18-வது மக்களவையில் 80% எம்.பி.க்கள் பட்டதாரிகள்; கல்வித் தகுதி பெறாத எம்.பி. யாரும் இல்லை!
நடந்து முடிந்த 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80% பேர் பட்டதாரிகள். கல்வித்தகுதி இல்லாத எம்.பி. இல்லவே இல்லை.
நடந்து முடிந்த 18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 80% பேர் பட்டதாரிகள். கல்வித்தகுதி இல்லாத எம்.பி. என்று யாரும் இல்லவே இல்லை.
ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பான ஏடிஆர் அறிக்கையின் படி, 2024 மக்களவைத் தேர்தலில் தாங்கள் கல்வித் தகுதி பெறாதவர்கள் என்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த 121 வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களில், பெரும்பான்மையானவர்கள் உயர் கல்வி கற்றவர்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 105 பேர் அல்லது 19% உறுப்பினர்கள் தங்கள் கல்வித்தகுதியை 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளதை என்று ஏடிஆர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்தப் பிரிவில்தான் உள்ளனர்.

240 எம்.பி.க்களை வென்ற பாரதிய ஜனதா கட்சியில் 64 எம்.பி.க்கள் பட்டப்படிப்பையும் 49 பேர் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தவர்கள். 99 காங்கிரஸ் எம்.பி.க்களில் 24 இளங்கலை பட்டதாரிகள் 27 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.
5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்ற 105 எம்.பி.க்களில் 40 எம்.பி.க்கள் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 19. இன்னொரு சுவாரஸ்யமான தகவல், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவருமே குறைந்தது 10வது வரை படித்துள்ளனர், அதற்குக்குறைவான கல்வித் தகுதி கொண்டவர்கள் இல்லை. ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஒருவர் மட்டுமே படித்த எம்.பி.க்களில் ஆகக்குறைந்த கல்வித்தகுதியுடன் உள்ளார்.
உயர் கல்விக்காக, 147 எம்.பி.க்கள் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர் இதில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கூடுதலாக, 98 எம்.பி.க்கள் தொழில்முறை பட்டம் மற்றும் டிப்ளோமா தகுதிகளைக் கொண்டுள்ளனர்,
18வது மக்களவையின் 78 சதவீத எம்.பி.க்கள் குறைந்த பட்சம் இளங்கலை கல்வியையாவது முடித்துள்ளனர். 18வது மக்களவையில் 5 சதவீத எம்.பி.க்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர், அதில் மூன்று பெண் எம்.பி.க்கள் உள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 93% மில்லியனர்கள் - டாப் 3-யில் இரண்டு பாஜக, ஒரு தெலுங்கு தேசம் எம்.பி.