Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Motivational Quote | 'ஓர் அடியில் தொடங்கும் ஓர் ஆயிரம் மைல் பயணம்!'

உங்கள் இலக்கு என்பது ஓர் ஆயிரம் மைல்கள் தொலைவு கொண்டதாக இருந்தாலும், எவ்வித தயக்கமும் இன்றி முதல் அடியை எடுத்து முன்வைப்பதுதான் முக்கியம்.

Motivational Quote | 'ஓர் அடியில் தொடங்கும் ஓர் ஆயிரம் மைல் பயணம்!'

Tuesday June 27, 2023 , 3 min Read

கிமு 6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தாவோ தே சிங்’ (Tao Te Ching) எனும் பண்டைய கால தத்துவ நூலில் சீன ஞானி லாவோ ஸூ (Lao Tzu) என்பவரது தத்துவ சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன. அதில் அவர் கூறிய பல மகா வாக்கியங்களில் ஒன்றுதான் இது:

“A journey of a thousand miles begins with a single step.”

தாவோயிஸத்தின் அடிப்படைக் கொள்கையான இந்த வாக்கியத்தின் தமிழ் வடிவம்:

“ஓர் ஆயிரம் மைல் பயணமே ஓர் அடியை எடுத்து வைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது.”

எந்த ஒரு பெரும் பயணத்துக்கும் அத்தியாவசிய முதல் படி என்பது நாம் எடுத்து வைக்கும் முதல் அடிதான். லாவோ ஸூ-வின் இந்த மகத்தான மேற்கோளானது வாழ்க்கையில் நமக்கு எத்தனை பெரிய பாடங்களைக் கற்பிக்கும் என்பதை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

lao

முதல் அடியின் சக்தி!

வாழ்க்கையில் அனைத்து குறிப்பிடத்தக்க சாதனைகளும் அதற்கான முதல் ஆரம்ப செயலில்தான் தொடங்குகின்றன. ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்வது ஆகட்டும், ஒரு வணிகத்தைத் தொடங்குவது ஆகட்டும் அல்லது உடற்பயிற்சி பயணத்தைத் தொடங்குவது ஆகட்டும் இங்கே முதல் படி பெரும்பாலும் மிகவும் சவாலானதே.

ஏனெனில், இது நம்மை நாம் அதுகாறும் இருந்துவரும் வசதியான நிலைகளை விடுத்து, அதிலிருந்து வெளியேறி அதுவரைத் தெரியாததை எதிர்கொள்ள நம்மைத் தூண்டுவதாகும்.

அதாவது, மிக எளிதாகச் சொல்வது என்றால், நம்முடைய கம்ஃபர்ட் ஜோனை விட்டு விலகி புதிய பாதை நோக்கி அடியெடுத்து வைப்பதாகும். ஆனால், இந்த முதல் அடி அல்லது முதல் படியை எடுத்து வைப்பதற்கான சவால்கள் பெரிது. எவ்வாறாயினும், இந்த முதல் அடியை எடுத்து வைப்பது மிகப் பெரிய சக்தி மிக்கதாகும். ஏனெனில், இது வாழ்க்கை மாற்றப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு தனிப்பட்ட வளர்ச்சிக்கான நமது அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது.

‘தெரியாத’ பயத்தை தெறித்து ஓடவிடுவது எப்படி?

ஏதாவது, ஒரு காரியத்தை புதிய விஷயத்தைச் செய்வது, பரிசோதிப்பது போன்ற விஷயங்களில் நாம் பெரிதும் பயப்படுவது, நமக்குத் தெரியாதது பற்றிய பயமே. இந்த முதல் தடையைக் கடப்பது மிக மிகக் கடினம். இங்குதான் முதல் அடியை எடுத்து வைப்பதில் நமக்கு ஏகப்பட்ட மனத்தடைகளும் தயக்கங்களும் நம்மை பயமுறுத்துகின்றன.

இருப்பினும், நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொண்டு, தொடர்ச்சியான கற்றல் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த பயத்தைப் போக்கி நம்பிக்கையுடன் முன்னேறலாம்.

லாவோ ஸூ-வின் மேற்கோள் ஒவ்வொரு பயணமும் ஓர் அடியுடன்தான் தொடங்குகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், அந்த அடியை எடுத்துக்கொள்வதன் மூலம், முன்னால் இருக்கும் சாத்தியக்கூறுகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நம்மைத் திறந்த மனதுடன் இருத்திக் கொள்கிறோம்.

இலக்குகளை சிறிதாக்குதல்

ஆயிரம் மைல் பயணம் என்ற சிந்தனையே மிக அதிகமானதாகவும், அச்சுறுத்தல் தருவதாகவும் இருக்கும். பயணத்தை மேலும் சமாளிக்கக் கூடியதாகவும் அடையக் கூடியதாகவும் மாற்ற, பெரிய இலக்குகளை சிறிய, செயல்படக் கூடிய படிகளாக உடைத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு தனிப்பட்ட அடியிலும் கவனம் செலுத்துவதன் மூலம், நாம் வேகத்தையும் முன்னேற்றத்தையும் பராமரிக்க முடியும். இறுதியில், நம் கனவுகளை நனவாக்க வழிவகுக்கும்.

சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடுதல்

பயணத்தின்போது வைக்கும் ஒவ்வோர் அடியும் ஒரு சிறிய வெற்றியாகக் கொண்டாடப்பட வேண்டும். முன்னேற்றத்தை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் நம்பிக்கையை வளர்க்கவும், நேர்மறையான பழக்கங்களை வலுப்படுத்தவும், ஊக்கத்தை பராமரிக்கவும் உதவுகிறது. சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது, இறுதி இலக்கை மட்டும் நிர்ணயிக்காமல், முன்னோக்கு உணர்வைப் பேணவும், பயணத்தையே அனுபவிக்கவும் நமக்கு கைகூடச் செய்யும்.

எதிர்த்துப் போராடுதலும் விடாமுயற்சியும்

வாழ்க்கைப் பயணம் என்பது சாதாரணமல்ல. வாழ்க்கையின் போக்கில் ஒவ்வொரு பயணமும் இலக்கும் சவாலானதே. ஆகவே, தோல்விகளும் தடைகளும் ஏற்படவே செய்யும். பயணத்தைத் தழுவுவது என்பது இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான எதிர்த்துப் போராடுதல் மற்றும் விடாமுயற்சியை வளர்ப்பதாகும்.

பின்னடைவுகளில் இருந்து கற்றுக்கொண்டு, அதனையே வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் தொடர்ந்து முன்னேறி, ஒரு நேரத்தில் ஒரு படி என்பதாக நமது இலக்குகளை படிப்படியாக அடைய முடியும்.

லாவோ ஸூ-வின் மேற்கோள்: ’ஆயிரம் மைல் பயணம் என்பது ஒரே அடியில் தொடங்குகிறது’. அதாவது, முன்னால் இருக்கும் தடைகளைப் பொருட்படுத்தாமல், அந்த முதல் படியை எடுத்து வைப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டி நமக்கு ஊக்கமளிக்கிறது.

பயணத்தைத் தழுவுவதன் மூலம், நிர்வகிக்கக் கூடிய படிகளாக இலக்குகளை சிறிது சிறிதாக்குவதன் மூலம் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதன் மூலம், போராடுதல் குணத்தை வளர்ப்பதன் மூலம், நாம் நமது கனவுகளை அடைவதோடு தனிப்பட்ட வளர்ச்சியின் மாற்றும் சக்தியை அனுபவிக்க முடியும்.

எனவே, அந்த முதல் அடியை எவ்வித தயக்கமுமின்றி எடுத்து வைத்து பயணத்தைத் தொடங்குங்கள்!

மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்


Edited by Induja Raghunathan