Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

உலகில் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது யூடியூப் நட்சத்திரம்!

உலகில் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது யூடியூப் நட்சத்திரம்!

Sunday December 09, 2018 , 4 min Read

"

பெயர் – ரயான், வயது-ஏழு…

இந்த தகவலுக்கு அடுத்ததாக இடம்பெறக்கூடிய விஷயம் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா? படிக்கும் பள்ளி என்றோ, அல்லது பிடித்த விளையாட்டு என்றோ நீங்கள் யோசித்திருக்கலாம். ஆனால், ஊதியம் என்பதை நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டும் அல்ல, ஊதியத்திற்கான தொகை 22 மில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்பதையும் நீங்கள் யோசித்திருக்க வாய்ப்பில்லை.

\"image\"

image


ஆனால், விஷயம் அது தான், 

ஏழு வயதான ரயான், ஆண்டுக்கு 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். (இந்திய ரூபாய் மதிப்பு படி 154 கோடி) அதனால் தான் பிரபல வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் அவரை அதிகம் சம்பாதிக்கும் யூடியூப் நட்சத்திரங்கள் பட்டியலில் முதலிடத்தில் வைத்து மகுடம் சூட்டியுள்ளது.

நம்ப முடியவில்லையா? ஆனால் இதில் நம்ப முடியாமல் திகைத்துப்போக எதுவுமில்லை. வியந்து போக நிறையவே இருக்கிறது என்பது தான் உண்மை.

ஆம், அமெரிக்காவைச்சேர்ந்த ரயான் ஒரு யூடியூப் நட்சத்திரம். ரயான் ’டாய்ஸ் ரிவ்யூ’ எனும் பெயரில் அவர் யூடியூப் சானலை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் உள்ள சுட்டீஸ்கள் மத்தியில் செம ஹிட்டாகி இருக்கும் இந்த சேனல் 17 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றிருக்கிறது. இதுவரை 350 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கிறது.

இத்தனை சந்தாதாரர்களும், கோடிக்கணக்கான ஹிட்களும் இருக்கும் போது வருவாய்க்கு கேட்கவா வேண்டும்? ஃபோர்பஸ் இதழ் கணக்கு படி, 2018- ஜூன் வரையான 12 மாதங்களில், ரயான் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். வீடியோக்கள் மூலமான விளம்பர வருவாய் மற்றும் ரயான் பிராண்ட் பெயரிலான பிரத்யேக விளையாட்டுப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்திருக்கும் வருவாய் இது.

யூடியூப் மூலம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பாதிக்கும் நட்சத்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்படி யூடியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் தான் நம்ம குழந்தை யூடியூப் நட்சத்திரம் முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2017 ம் ஆண்டில் ரயான் இந்த பட்டியலில் 6 வது இடத்தில் இருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு, வீடியோ கேம் விளையாடியே கோடிகளை சம்பாதிக்கும் பியூ டு பை , சர்ச்சை நட்சத்திரம் லோகன் பால் அவரது சகோதரர் ஜேக் பால் போன்றவர்களை எல்லாம் ரயான் பின்னுக்குத்தள்ளியிருக்கிறார்.

யூடியூப் வீடியோக்களை வியந்து பார்க்கும் குழந்தைகளை தான் நமக்குத்தெரியும் என்று பார்த்தால், யூடியூப் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் ஒரு குழந்தை நட்சத்திரமா? என வியப்பு ஏற்படலாம். இப்படி பல யூடியூப் குழந்தை நட்சத்திரங்கள் இருக்கவே செய்கின்றனர். ரயான் அவர்களில் டாப் ஸ்டாராக இருக்கிறார்.

\"image\"

image


எல்லாம் சரி, ரயான் யூடியூப்பில் என்ன செய்கிறார்? எப்படி அவருக்கு இத்தனை பெரிய புகழ் சாத்தியமானது? என்று கேட்கலாம். 

முதல் கேள்விக்கான பதில் எளிதானது. ரயான், தனது பெயரிலேயே குழந்தைகள் பொம்மைகளுக்கான விமர்சன சேனலை நடத்தி வருகிறார். ரயான் டாய்ஸ் ரிவ்யூ எனும் அந்த சேனல் தான் அவரை இணையம் அறிந்தவராக்கி இருக்கிறது. ரயானுக்கு எப்படி இத்தனை புகழ் சாத்தியமானது எனும் இரண்டாவது கேள்விக்கான பதில் அத்தனை எளிதானது அல்ல. ஏனெனில், ரயான் செய்வது போலவே பொம்மைகளை விமர்சிக்கும் யூடியூப் சேனல்கள் நிறையவே இருக்கின்றன. உண்மையில் இத்தகைய சேனல்களை பார்த்து ரசித்துக்கொண்டிருந்ததன் விளைவாகவே ரயான் தானும் யூடியூப்பில் அடியெடுத்து வைத்தார்.

ஆனால் மற்ற விளையாட்டு பொம்மை விமர்சன தளங்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி அவர் முன்னிலைக்கு வந்துவிட்டார். இதற்கான சூட்சமத்தை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அவரது விமர்சன வீடியோக்களை கொஞ்சம் கவனமாக பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இப்போதைக்கு நாம், ரயான் யூடியூப் சேனல் ஆரம்பித்த கதையை மட்டும் பார்க்கலாம்.

ரயானுக்கு மூன்று வயது இருந்த போது, யூடியூப் வீடியோக்களை விரும்பி பார்க்கத் துவங்கியிருக்கிறார். எல்லாமே சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் விமர்சன வீடியோக்கள் தான். இவற்றில் இவாண்டியூப்.எச்டி மற்றும் ஹுல்யான் மாயா அவருக்கு பிடித்தமான சேனல்களாக இருந்தன. ஒரு நாள் திடிரென, ரயான் அம்மாவிடம், இந்த சிறுவர்கள் எல்லாம் யூடியூப்பில் இருக்கும் போது நான் மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என கேட்டிருக்கிறார். உடனே அவரது அம்மா, தன் செல்ல மகனுக்கான யூடியூப் சேனல் ஒன்றை துவங்க தீர்மானித்தார்.

பொம்மை கடைக்குச்சென்று, லெகோ பொம்மை ஒன்றை வாங்கி வந்து ரயானை விளையாட வைத்து முதல் வீடியோவை உருவாக்கி பதிவேற்றினார். அதன் பிறகு வீடியோக்கள் வளர்ந்தன. ரயான் உற்சாகமாக பொம்மைகளுடன் விளையாடியபடி அவற்றை விமர்சிக்கத் துவங்கினார். முதல் நான்கு மாதங்கள் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. ஆனால் அதன் பிறகு ரயான் விமர்சன வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் குவியத்துவங்கினர். 

முதலில் பல்லாயிரக்கணக்காக இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து, சந்தாதாரர்களும் குவிந்தனர். இரண்டு ஆண்டுகளில் 5.5 மில்லியன் சந்தாதாரர்கள் சேர்ந்தனர். இப்போது 17 மில்லியனுக்கு மேல் இருக்கின்றனர்.

இப்படித் தான் ரயான் பிரபலமானார். பத்திரிகைகள் அவரை பேட்டிக்கண்டு எழுதி மேலும் பிரபலமாக்கின. இதனிடையே பொம்மை நிறுவனங்கள் தேடி வந்து வர்த்தக வாய்ப்புகளை வழங்கி அதற்கான வருவாயையும் அளித்தன. இவைத்தவிர யூடியூப் விளம்பர வருவாய் என குவிகிறது. இந்த ஆதரவால் ரயான் அம்மா தனது வேலையை விட்டுவிட்டு மகனின் வீடியோக்களை உருவாக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் ஒன்று சிறுவன் ரயான் தனது வீடியோக்களை ரசித்து செய்து வருகிறார்.

 ஒவ்வொரு முறையும் வீடியோ எடுக்கப்போகிறோம் என்றதும் அவன் உற்சாகமாகிவிடுகிறான், அவன் விரும்பும் வரை, இது அவனது மற்ற தினசரி வேலைகளை பாதிக்காத வரை, இதைத் தொடர்வோம் என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ரயானின் அம்மா டியூப்பில்டர் பேட்டியில் கூறியிருக்கிறார். 

தனது வீடியோ நகைச்சுவையானதாகவும், உற்சாகம் அளிக்கக் கூடியதாகவும் இருப்பதால் சகக் குழந்தைகளுக்கு பிடித்திருப்பதாக ரயான் அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.


ரயான் கதை மலைக்க வைக்கிறதா? 

யூடியூப்பிலும், இன்ஸ்டாகிராமிலும், இன்னும் பிற சமூக ஊடகங்களிலும் ரயான் போன்ற சிறார்களும், இளைஞர்களும், பெரியவர்களும் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி புகழும், பணமும் சம்பாதித்து வருகின்றனர். நம்மூரில் கூட இத்தகைய கில்லாடிகள் பலர் இருக்கின்றனர், இவர்கள் ’சமூக ஊடக செல்வாக்காளர்கள்’ என தனி மரியாதையோடு குறிப்பிடப்படுகின்றனர். நீங்களும் கூட இத்தகைய செல்வாக்காளராகலாம். வரும் புத்தாண்டில் முயற்சித்துப்பாருங்கள்!

"