Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சிறுதானிய சிறுதொழிலில் சிறப்பான வருமானம் ஈட்டும் கோடீஸ்வரி!

ஹோம் மேக்கராய் இருந்த கோடீஸ்வரியை ஹோம்ப்ரூனராக மாற்றிய சிறுதானிய பிசினஸ்!

சிறுதானிய சிறுதொழிலில் சிறப்பான வருமானம் ஈட்டும் கோடீஸ்வரி!

Monday October 15, 2018 , 3 min Read

‘ஆர்கானிக் உணவுகள்’- சமீபகாலமாய் மக்களிடம் மவுசு நிறைந்தவையாக மாறிவருகிறது. இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சந்தையில் உள்ள வாய்ப்புகள் அறிந்து பல இடங்களிலும் இயற்கை மற்றும் சிறுதானிய உணவகங்கள் வேகமாய் விரிவடைந்து வருகின்றன. பலரும் சுயவிருப்பத்தினாலே இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். 

அப்படி, வீட்டு பயன்பாடுக்காக தயாரித்த சத்துமாவு மிக்சை அக்கம் பக்கத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரித்து அளித்த இவர், விருப்ப மனுக்கள் அதிகரித்தால் அதையே தொழிலாகவும் மாற்றியுள்ளார் கோடீஸ்வரி.

image


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி அவருடைய கணவரது பக்கபலத்துடன் சிறு தானிய சிறுதொழிலை தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் 20கிலோ சத்துமாவு தயாரித்து விற்பனை செய்தவர், இன்று எட்டு மாவு வெரைட்டிகளுடன் மாதம் 150கிலோ வரை விற்பனை செய்து வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் கோடீஸ்வரிக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

கைக்கொடுத்த பாட்டியின் கைப்பக்குவம்!

“எங்க குடும்பம் ரொம்ப பெரியது. பாட்டி, தாத்தா, அத்தை, மாமானு எல்லோரும் இன்றும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். அந்த வீட்டில் பிறந்த எங்களது அன்றாட உணவுகளில் ஒன்று தான் சத்துமாவு கஞ்சி. வீட்டிலே அரைச்சு காய வைத்து செய்த சத்தான ஆகாரம் இப்போது டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளது. நான் சத்துமாவு அரைச்சு வைத்து இட்லி, தோசை போன்றே அடிக்கடி பயன்படுத்தும் பதார்த்தமாக செய்வேன். 

ஒரு முறை மேல் மருவத்துவர் கோயிலுக்கு சொந்தப் பந்தம் எல்லாம் பஸ் பிடிச்சு போகையில், கட்டு சாதத்துக்கு பதிலா சத்துமாவு கஞ்சி காய்ச்சி கொண்டு போயிருந்தேன். சாப்பிட்டவங்க எல்லோருக்கும் டேஸ்ட் பிடித்துபோக, எல்லோருக்கும் மாவு அரைச்சு கொடுத்தேன். அதேபோல் அக்கம் பக்கத்தினரும் சத்துமாவு செய்து தரச் சொல்லி விருப்பப்பட்டனர். 

அந்த புள்ளியில் இருந்தே கோடீஸ்வரின் பயணம் தொடங்கியுள்ளது. விற்பனைக்கு ஒரு பொருளை அறிமுகப்படுத்த உள்ளதால், வேளாண் பல்கலைகழகங்களுக்கு சென்று கூடுதல் தகவல்கள் திரட்டியுள்ளார். 

அவருடைய தங்கை நியூட்ரிஷியன் படிப்பு படித்து இருந்ததில், அவரிடம் தானியம் சரிவிகதிங்களை சரிப்பார்த்துள்ளார். பின், சிறு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட அனைத்து இயற்கை மூலப்பொருட்களுடன் சத்தான முளைக்கட்டிய சத்துமாவை “தான்யா புட்ஸ்” என்ற பெயரில் விற்பனையை தொடங்கினார். இதில் மற்றொரு சிறப்பு என்னவெனில், மிஷினரி பயன்பாடின்றி முழுக்க கைகளால் தயார் செய்து, அரைத்தலுக்கு மட்டுமே மில்களை நாடுகின்றனர்.

“தொடக்கத்தில் 20 கிலோ மட்டும் போட்டு, அரைத்தோம். தேவையான தானியங்கள், பருப்பு வகைகளை கொள்முதல் செய்து, சுத்தமான தண்ணீர் ஊறவைத்து அலசி எடுத்து. அதை வெள்ளைத்துணியில் போட்டு கட்டி முளைக்கட்டிய பின் மீண்டும் தண்ணீரில் அலசி, வெயிலில் நன்கு காய வைத்து பின்னே, தானியங்கள் அரைக்க தயாராகும்,” என்கிறார்.

டிரையரோ, தானியங்களை கழுவவோ எந்த மிஷின்களும் பயன்படுத்துவதில்லை. டிரையர் மிஷினில் தானியங்கள் சோறு போல் வெந்துபின் உலறுகின்றன. அதில் சத்துகள் எல்லாம் வீணாகின்றன. நெல் கொட்டி உலற வைப்பது போன்று மாடியிலே உலற வைத்துவிடுவோம். மழைக்காலங்களில் சிரமம். வானம் பார்த்தே உட்காந்திருக்கனும். மழைக்கு முன் பயிர்களை அள்ளணும்,” என்றவர், அவரது முளைக்கட்டிய சத்துமவை கொச்சினில் உள்ள உணவு பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார். ஆய்வில், 63 வகையான நஞ்சுப்பொருள்கள் இல்லாத ‘சிறந்த பக்கவிளைவுகள் அற்ற உணவு’ என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சந்தைப்படுத்துதலும்... அதிலுள்ள சவால்களும்... 

குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரீட்சயமான பிரபலங்களை கொண்டு விளம்பரம்படுத்தப்படும் சத்துமாவுகள் சந்தையில் கிடைக்கையில், உள்ளூர் பிராண்டை விற்பனை செய்வது நிச்சயம் கடினமே. கோடீஸ்வரியும் அதே சவால்களையே சந்தித்துள்ளார்.

“உற்பத்தி வரை என் டிபார்மென்ட். விற்பனை என் கணவருடையது. அக்கம் பக்கத்து கடைகள் தவிர்த்து மற்ற கடைகளில் கொடுப்பதை தவிர்த்து விட்டோம். ஏன்னா, மக்களுக்கு தெரியாத புது பிராண்ட் சொல்லி கொடுத்தால் தான் தெரியும். கடைகளில் கிடப்பில் போட்டு வைத்துவிடுவர். அதனால், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் மெடிக்கல் ஷாப், மற்றும் இயற்கை அங்காடிகளிலும் கொடுத்து வருகிறோம். மக்களை வாங்க வைப்பது தான் கடினமாக இருக்கிறது. ஒருமுறை வாங்கிட்டால், எங்களது பிராண்ட் தான் வேணும்னு கேட்டு வாங்கி போகிறவங்களும் இருக்காங்க,” எனும் 
image


தான்யா புட்ஸ் நிறுவனம் மாதம் 100 முதல் 150 கிலோ முளைக்கட்டிய சத்துமாவை விற்பனை செய்து வருகின்றது. தவிர ராகி, சோளம், ரவா மற்றும் கம்பு தோசை மாவுக்களையும், வழக்கமான மாவு என 8 வகைகளை விற்பனை செய்து வரும் அவர், ஒன்பதாவதாய் பிரண்டை பிளஸ் தக்காளி காம்போவில் தொக்கை விரைவில் விற்பனை செய்ய உள்ளார்.

“இதுவரை திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு என மூன்று மாவட்டங்களில் நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கிறோம். டீலர்ஷிப் கொடுத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் சப்ளை செய்யலாம். ஆனால், கால் கிலோ 89 ரூபாயுக்கு கொடுக்க முடியாது. ஆனால், அதற்காக விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களை சிரமத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. எங்களால் முடிந்த மாவட்டங்களை ரீச் செய்து வருகிறோம். அமேசானிலும் எங்களது ஹெல்த் மிக்ஸ் கிடைக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கின்றன,” என்கிறார். 

கோடீஸ்வரியின் கைப்பக்குவ ஹெல்த் மிக்ஸ்கள் உண்ட பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரத்தல் அதிகரிக்கிறது, எந்த உணவும் சாப்பிட முடியாத வயதானோர்களுக்கு சிறந்த ஆகாரமாக இருக்கிறது, போன்ற வாடிக்கையாளர்களின் பாராட்டுகளே தொடர்ந்து பயணிப்பதற்கான ஊக்கத்தையும் மனமகிழ்வையும் அளிக்கிறது என்றார்.