Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஸ்டார் ரேட்டிங் முதல் EMI வரை: புதிய ஏசி வாங்குவோர் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்

எந்த ஏசி வாங்குவது? தங்கள் வீட்டுக்கு உகந்தது எது? எவற்றை எல்லாம் கவனிப்பது? - இந்தக் குழப்பங்களைக் களையும் வகையில், புதிய ஏசி வாங்க விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்.

ஸ்டார் ரேட்டிங் முதல் EMI வரை: புதிய ஏசி வாங்குவோர் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்

Saturday March 04, 2023 , 3 min Read

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதீத வெப்பம் பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்பத்தின் சீற்றம் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஏசியை பயன்படுத்த பலரும் திட்டமிட்டிருக்கலாம். சிலர் புதிய ஏசியை வாங்கும் திட்டத்திலும் இருக்கலாம். 

சந்தையில் பல்வேறு ஏசி இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனால், ஏசி வாங்க விரும்புவோருக்கு எந்த ஏசி வாங்குவது? எது தங்களுக்கு சரிவரும் என்ற குழப்பங்கள் வரும். எனவே, புதிய ஏசி வாங்க விரும்புவோர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். 

பட்ஜெட்: ஏசி வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் முதலில் தங்களது பட்ஜெட் என்ன என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போது இந்திய சந்தையில் ஏசி சாதனம் சுமார் 30,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. பட்ஜெட்டை திட்டமிடுவதன் மூலமாக சந்தையில் இருக்கின்ற ஆப்ஷனில் பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஏசியை தேர்வு செய்ய முடியும். 

அறையின் அளவு: சந்தையில் 1 டன், 1.5 டன், 2 டன் என ஏசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 100 அல்லது 120 சதுர அடி அளவு கொண்ட அறைக்கு 1 டன் ஏசியை பயன்படுத்தலாம். அதைக் காட்டிலும் அறையின் அளவு கூடுதலாக இருந்தால் 1.5 டன் அல்லது 2 டன் போன்ற ஏசியை தேர்வு செய்யலாம். இதன்மூலம் அறையில் குளுமையை பெறலாம்.

ac

வீட்டின் தளம்: அறையை போலவே வீட்டின் தளத்தின் அடிப்படையிலும் ஏசி கூலிங் திறன் மாறும் என சொல்லப்படுகிறது. உதாரணமாக, வீட்டின் அதி மேல் தளம் (மொட்டை மாடிக்கு கீழே உள்ள தளம்) என்றால், அங்கு அதிக சக்தி மற்றும் திறன் கொண்ட ஏசியை பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் அந்த அறையில் தங்குதடையின்றி குளுமையை பெற முடியும். 

ஸ்ப்ளிட் ஏசி அல்லது விண்டோ ஏசி: பொதுவாக ஸ்ப்ளிட் ஏசி மற்றும் விண்டோ ஏசி என இரண்டிலும் கூலிங் விஷயத்தில் வித்தியாசம் எதுவும் இருக்காது. ஆனால், ஸ்ப்ளிட் ஏசி உடன் ஒப்பிடும்போது விண்டோ ஏசியின் விலை சற்றே மலிவாக இருக்கும். இருந்தாலும் இதனை பொருத்த சரியான அளவிலான ஜன்னல் தேவைப்படும். பவர் சேவிங், நாய்ஸ் மற்றும் கூலிங் டைம் போன்றவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடாக உள்ளது. அதேநேரத்தில் ஸ்பிளிட் ஏசி என்றால் பொருத்துவது சுலபம். அறையில் எங்கு வேண்டுமானாலும் இதைப் பொருத்தலாம். இதில் நாய்ஸ் இருக்காது. விரைந்து கூலிங் ஆகும். பயனர்கள் தங்கள் பட்ஜெட்டை பொறுத்து எந்த ஏசியை வாங்குவது என முடிவு செய்யலாம். 

காயில் குறித்து விசாரியுங்கள்: ஏசியில் காப்பர் காயில் அல்லது அலுமினியம் காயில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தவறாமல் கேட்டு தெரிந்துக் வேண்டும். காப்பர் காயில் ஏசியில் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அதைப் பழுது பார்ப்பது சுலபம் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல இதை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சொல்லப்படுகிறது. 

ஸ்டார் ரேட்டிங்கில் கவனம்: ஏசியை வாங்கும்போது அதன் ஸ்டார் ரேட்டிங் என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், அதிக ரேட்டிங் கொண்ட ஏசியை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் மின்திறன் பயன்பாட்டை குறைக்க முடியும். அதன் வழியே மின்சார பயன்பாட்டு கட்டணமும் குறையும். உதாரணமாக, 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை ஒரு வீட்டில் பயன்படுத்தி வருபவர்களுக்கு மாதாந்திர மின் கட்டணம் ரூ.580 என வைத்துக் கொண்டால், அதே வீட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் ஏசியை பயன்படுத்தினால் அங்கு மாதாந்திர மின் கட்டணம் ரூ.500 தான் வரும். ஸ்டார் ரேட்டிங் அதிகம் இருந்தால் ஏசியின் விலையும் கூடுதலாக இருக்கும். இருந்தாலும் ஏசி வாங்குவது நீண்ட நாளுக்கான பயன்பாடாக இருப்பதால் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

ac

ரெடி கேஷ் அல்லது தவணை: ஏசிக்கான கட்டணத்தை எப்படி செலுத்துகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஏசியில் பெரிய தொகையை செலவிட விரும்பாதவர்கள் சுலப மாத தவணை முறையை தேர்வு செய்யலாம். டாக்குமென்ட் கட்டணம் இல்லாமல் மாதத் தவணையை பல்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். அதிலும் EMI ஆப்ஷன்கள் உள்ளன. 

விலையை ஆன்லைனில் சரிபார்க்கவும்: ஏசி வாங்க கடைக்கு சென்றால் அங்கு இருக்கும் விற்பனை பிரதிநிதி சில மாடல் ஏசியை காட்டி அதன் விலையை சொல்வார். பயனர்களும் தங்களுக்கு விருப்பம் உள்ள நிறுவனத்தின் ஏசியை தேர்வு செய்யலாம். அப்போது கடையில் சொல்லப்படும் விலையையும், ஆன்லைனில் அதே மாடல் ஏசியின் விலையையும் சரி பார்க்கலாம். இந்த ஒப்பீட்டில் கடையில் உள்ள ஏசியின் விலை அதிகமாக இருந்தால் விற்பனை பிரதிநிதியிடம் அதை சொல்லலாம். அதன் மூலம் விலையில் அவர் ஆஃபர் கொடுக்க முன்வரலாம். 

அதேபோல ஏசி வாங்கும்போது சர்வீஸ் சப்போர்டையும் கவனிக்க வேண்டும். மேலும், ஏசியின் ட்யூரபிளிட்டி, பவர் சேவிங் திறன், கூலிங் போன்ற அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டும்.


Edited by Induja Raghunathan