பாலிவுட்டில் மட்டும் அல்ல; முதலீடுகளிலும் முந்தும் நடிகர் ரன்பீர் கபூர்!
ரன்பீர் கபூர் ஒரு வெற்றிகரமான திரை நட்சத்திரம் மட்டுமல்ல, திறமையான முதலீட்டாளரும் கூட. அதற்கு சமீபத்திய சான்றுகள் பல.
நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் கூட வசூல் வேட்டை நடத்தி வருகிறது ரன்பீர் கபூரின் ‘Animal’ திரைப்படம். பாலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வரும் நடிகர் ரன்பீர் கபூர், திரைப்படத் துறையில் மட்டுமின்றி, முதலீடுகள் மற்றும் விளம்பர உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ரன்பீர் கபூர் தனது பாலிவுட் வெற்றியை ரியல் எஸ்டேட், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பிரத்யேக பிராண்ட் டீல்கள் உள்ளிட்ட புத்திசாலித்தனமான வணிக முயற்சிகளை எவ்வாறு இணைத்து ஒரு பல்துறை வணிக மன்னனாக தன்னை உருவாக்கிக் கொண்டார் என்பதைப் பார்ப்போம்.
நிகர மதிப்பு, வருவாய் ஆதாரங்கள்:
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, ரன்பீர் கபூரின் நிகர சொத்து மதிப்பு 345 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது முதன்மை வருவாய் என்பது திரைத்துறை நடிப்பு உருவாக்கியுள்ள வருவாய் ஆதாரமே. ரன்பீர் கபூர் ஒரு திரைப்படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது, மேலும், லாபத்தில் ஒரு பங்கும் இவருக்கு வந்து சேர்கிறது.
இத்துடன், பிராண்ட் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.30 கோடித் தாண்டிய கூடுதல் வருமானமும் ரன்பீர் கபூரின் வருவாய் ஆதாரங்களாகும்.
முதலீடுகளும் வர்த்தக முயற்சிகளும்!
ரன்பீர் கபூர் ஒரு வெற்றிகரமான திரை நட்சத்திரம் மட்டுமல்ல, திறமையான முதலீட்டாளரும் கூட. அவர் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையான சாவ்னில் முதலீடு செய்துள்ளார். இதோடு மும்பை சிட்டி எஃப்சி கால்பந்து அணியின் இணை உரிமையாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது முதலீட்டில் முக்கியமாக புனேவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ட்ரோன் ஆச்சார்யா ஏரியல்’ அடங்கும். ரூ.20 லட்ச முதலீட்டில் 37,200 பங்குகளை வாங்கினார். இதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர் முதலீட்டில் தன் சாதுரியத்தை வெளிப்படுத்தினார்.
ரன்பீரின் முதலீட்டு சாதுரியத்துக்கான இன்னொரு உதாரணம்தான் மும்பையில் அவருக்கு சொந்தமான சொத்துகள். குறிப்பாக, பாலி ஹில்லில் உள்ள அசையா சொத்தின் மதிப்பு ரூ.35 கோடி. மேலும், புனேவில் உள்ள டிரம்ப் டவர்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஆண்டுக்கு 48 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.
பிராண்ட் விளம்பரங்கள்:
ரன்பீர் கபூர் வசீகரமான ஒரு ஹீரோவாக இருப்பதாலும் பிராண்ட் விளம்பர ஒப்பந்தத்திற்கு ஏற்ற ஒரு முகவெட்டு மற்றும் ஆளுமை இருப்பதாலும், வர்த்தக விளம்பரங்கள் அவருக்குக் குவிகின்றன.
பிரபலமான பிராண்டுகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த ரன்பீர் கபூரை ஒப்பந்தம் செய்கின்றனர். இவர் விளம்பரம் செய்யும் பிராண்டுகள் மிகப் பிரபலமானவை.
ஓரியோ, லெனோவா, கோககோலா, வர்ஜின் மொபைல்ஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், ரெனால்ட், பானாசோனிக், டாடா டோகோமோ, பிளிப்கார்ட், ஜான் பிளேயர்ஸ், டாக் ஹியூயர், யாத்ரா டாட் காம், ஆஸ்க் மீ டாட் காம் ஆகிய பிரபல நிறுவனங்களின் விளம்பர தூதர் ரன்பீர் கபூர்தான். இதன்மூலம் பல நுகர்வுப் பொருட்களுக்கான விளம்பரதாரராகவும் ரன்பீர் கபூர் ஒப்பந்திக்கப்பட்டார்.
பணம் சம்பாதிப்பது பெரிதல்ல... அதைப் பாதுகாக்க, இரட்டிப்பாக்க சாமர்த்தியமான வணிக மூளை வேண்டும்.
ரன்பீர் கபூரின் நிதி ரீதியான வெற்றி என்பது அவரது திரை வாழ்க்கையையும் தாண்டி நீண்டுள்ளது. வணிகங்களில் அவரது புத்திசாலித்தனமான முதலீடுகள், சாதுர்ய ரியல் எஸ்டேட் கையகப்படுத்துதல்கள் மற்றும் ஏராளமான பிராண்ட் விளம்பர ஒப்புதல்கள் அவரது கணிசமான நிகர மதிப்பு மற்றும் சந்தை செல்வாக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
ரன்பீர் கபூர் தன் வாழ்க்கை மூலம் பலருக்கும் கிரியா ஊக்கியாக இருந்து வருகிறார். புத்திசாலித்தனம், கடின உழைப்பு, முதலீடுகளில் தகவல் அறிந்த முதலீடு என்று ஒரு நல்ல வர்த்தகருக்கான குணங்களும் ரன்பீர் கபூரிடம் உள்ளது என்பதையே அவரது வெற்றி காட்டுகிறது.
நடிகர் அரவிந்த் சுவாமியை ஒரு வெற்றிகர தொழிலதிபராக உங்களுக்குத் தெரியுமா?
Edited by Induja Raghunathan