Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

90 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு மக்களை ஊக்குவித்த இயற்கை காதலர் முல்லைவனம்!

பெயரிலேயே இயற்கை வாசத்தை கொண்டுள்ள முல்லைவனம், சிறுவயது முதலே செடி வளர்ப்பில் ஆர்வம் கொண்டதால் அதையே தன் வாழ்க்கையாய் ஆக்கிக்கொண்டார். 

90 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு மக்களை ஊக்குவித்த இயற்கை காதலர் முல்லைவனம்!

Thursday September 28, 2017 , 3 min Read

முல்லைவனம், சென்னை விருகம்பாக்கத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை மீதான அன்பினால் விவசாயம் மட்டும் இன்றி சாலைகளில் மரம் நடுவது, மாடித் தோட்டம் அமைத்து தருவது போன்ற சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை வாசிகளுக்கு தண்ணீர் பிரச்சினையே பெரிய பிரச்சனையாக உள்ளது. சென்னை மட்டும் இல்லை தென் தமிழகத்திலும் போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய இயலாமல் மக்கள் மிகுந்த மன வேதனையில் வாடிவருகின்றனர். நீர் வறட்சி ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் தான் அரசாங்கமும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

image


“சாலை ஓரங்களில் மரம் நடுவது, வீட்டில் தோட்டம் அமைப்பது, போன்ற செயல்களால் மழை வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதை ஏன் யாரும் பின்பற்ற மறுக்கிறார்கள் என்று நினைக்கும் போதுதான் மனம் வேதனை அடைகிறது,“ என்றார் முல்லைவனம்.

முல்லைவனம் பின்னணி மற்றும் இயற்கை மீதான ஆர்வம்

சிறுவயதிலிருந்தே விவசாயம் மீது ஆர்வம் அதிகமாகவே முல்லைவனத்திடம் காணப்பட்டது. தனது தாத்தாவின் வழிகாட்டுதலின்படி இயற்கை விவசாயம் மீது தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

செடி ஒன்றை நட்டு, அதன் வளர்ச்சியை நாளுக்கு நாள் நேரடியாக பார்க்கும் போது கிடைக்கும் இன்பம், மேலும் பல செடிகளை நட வேண்டும் என்ற ஆசை அனைவரிடத்திலும் எழும்பும். அவருக்கும் அப்படித்தான்.

அதன் விளைவாக, 2008-ஆம் ஆண்டு முல்லைவனம் ’மரக்கன்று வங்கி’ தொடங்கி அதன் மூலம் இன்று வரை 90 லட்சத்துக்கும் மேலான மரக் கன்றுகளை நட்டு உள்ளார். மேலும் அவரின் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பாலும்  பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி உழியார்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

image


“வர்தா புயலின் தாக்கத்தால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வைத்தோம், பல இடங்களுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்தும் உதவி செய்தோம்.”

மேலும் தனது குழுவுடன் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடம், அரசு மருந்துவமனை, அரசு அலுவலகங்களை சுற்றி மரக்கன்றுகளை நட்டுள்ளார் முல்லைவனம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்,

“இரு சக்கர வாகனம் வாங்குவோர்கள் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்க வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனம் வாங்குவோர் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றும், நாம் அசுத்தம் செய்ததை நாமே சுத்தம் செய்ய வேண்டும் என்ற கொள்கையின் ரீதியில் அந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடிருந்தேன்,” என்றார்.

முல்லை வனத்தை அனைவரும் மரக்கன்று வங்கி முல்லை வனம் (Treebank Mullaivanam) என்றே அழைக்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்று கேட்ட போது,

“சிறு வயதில் சின்ன சின்ன பச்சை மரக் குச்சிகளை நட்டு வைத்து சில நாட்களில் அந்த குச்சிகளில் துளிர் விடும். அந்த அழகை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என அந்த ஆர்வமும், என்னைச் சுற்றி உள்ள அனைவரும் அதை காண வேண்டும் என்ற ஆசையும் மிகுந்து இருந்தது. அதேப்போல் என் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் செடி நடச் சொல்லி வற்புறுத்துவேன். அந்த தொல்லை தாங்க முடியாமல் அவர்களும் செடி நட்டு, அதை வளர்ப்பார்கள். மேலும் பலர் என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்வார்கள், ஆனால் அவர்களை தேடிப் பிடித்து அவர்கள் கைகளாலேயே செடியை நட வைப்பேன்,” என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

எந்நேரமும் செடிகள், மரங்களை வைத்து இருப்பதால், அனைவரும் என்னை ட்ரீ பான்க் முல்லைவனம் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதால் ஏற்படும் பயன், இக்கால மக்கள் வாழும் இயற்கை சாரா செயற்கை வாழ்வியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல நற்செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

வருங்கால திட்டம் மற்றும் கனவு

மேலும் தனது அடுத்தக் கட்ட பணியாக இந்தியா முழுவதும் சுமார் ஒரு கோடி வேப்பமரம் விதைகளை விதைக்க உள்ளார். இந்த திட்டத்தை அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று துவக்க உள்ளார். அதற்கான பணியில் முல்லை வனமும் அவரது குழுவும் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்.

image


முல்லை வனம்; பசுமை திலகம் விருது, நம்மாழ்வார் நினைவு விருது, கலாம் சீவரத்தினம் விருது போன்ற பல விருதுகளை பெற்றவர். மோட்டார் வாகனங்கள் மனித வாழ்வுக்கு கிடைத்த மாபெரும் வளர்ச்சி, ஆனால் வளர்ச்சி மட்டுமே முக்கியம் இல்லை, இயற்கையை பாதுகாப்பது அதைவிட முக்கியம் என்பதை உணர்த்தும் முல்லைவனம் போன்றோர் இருப்பதாலேயே சிறு துளி மழையாவது பெய்கிறது எனலாம். 

ட்ரீபான்க் முல்லைவனத்தில் ஃபேஸ்புக் முகவரி