அளித்தது. 1997ல் கூகுள் எனும் பெயர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,. ஒரு எளிய ஆனால் ஈர்ப்புடைய பெயர் எப்படி உங்கள் பிராண்டின் அடையாளமாக மாறும் என்பதை இது உணர்த்துகிறது.
Pepsico - பெப்சிகோ
மாற்றத்திற்கான காரணம்: மகத்தான பிராண்டின் உருவாக்கம்
1898ல் மருந்தக வல்லுனர் கலேப் பிராதம், பிராத்ஸ் டிரிங் எனும் பெயரில் குளிர்பாணத்தை, மாற்றி அமைத்து பெப்சி கோலா என அறிமுகம் செய்தார். பிராண்ட் பிரபலமான பிறகு 1964ல் பெப்சி என சுருக்கப்பட்டது.
இந்த மறுபிராண்டிங், இந்த குளிர்பாணத்தை மேலும் நினைவில் நிறுத்தி அதன் ஜீரண ஆற்றலை அடையாளப்படுத்தியது. நன்கறியப்பட்ட தன்மை போட்டி சந்தையில் முக்கியமானது. லோகோ மற்றும் பெயர் மாற்றம் மூலம், பெப்சி உலகின் முன்னணி குளிர்பாண நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
Blackberry - பிளாக்பெரி
மாற்றத்திற்கான காரணம்: பிராண்டுடன் நெருக்கம்
1984ல் ரிசர்ச் இன் மோஷன் என உருவாக்கப்பட்ட கனடா நிறுவனம், தனது முக்கிய பொருளின் அடையாளமாக பிளாக்பெரி என 2013ல் பெயர் மாற்றிக்கொண்டது. பிளாக்பெரி பழத்தை நினைவுபடுத்தும் வகையிலான கீபேடை குறிக்கும் வகையில் இந்த பெயர் அமைந்தது. இந்த எண்ணம் துணிச்சலான முடிவாக அமைந்து ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனத்தை முன்னணி பெற வைத்தது.
பிளாக்பெரி இப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபடவில்லை என்றாலும், உங்கள் பிராண்டின் அடையாளம் நிறுவன இலக்குடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
Volkswagen - வோக்ஸ்வோகன்
மாற்றத்திற்கான காரணம்: பெயரை எளிமையாக்குவது.
நிறுவன பெயரி துவக்கத்தில் மிகவும் நீளமாக (Gesellschaft zur Vorbereitung des Deutschen Volkswagens mbH",) அமைந்திருந்ததால் அதை எளிமையாக்கும் வகையில் 1937ல் வோக்ஸ்வோகன் என பெயரிடப்பட்டது. பொதுமக்கள் வாங்ககூடிய விலையில் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கம் கொண்டிருந்தது. இந்த நிறுவனம் ஹிட்லர் காலத்தில் நாஜி கட்சியால் துவக்கப்பட்டது என்பது பலரும் அறியாதது.
மக்கள் கார் என்பதை குறிக்க இதன் பெயர் மாற்றப்பட்டது. இந்த மாற்றம் பிராண்ட் அடையாளத்தை உணர்த்தியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அறியப்பட செய்தது.
Sony - சோனி
மாற்றத்திற்கான காரணம்: உலகம் முழுவதும் அறியப்பட வேண்டும்
1946ல், Tokyo Tsushin Kogyo என துவங்கப்பட்ட நிறுவனம், சர்வதேச அளவில் விற்பனையை துவக்கிய போது, சோனி என பெயர் மாற்றிக்கொண்டது. ஒலியை குறிக்கும் சோனஸ் எனும் லத்தீன் சொல் மற்றும் இளைஞனை குறிக்கும் சொல் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த பெயர் நிறுவன இளமைத்துடிப்பை உணர்த்தியது. உலக அளவிலான அணுகுமுறை எப்படி பிராண்டின் வீச்சை அதிகமாக்கும் என்பதற்கான உதாரணம் இது.
IBM - ஐபிஎம்
மாற்றத்திற்கான காரணம்: நிறுவன நோக்கத்துடன் இணக்கம்
1911ல், 3 நிறுவனங்கள் இணைந்து துவங்கப்பட்ட ஐபிஎம் நிறுவனம் முதலில் கம்ப்யூட்டிங் டேபிளேட்டிங் ரெகார்டிங் கம்பெனி எனும் பெயரில் இயங்கியது. 1924ல் அதன் சி.இ.ஓ தாமஸ் வாட்சன், இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மிஷின் என ( ஐபிஎம்) பெயரை மாற்றினார்.
முந்தைய பெயர் நிறுவன இலக்கை குறிக்கவில்லை என உணர்ந்து, வாட்சன் பெயரை மாற்ற தீர்மானித்தார். நிறுவன நோக்கத்தை உணர்த்தும் வகையில் செய்யப்பட்ட பெயர் மாற்றம் அதன் வர்த்தக இலக்குகள், சேவைகளை நன்கறியச் செய்தது. முக்கியமாக நுகர்வோர்களை கவர்ந்திழுத்தது.
பெயர் மாற்றம் பின்னே உள்ள இந்த கதைகள், இன்றைய வர்த்தகங்களுக்கான முக்கிய பாடங்களை கொண்டுள்ளன. மறுபிராண்டிங் செய்வது, முக்கிய முடிவாக அமைந்து, நிறுவன வளர்ச்சியை உணர்த்தும். இவற்றை அடிப்படையாக கொண்டு, ஸ்டார்ட் அப்கள் தங்கள் பிராண்ட் பயணத்தை மாற்றி அமைக்கலாம்.
மூலம்: ஆஸ்மா கான்
'வெற்றியின் ஆரம்ப அறிகுறிகள்' - நீங்கள் முக்கியம் என நினைக்காத 9 அம்சங்கள் இதோ!
Edited by Induja Raghunathan